adivice me sisters

Sister enaku help pannunga plz plz enaku age 30 avithu marage agi 3 varusam avuthu idaila 1 time consive agi sariyana valarchi ilanu abort panitanga then ipa last montha 17 la enaku date
Ana nal thalli pochu 29 m date la oru accident nan adipattu periods agiden en husban last month than dubai ponar k 1 year kalichu parthukalam nu
Manasa thethikiten but ipa problm enana last periods enaku stop agave ila iniku varai drbkita ponen ijection tablet um thandhar ana use agala net la search panen athu menophause symptoms am
Enaku yuir pona mari iruku enaku help pannunga sisters nan sethu poratha thavira vera valiye illaya
Enaku baby kidaikkatha

:-) நீங்க யாருமே இல்லாத நேரம் வந்திருக்கீங்க. //.ine nan arusuwai guesitiangu warala...// :-) இன்னும் நேரம் இருக்கு அறுசுவைக்கு ஆட்கள் வர. இது பொதுவா இமா மட்டும் உலாவும் நேரம். இப்போ நீங்க கூட்டுச் சேர்ந்திருக்கீங்க.

எனக்கு உங்க வயசு இல்ல. நான் இந்தத் துறைலயும் இல்ல. பதில் தெரிஞ்சவங்க கண்ணுல படும் வரை பொறுமையா இருங்க.

‍- இமா க்றிஸ்

கிட்டத்தட்ட‌ நாற்பது ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூரில் என் சின்ன‌ வயதில் நடந்த‌ உண்மை நிகழ்ச்சி.
அடுத்த‌ தெருவில் வாழ்ந்த‌ தம்பதியர் அறுபது கல்யாணம் முடிந்த‌ தம்பதியர்.
அவர்களின் மகனுக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தது.
அந்த‌ அம்மையார் கொஞ்சம் குண்டு. இந்த‌ நிலையில் அவர்கள் வயிறு வர‌ வர‌
பெருத்து வர‌ நாங்கள் எங்கள் வயது ஒத்த‌ பெண்கள் அவர்களை ரொம்பவே கிண்டலடித்தோம், எவர் ப்ர்க்னென்ட் நெவெர் டெலிவரி என்றெல்லாம்.
திடீரென்று ஒரு நாள் வயிற்று வலி என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த‌ பிறகு
எல்லோரும் திகைத்துப்போகும் வண்ணம் வெகு அழகாக‌ ஒரு பெண் குழந்தை
பிறந்தது.கிட்டத்தட்ட‌ அறுபது வயதில் எந்த‌ அறிகுறியும் தெரியாமல் குழந்தை
உண்டானதே அறிந்து கொள்ளாமல் ‍‍‍‍‍=== இதை அந்த‌ வயதில் சிந்தித்துப் பார்க்கக்கூட‌ எங்களுக்குத் தெரியவில்லை.
இதே போல் மதுரையில் என் தந்தையின் நண்பர் மணமாகி நாற்பது
ஆண்டுகள் ஆகியும் குழ்ந்தை இல்லை என்றதால் இரண்டாம் திருமணம்
(1940 க்கு முன்பு) செய்து கொண்டார். ஆனால் குழந்தை பிறந்ததோ முதல் மனைவிக்கு அவரின் அறுபதாவது வயதில். இறைவன் அருள் இருந்தால் இவ்வுலகில் நடவாதது எதுவும் இல்லை. மணமாகி மூன்றே ஆண்டுகள் தானே ஆகிறது. இயல்பாக‌ நடந்த‌ தடங்கல்கள், தேவையற்ற‌ மன உளைச்சல்.
பிராணிகள் மேல் அன்பு உள்ளவராக‌ இருந்தால் வளர்க்க‌ முடியுமான சூழல்
இருக்குமானால் ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்த்துங்கள்.
கட்டாயம் உங்கள் மன இறுக்கம் குறையும், கருக்காத்த‌ அம்மனை வழிபடுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் மழலையின் சிரிப்புச் சத்தமும், மழலையின் குறுகுறுவென்று நடந்து வரும் கால்சதங்கை ஒலி கேட்கவும்
உங்களுக்காக‌ இறைவனை வேண்டுகிறோம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எணக்கு ஆறதலாவும் அறிவரையும் அன்பா சொன்னிங்க நல்லவங்க தான் உலகத்துல அதிகம் னு புரிய வைக்குது இந்த தளம்

//பிராணிகள் மேல் அன்பு உள்ளவராக‌ இருந்தால் வளர்க்க‌ முடியுமான சூழல்
இருக்குமானால் ஏதாவது ஒரு செல்லப்பிராணியை வளர்த்துங்கள்.
கட்டாயம் உங்கள் மன இறுக்கம் குறையும்,// பூங்கோதை கொடுத்திருக்கிறது சூப்பர் ஐடியா. பலருக்கு செல்லப் பிராணிகள் வளர்க்க ஆரம்பித்த பின்னால கருத்தரிச்சது தெரியும். தனிய இருக்கிறீங்க. உங்களுக்கு ஒரு துணை போலவும் இருப்பார். வளர்த்துப் பாருங்களேன்.

‍- இமா க்றிஸ்

அன்பு தோழி, இந்த உலகத்திலே நிறைய நல்லது உண்டு. நமக்கு எடுக்க தான் தெரியல! நெட்ல தேட எவ்வளவு விஷயம் இருக்கு. தெய்வ நம்பிக்கை இருந்தால் எதும் மந்திரம் போல் தேடி கேளுங்க. பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும். க்ராப்ட் வேலை ஆர்வம் இருந்தால் அது சம்பந்தமா தேடுங்க. எத்தனையோ இருக்க கண்னை மூடிக்கிட்டு உலகம் இருண்டு போச்சு சொல்றதுல அர்த்தம் இல்ல. Open your eyes and enjoy the world around you! You will be excited about the creations!

Dhana

மேலும் சில பதிவுகள்