சாட்டின் ரிப்பன் ப்ளவர் - பொதுவான கைவினை - அறுசுவை கைவினை


சாட்டின் ரிப்பன் ப்ளவர்

புதன், 13/05/2015 - 12:18
Difficulty level : Easy
4.083335
12 votes
Your rating: None

 

  • சாட்டின் ரிப்பன் - விரும்பிய 3 நிறங்கள்
  • கத்தரிக்கோல்
  • ஊசி மற்றும் நூல்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3 நிற சாட்டின் ரிப்பனில் ஏதேனும் ஒரு ரிப்பனை 7 செ.மீ அளவிலும், அடுத்தடுத்து 5 செ.மீ மற்றொன்று 3 செ. மீ என்ற அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒவ்வொன்றிலும் 14 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஊசியில் நூலை நீளமாக கோர்த்துக் கொண்டு முடிச்சு போட்டு எடுத்துக் கொள்ளவும். முதலில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய அளவில் உள்ள ப்ரவுன் நிற ரிப்பனின் ஒரு முனையை கோர்க்கவும். அதேப் போல் அடுத்து மஞ்சள் நிற ரிப்பனையும் நீல நிற ரிப்பனையும் கோர்க்கவும்.

அதன் பிறகு முதலில் இருக்கும் நீல நிற ரிப்பனின் மற்றொரு முனையை எடுத்து ஊசியில் கோர்க்கவும், அதைப் போல் அடுத்து மஞ்சள் நிற ரிப்பனையும், ப்ரவுன் நிற ரிப்பனையும் கோர்க்கவும். இப்போது பார்க்க ஒரு இதழ் போல இருக்கும்.

அடுத்து மீண்டும் முதலில் கோர்த்தது போலவே ஒவ்வொரு ரிப்பனாக கோர்த்து இதழ் போல செய்யவும்.

இதைப் போலவே கோர்த்துக் கொண்டே வரவும். கோர்த்த இதழ்களை நூலின் நடுப்பகுதியில் வைக்கவும். அப்பொழுது தான் பிரியாமல் இருக்கும்.

ஒவ்வொரு நிறத்திலும் 14 துண்டுகளையும் கோர்த்து 14 இதழ்கள் வந்ததும் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் நூலை இணைத்து முடிச்சு போடவும். ரொம்ப இழுத்து இறுக்கமாக முடிச்சு போட கூடாது.

நடுவில் ஏதேனும் ஸ்டோன் வைத்து ஒட்டி அலங்கரிக்கவும். அழகிய சாட்டின் ரிப்பன் ப்ளவர் தயார். இந்த பூவை ஹேர் க்ளிப்பில் வைத்து ஒட்டி குழந்தைகளுக்கு வைக்கலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..லேஸ் பிளவர் சூப்பர்

லேஸ் பிளவர் ரொம்ப‌ அழகா இருக்கு,
கலர் நச்சுனு செலக்ட் பண்ணிருக்கீங்க‌ ,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

லேஸ் ப்ளவர்

அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

லேஸ் ப்ளவர்

அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

சாட்டின் ரிப்பன் பூ

ரொம்ப அழகா இருக்கு. பார்க்க பேப்பர் க்வில்லிங் பூ போல இருக்கு.

‍- இமா க்றிஸ்

satin ribbon flower

It's really simply supperb