புடலங்காய் ஊறுகாய்

தேதி: May 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. துஷ்யந்தி அவர்கள் வழக்கியுள்ள புடலங்காய் ஊறுகாய் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

பொடியாக நறுக்கிய பிஞ்சு புடலங்காய் - 2
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடியளவு
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (வற்றல்) - 2


 

தேவையான‌ பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய புடலங்காயை போட்டு வதக்கிக் கொள்ளவும் . புடலங்காய் வதங்கியதும் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விடவும்.
அதே வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் துவரம் பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற விடவும்.
மிக்ஸியில் ஆறிய துவரம்பருப்பு, பெருங்காயம், மிளகு, செத்தல் மிளகாய், உப்பு மற்றும் வதக்கிய‌ புடலங்காய் சேர்த்து அரைக்கவும். சுவையான புடலங்காய் ஊறுகாய் தயார்.

புடலங்காய் ஊறுகாய் மினரல் சத்துக்கள் நிறைந்தது. இது ஆசியா கண்டத்தினை சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களால் பெரும்பாலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

எச்சரிக்கை - புடலங்காய் அலர்ஜி உடையவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது லெமன், புளி, வினிகர் எதுவும் சேர்க்காத ஊறுகாயா ?? சட்னி போலவே இருக்கே !! .