கடி பக்கோடி

தேதி: May 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பக்கோடா செய்ய :
கடலை மாவு - ஒரு கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சமையல் சோடா - சிறிது
உப்பு - தேவையான அளவு
கடிக்கு :
தயிர் - ஒரு கப் (கடைந்தது)
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
தாளிக்க :
காய்ந்த மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
எண்ணெய், சீரகம், பெருங்காயத்தூள் - தேவையான அளவு


 

பக்கோடா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பொரித்து எடுக்கவும்.
கடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவையை ஊற்றி 3/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கலவை கொதித்ததும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் பொரித்த பக்கோடாவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சுவையான கடி பக்கோடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்யாசமா இருக்கு. சூப்பர்.

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &டீம் நன்றி

Be simple be sample

பாலா இது பஞ்சாபி ஸ்டைல் மோர்குழம்பு.தான்க்யூப்பா.

Be simple be sample

அது என்னம்மா கடி பக்கோடி தெரியவில்லைன்னு வாயில என்ன பெயர் நுழையுதே அது வைச்சிட்டு பஞ்சாபி யுபின்னு சொல்லுட்டு..

பட் ரெசிபி சூப்பர்மா..கலக்கல்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹா ஹா ஹா. இது சரியான நேம்தான் ரேவ்.தான்க்யூ

Be simple be sample

மோர் குழம்பில் மிளகாய் தூள் சேர்க்கலாமா ரேவதி, நல்லாயிருக்குமா? பக்கோடா மீதி வந்தால் செய்திடலாம் போலா :)

சேர்க்கலாம் வாணி.தயிர்ல கொஞ்சம் கடலைமாவு சேர்க்கறதால தயிர் கரைச்சு கொதிக்கும் போது திரியரது இல்ல. அதனால சேர்க்கறது பிரச்சனை இல்ல . ஆமா ஈசி குழம்பு. தான்க்யூ

Be simple be sample