மீன் குழம்பு - 2

தேதி: May 20, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மீன் - அரை கிலோ
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய் வற்றல் - 15
தனியா - 2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சரிசி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கழுவிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து கொள்ளவும்.
மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், பச்சரிசி, மிளகு இவற்றை லேசாக வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த மசாலாவைப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து கெட்டியானதும் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்