குழந்தைக்கு மூக்கில் இரத்தம் வந்தால்

ஹாய், ஹாய்

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

உறவினர் வீட்ல, அவங்களோட ஆறு வயசு பெண் குழந்தைக்கு, திடீர்னு மூக்கில ரத்தம் வந்துச்சு. ரத்தம்னா, நிறைய வந்தது. இம்மீடியட்டா, பக்கத்துல இருந்த டாக்டர்கிட்ட காமிச்சாங்க. பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டார் அவர்.

நைட் சாப்பிட்டுட்டு இருக்கறப்ப, திடீர்னுதான் வந்தது. குழந்தை அழ ஆரம்பிச்சுடுச்சு. வாயிலும் கூட ரத்தம் வந்துச்சு. ரொம்ப பயந்துட்டாங்க. டாக்டர் என்ன சொன்னார்னா, மூக்கில் ரத்தம் வந்தப்ப, குழந்தை முகத்தை உயர்த்தி வச்சிருந்திருப்பா, அந்த டைம்ல, மூக்கில இருந்து, தொண்டைக்கு ரத்தம் போனதால, வாயிலும் வந்திருக்கும், அவ்வளவுதான்னு சொல்லிட்டார்.

இதுக்கு முன்னாலயும் 1-2 டைம், இது மாதிரி ரத்தம் வந்ததாம், ஆனா, அப்பல்லாம் நிறைய வரல, சில ட்ராப்ஸ்தான் வந்துச்சு. ஈ.என்.டி. டாக்டர், சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் எல்லார்கிட்டயும் காமிச்சாங்களாம். நத்திங் டு வொரி, இது சகஜம்தான், அப்படின்னு சொல்லிட்டாங்களாம்.

அகெய்ன், இப்ப டாக்டர் ஒரு டெஸ்ட் எடுக்க சொல்லியிருந்தார். அதாவது, ப்ளட் ப்ளீடிங் டைம், அப்புறம் ப்ளட் க்ளாட்டிங் டைம்(ரத்தம் உறையறதுக்கு ஆகிற நேரம்) இது ரெண்டும் டெஸ்ட் பண்ணினாங்க. நார்மல்தான்.

எனக்கு என்னன்னா, நம்ம அறுசுவை ஃப்ரெண்ட்ஸ் இதப் பத்தி, அவங்களுக்கு தெரிஞ்ச விஷயம் இங்க ஷேர் பண்ணினாங்கன்னா, மத்தவங்களுக்கும் ஹெல்ப்ஃபுல்லா இருக்குமேன்னு தோணிச்சு.

உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள் இங்க சொன்னீங்கன்னா, எல்லோருக்கும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.

நானும் அப்பப்ப வந்து பாக்கறேன், தாங்க்யூ.

இப்படி நிறையக் குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். திடீர்னு கொட்டோ கொட்டென்று கொட்டும். டெஸ்க் புக்ஸ் எல்லாம் கொட்டி இருக்கும்.

//மூக்கில் ரத்தம் வந்தப்ப, குழந்தை முகத்தை உயர்த்தி வச்சிருந்திருப்பா,// ம். நிமிர்த்தி வைச்சா சுவாசக் குழாய்க்குள்ளும் போகலாம். அப்படியே குனிஞ்சு முக்கை அழுத்திப் பிடிச்சுட்டு இருந்தா சில நிமிடங்கள் கழிச்சு நின்றுருது.

செக் பண்ணி நார்மல் என்று சொல்லிட்டாங்க என்றால் யோசிக்க வேண்டாம். இங்க செக் பண்ணவே மாட்டாங்க. இந்த விஷயம் அந்த அளவு நார்மல்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்