adivice me sisters

Sister enaku help pannunga plz plz enaku age 30 avithu marage agi 3 varusam avuthu idaila 1 time consive agi sariyana valarchi ilanu abort panitanga then ipa last montha 17 la enaku date
Ana nal thalli pochu 29 m date la oru accident nan adipattu periods agiden en husban last month than dubai ponar k 1 year kalichu parthukalam nu
Manasa thethikiten but ipa problm enana last periods enaku stop agave ila iniku varai drbkita ponen ijection tablet um thandhar ana use agala net la search panen athu menophause symptoms am
Enaku yuir pona mari iruku enaku help pannunga sisters nan sethu poratha thavira vera valiye illaya
Enaku baby kidaikkatha

Enna soldringa neenga. Ellathukum sucide dhan mudiva? Docter edhum sollama net la search panadha vechi epdi neenga decide panlam. Neenga thodarndhu medicine eduthukonga. Palan illana marubadium doctr kita ponga. Illana vera docter ah kuda paklam. Medical feild evlo develop agirku elathukum treatment irruku. First nalla dctr ah pathu unga problem ennanu therinjikonga. Sucide pathilam ini yosikadhinga. Dhiriyama irrunga.. Baby kandipa kedaikum

Ramya

இப்ப இங்க நீங்க போட்ட பதிவு உதவி கேட்டு வாழ வழி தேடியா? அல்லது மரண வாக்கு மூலமா?? எனக்கு டவுட்டா இருக்குங்க. சுசைட் பண்ணிக்கிறதா இருந்தா பண்ணிக்கிறதுக்கு முன்னாடி எங்களுக்கு சொல்றதை விட உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் ஒரு குடும்பம் கணவன் எல்லாம் இருக்காங்களே... அவங்ககிட்ட சொல்லிட்டு பண்ணுங்க. எங்ககிட்ட சொன்னா என்ன ஆவ போகுது?

சரி அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லுங்க... செத்துட்டா குழந்தை பிறந்துடுமா? குழந்தை மட்டும் தான் வாழ்க்கையா? இத்தனை வருஷம் குழந்தை இல்லாம எப்படி வாழ்ந்தீங்க? திருமணத்துக்கு முன், திருமணம் ஆகி 3 வருடங்கள்? எப்படிம்மா வாழ்ந்தீங்க? இதே அறுசுவையில் 10 வருடத்துக்கும் மேலா குழந்தை இல்லாத சந்தோஷமான தம்பதிகள் எத்தனையோ பேர் இருக்காங்க... உங்க பதிவை பார்த்து அவங்க எல்லாம் வருத்தப்படும்படியா நம்பிக்கை இழக்கும்படியா பண்ணாதீங்க. ஏன்னா இத்தனை வருஷம் ஆகியும் என்னைக்காவது அந்த பாக்கியம் கிடைக்கும்னு நம்பிகிட்டு தான் அவங்க எல்லாம் மகிழ்ச்சியா வாழறாங்க.

30 வயசு தானே ஆச்சு? எனக்கு தெரிந்த பெண்ணுக்கு 32 வயதில் தான் திருமணமே ஆச்சு. அழகா ஒரு பிள்ளையை 34 வயதில் பெற்றெடுத்திருக்கிறார். என்னை விடவும் ஆரோக்கியமா இருக்காங்க. மெனோபாஸ் அது இதுன்னு நெட்ல படிச்சதை வெச்சு சாக முடிவெடுத்த உங்களுக்கு ஸ்பெஷலா அவார்டு தான் கொடுக்கணும். நெட்ல எனக்கு உடம்புல இருக்க பிரெச்சனை எல்லாம் சொன்னா அது சொல்லும் நோய்களுக்கான லிஸ்ட் படிச்சா இன்நேரம் நான் உயிரோட இருக்குறதே எனக்கு ஆச்சர்யம் தான். அவ்வளவு பெரிய பட்டியல் வருது... எல்லா வியாதிக்கும் என் சிம்ப்டம்ஸ் 95% மேச் ஆகுது. அதுக்காக இருக்கக்கூடிய நாளை வாழாம சீக்கிரமே பயந்துகிட்டு சாகவா முடியும்? ம்ஹூம்... எந்த புத்திசாளியும் அப்படி பண்ண மாட்டாங்க. அதுவும் வெறும் நெட்ல படிச்சதை வெச்சு!!! உங்க மேல எனக்கு பாவமா இல்ல... கோவம் தான் வருது. நல்லா திட்ட வருது.

இப்படிலாம் கூட முட்டாள் தனமா இந்த காலத்தில் இருப்பாங்களான்னு இருக்கு. யோசிக்கவே இல்லையா நீங்க?? ஆக்சிடண்ட் ஆனப்போ கரு இருந்து தானே சிதைந்தது? அப்படின்னா அப்ப வரைக்கும் கருதறிக்கும் தகுதி இருந்தது தானே? அதுக்குள்ள எப்படி மெனோபாஸ் பிள்லை உண்டாகாதுன்னு முடிவு பண்ணீங்க? லாஜிக்கே இல்லைங்க. முதல்ல பீரியட்ஸ் அந்த ஆக்சிடண்ட்ல இருந்து நிக்கலன்னா அது என்ன பிரெச்சனைன்னு டாக்டர் போய் பாருங்க. இன்ஃபெக்‌ஷன், ஹீமோக்லோபின் குறைபாடு இருந்தாலும் பீரியட்ஸ் நிக்காது. வேறு மாதிரியாக ஏதும் உள்ளே அடி தாக்கி இருந்தாலும் இந்த பிரெச்சனை ஏற்படும். அதை சரி பண்ணா எல்லாம் சரி ஆகும்.

இந்த டாக்டர் கொடுத்த மருந்தில் நிக்கலன்னா நல்ல பெரிய மருத்துவமணையா பார்த்து முழு பரிசோதனை செய்துக்கங்க. இன்னும் ஒன்னும் சொல்றேன்... 30 வயதில் மெனோபாஸ் அறிகுறிகள் தெரிந்தாலும் அது முழுமையா நிக்க 45 வயதை தாண்டிடும். அப்படி முழுசா நிக்கும் வரை பிள்ளை உண்டாகும் சாத்திங்கள் அதிகம்னு தான் அது வரை எல்லாரும் கருத்தடை முறைகளை ஃபாலோ பண்றாங்க. 30 வயதில் இந்த அறிகுறிகள் துவங்கியதுமே பிள்ளை நிக்காதுன்னா இன்னைக்கு காப்பர் டி பற்றியும் மற்ற கருத்தடை முறை பற்றியும் இத்தனை பேர் சந்தேகம் கேட்டு ஹாஸ்பிடல்கு அலைய மாட்டாங்க. என் தாயார் மெனோபாஸ் துவங்கியதில் இருந்து 15 வருடம் அதன் சிம்ப்டம்ஸால் அவதிப்பட்டதாகவும், அதன் பின் தான் நின்றதாகவும் சொல்லி கேட்டிருக்கிறேன். எனக்குமே துவங்கிவிட்டது, ஆனால் இன்னுமே என்னால் கரு தரிக்க முடிகிறது.

எந்த மருத்துவரையும் கேட்காமல் இணையம் சொல்லும் அத்தனை தகவலையும் நம்பும் அன்பு கிருஷ்ணவேனி... நான் என் அனுபவத்தையே சொல்லி இருக்கிறேன், நம்பலாம் தானே? 40 வயதுக்கு மேல் பிள்ளை பெற்றவர்களை கூட எனக்கு தெரியும். நலமாகவே பெற்றார்கள். இன்றைய மருத்துவம் ரொம்பவே முன்னேரி இருக்கு... உங்களுக்கும் குழந்தை பாக்கியம் நிச்சய்ம் கிட்டும்.

ஆனா அதுக்கு மனசுல நம்பிக்கை வேணும்... சாகறேன் சாகறேன்னு குதிச்சா எந்த ஆத்மா உங்க வயிற்றில் உண்டாக துணியும்? ஒரு பாசிடிவ் எனர்ஜி இல்லன்னா வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்க இயலாது. உங்க கணவர் வரும் முன் உங்க உடம்பில் எதனால் இந்த பிரச்சனை என்று முழு பரிசோதனை செய்து சரி செய்து கொண்டு ஆரோகியமா மகிழ்ச்சியா உங்களை வெச்சுக்கங்க. அடுத்த வருடமே நான் கருவுற்றிருக்கிறேன்னு இங்க தலைப்பு போடுவீங்க. புரிஞ்சுதா? புரியல நான் இப்படி தான் அடம் பிடிப்பேன்னு சொன்னா... நாங்க யாருங்க, உங்களுக்கு அட்வைஸ் பண்ணன்னு நினைச்சுட்டு போறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல தலைப்பை மாற்றுங்க... இது போல் மரண வாக்குமூலம் மாதிரி எல்லாம் பலரும் பார்வையிடும் தளத்தில் தலைப்பிடுவது, உங்களை போல் பெண்ணுக்கு நல்லதா? பார்க்கவே என்னவோ போலிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi..enagu periad aagi inaigu 50 days assu. Enagu 48 daygu oru murai period waruthu. ..yesterday home test panninan negative wanthusu. ..nan eppo home test panna Wenem. ..period warawum.enooda hasband dupaai pooga poorar....nan enna panna?

இப்படி எல்லாம் துளி கூட‌ யோசிக்காதிங்க‌..வணி அக்கா சொன்ன மாரி நெட் லா போட்டு இருக்குறதா பாத்தா எனக்கு அப்ப்டிதான் விடிந்தா ஏதாவது ஒன்னு சொல்லிட்டுதான் எந்திரிப்பேன் இங்க‌ வலிக்கு அங்க‌ வலிக்கு இந்த‌ பிரச்சனையாக‌ இருக்குக்குமோனு வந்து நெட் பாத்து பெரிய‌ நோய்க்குரிய சிம்டம்ஸா போட்டு இருக்கும் பாத்து நொந்து போய்ருவேன் அலுவேன்..அப்புறம் விட்ட‌ பிறகு செ இதுக்கு போய் எவ்வளவு பயந்தோம் நு நெனைப்பேன்..இப்பையும் அப்ப்டிதான் இருந்தாலும் செத்து போய்ருவேன் அந்த‌ மாரி எல்லாம் யோசிக்காதிங்க‌ தயவு செய்து...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Sorry sister ipdi aheading podathuku ungala pola anbana yosana solla enaku near la yarum illa confusion la apdi yelutjitten enakum neenga sonna karuthukkal 100 percentage udanpadu irukku enna wish pannunga kulandhainala nan confuse agiten athan ipdi thappa behave panniyen

வனி சொன்னதைத்தான் நானும் சொல்ல நினைக்கிறேன். நீங்கள் சும்மா ஒரு பேச்சுக்கு அப்படி எழுதி இருந்தாலும் கூட, பல பிரச்சினைகளோட இங்க தீர்வுக்கு வழி தேடியும் ஆறுதலுக்காகவும் வரும் பல குட்டிப் பெண்கள் இருக்காங்க. சில விஷயங்கள் தொற்று வியாதி போல. மற்றவர்கள் மனதைப் பாதிக்கும். முதலில் தலைப்பை மாற்றுங்க.

//enaku age 30 avithu// என் தோழிகள் சிலருக்கு 30க்கு மேலேதான் மணமே ஆகிற்று. குழந்தைகள் இருக்கிறார்கள். முதல்ல நீங்க 2 தடவை கருத்தரிக்கிறீர்கள். அப்படி இல்லாமலிருந்தால்தான் யோசிக்க வேண்டும்.

//oru accident nan adipattu periods agiden// முன்னாலயும் ஒரு த்ரெட்ல சொல்லியிருந்தீங்க போல. //last periods enaku stop agave ila iniku varai// மூன்று நான்கு நாட்களுக்கு மேல் ஆகும் போது போய்க் காட்டியிருக்க வேண்டும். அனீமிக்கா இருக்கிறீங்களோ என்னவோ! //ijection tablet um thandhar// டாப்லட்டை ஒழுங்கா போடுறிங்களா? //ana use agala// டாக்டர் மாஜிஷன் இல்லை. ஒரு ஊகத்துல கொடுக்கிறது சரியாக இல்லாமலிருந்திருக்கலாம். திரும்பப் போய்க் கேட்டிருக்க வேண்டும் நீங்கள். //net la search panen// அது சரி! எல்லாத்துக்கும் நெட்லதான் சர்ச் பண்றீங்களா? நெட்ல போடுறவங்க எல்லாம் புத்திசாலிகள், விடயம் தெரிந்தவர்கள் என்று நம்புகிறீர்களா? //athu menophause symptoms am// :-) ஹெவி ப்ளீடிங் - மிஸ்காரியேஜ், அபார்ஷன், பிரசவம், விபத்து, அனீமிக்கா இருக்கிறது, இன்னும் பல காரணங்களோட வரலாம். மெனோபோஸ் காலத்துலயும் வரும். ஆனால், மெனோபோஸ் சிம்ப்டம்ஸ் இருக்குன்னு உங்க ப்ளட் டெஸ்ட் பார்த்து டாக்டர் சொல்லல இல்ல! விபத்துத்தான் காரணம் என்று உங்களுக்கே நிச்சயம் தெரியும் போது ஏன் இந்த மனக்குழப்பம்?

எனக்கு என்ன தோணுது என்றால், நீங்க திரும்பவும் டாக்டர்ட்ட போகணும். போய் ப்ளீடிங் பற்றி மட்டும் சொல்லாமல், நீங்க பண்ணின கூகுள் ரிசர்ச், அதன் காரணமாக இப்ப சொன்ன செத்துப் போற கதை எல்லாமே அவங்கள்ட்டயும் கட்டாயம் சொல்லணும். ஒழுங்கா தூங்குறீங்களா? இல்லைல்ல! எல்லாமே சொல்லுங்க. எல்லாவற்றுக்கும் சேர்த்து மருந்து எடுக்கலாம். எடுக்கணும். மாத்திரைகளை வீட்டில் கொண்டுவந்து வைத்துவிட்டால் மட்டும் குணமாகாது. ஒழுங்காக சாப்பிட வேண்டும்.

இப்போ யார் வீட்டில் இருக்கிறீங்க? அம்மா வீட்டிலா அத்தை வீட்டிலா? உங்க மனப் பாரத்தை அருகிலிருக்கிற யார்ட்டயாவது இறக்கி வைங்க. உங்கள் பிரச்சினை... உங்கள் கணவர் உங்களை விட்டுப் போனதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. அரை மனதாக அனுப்பி விட்டுக் குழம்புகிறீர்கள். போன் பண்ணி, உங்க பயத்தைப் பற்றிப் பேசுங்க. முடிஞ்சா திரும்ப வரச் சொல்லுங்க.

//Enaku baby kidaikkatha// யார் சொன்னாங்க கிடைக்காது என்று? உங்க டாக்டரா? என் கைல மாட்டினீங்க.... நங்க்னு குட்டிருவேன். கர்ர்... நீங்க தனியா பெத்துக்க முடியாதுல்ல! யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காம, உங்க ஆளை திரும்ப வரவைங்க. எல்லாம் சரியாகும்.

ஊர்ல இருந்த சமயம் கேள்விப்பட்ட நிகழ்ச்சி ஒன்று... ஒரு 50 வயது அம்மா, எல்லா சராசரிப் பெண்களையும் போல பீரியட்ஸ் நின்று போச்சு. ஹாயா இருந்திருக்காங்க. சில மாசங்கள் கழிச்சு விடாமல் தலைச்சுற்றல், வாந்தி என்று ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க. அதன் பின்னால்தான் அவங்க கர்ப்பமா இருக்கிறது தெரிய வந்திருக்கு.

எனக்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்திருக்கு. 'சிம்ப்டம்ஸ்' இருக்குன்னு என் ப்ளட் டெஸ்ட் பார்த்து டாக்டர் சொல்லியிருந்தாங்க. (ப்ளட் டெஸ்ட்டுக்கு முன்னாலயே பல வருஷம் 'சிம்ப்டம்ஸ்' இருந்திருக்கு. :-) மொத்தமான 15 வருஷம்) இத்தனைக்கும் பிறகு 50 வயசுல, " You can still conceive, தெரியும்ல!" என்று சிரித்துக் கொண்டே டாக்டர் எச்சரித்தது நினைவுக்கு வருகிறது. :-) யோசிக்காதீங்க. எங்களையும் நம்ப வேணாம். பயமா இருந்தா டாக்டர்ட்ட போய் பேசிட்டா உண்மை எதுன்னு தெரிஞ்சுரப் போகுது.

ஒரு முப்பது, நாற்பது வருஷம் முன்னால இருந்த ஜெனரேஷன் வேற. நீங்கல்லாம் இப்பிடி யோசிக்கலாமா?

‍- இமா க்றிஸ்

Yes sister enna nalla kuttunga apothan ipdi yosikka matten ini very thanks sister nan amma v2layum illa mamiyar koodavum illa alone athan enaku ivlo confusions varithu love marage v2la innum accept panala

தலைப்பை மாத்திட்டீங்க. நல்ல பொண்ணு. :-)

தனியா இருக்கிறீங்களா? அதான் இத்தனை குழப்பமா? ம்... உங்கள் கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு நீங்களும் கூடப் போய் இருக்க முடியுமா என்று பாருங்களேன்.

நெட்ல படிக்கிறதை எல்லாம் ஒரு அளவுக்கு மேல எடுத்துக்க வேணாம். தனிய இருக்கிற சமயம் உடம்புக்கு என்ன பிரச்சினை என்றாலும் உடனுக்குடன் கவனிக்கணும். கூடிப் போச்சுன்னா யார் பார்ப்பாங்க! சிரமம் இல்லையா! பத்திரமா இருங்க.

‍- இமா க்றிஸ்

Hi friends jarumee enooda guesitiangu answers panna madeengala. ..ine nan arusuwai guesitiangu warala...

மேலும் சில பதிவுகள்