மல்லி காரச் சட்னி

தேதி: May 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கொத்தமல்லி - ஒரு கட்டு
புதினா - ஒரு கைப்பிடி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 8
மிளகு - 6
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலம் - 2
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

கொத்தமல்லி மற்றும் புதினாவை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி பட்டை, ஏலம், மிளகு, பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் இவையாவையும் போட்டு அதோடு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.
சுவையான மல்லி காரச் சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்