பிரசவ அனுபவம் if, share pls

குழந்தை பெற்றவர்கள்,தங்கள் அனுபவங்களை பரிமாறினால் என்னைப் போல் முதல்முறை தாயானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி.

Sister y u didn't come to mail chating pa

//lesana thanga kudiya alavuku pain irukum.// என்று தேவி சொல்லி இருந்ததைப் படித்தேன். 'இருக்கும்' என்பது இல்லை, இருக்கலாம். எனக்கு வலி துளி கூட இருக்கவில்லை. ஒவ்வொருத்தர் உடம்பு ஒரு மாதிரி. இங்க உள்ளதெல்லாம் சும்மா படிச்சு வைங்க. படிச்சிருக்கிறது போல தான் உங்களுக்கு ஆகும் என்று நினைச்சுட்டிருக்காதீங்க. சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி நடந்துக்கங்க.

‍- இமா க்றிஸ்

//Velia porapo.... asingama aidumo nu bayama iruku.// :-) என்னெல்லாம் யோசிக்கிறீங்க பூரணி! சும்மா சும்மா யோசிக்கப் படாது இப்ப. ஹாப்பியா இருங்க. எமர்ஜன்ஸில அசிங்கம்லாம் கிடையாது. பிரசவம் ஸ்டைலா க்ளீனா நடக்கிற விஷயம் இல்லை. சுற்றி இருக்கிறவங்க உங்களை அசிங்கமாகப் பார்க்கவே மாட்டாங்க, ஒரு தாயாகத்தான் பார்ப்பாங்க. இயற்கையாக நடக்கிற விஷயங்களைத் தவிர்க்க முடியாது. நீங்க தனியாக இருக்கும் சமயம் ஏதாவது என்றால் எதிர்ப்படுபவர் யாராக இருந்தாலும் அவரிடம் தயங்காமல் உதவி கேளுங்கள். வெட்கம் பார்க்கக் கூடாது. இதில் தப்பு எதுவும் இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்