8 மாதத்தில் சளி தொல்லை

எனக்கு 8வது மாதம் நடக்கிறது. 3 நாட்களாக‌ சளி தொல்லை அதிகமாக‌ உள்ளது. தும்மல் நிறைய‌ வருது. ராத்திரியில் மூச்சு விடவே ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. தூங்கும்போது உடம்பு ரொம்ப‌ சூடா இருக்கு. அதனால‌ AC போட்டால் தான் தூங்கவே முடியுது. ஹோம் ட்ரீட்மென்ட் ஏதாவது சொல்லுங்களேன். உடம்பு ரொம்ப‌ எரிச்சலாவே இருக்கு. தாங்க‌ முடியலை. உடம்பு, முகத்துல‌ நிறைய‌ இடத்துல‌ வேர்க்குறு இருக்கு.
ஆனாலும் சளி தொல்லை தான் அதிகமா இருக்கு. நிம்மதியா மூச்சு விடவே முடியலை. சீக்கிரம் பதில் தெரிஞ்சவங்க‌ ரிப்ளை ப்ண்ணுங்கள். ப்ளீஸ்.

பதில் தெரிஞ்சவங்க‌ யாராவது பதில் போடுங்கள். ப்ளீஸ். என்னை விட‌ என் வீட்டுக்காரர் தான் ரொம்ப‌ அவஸ்தை படுறார். நான் தூங்காமல் இருப்பதால் அவரும் தூங்க‌ மாட்றார். ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. பகலில் நல்லா தான் இருக்கிறேன். ராத்திரியில் தான் ரொம்ப‌ கஷ்டப்படுறேன்.

இன்னுமா என்னோட‌ போஸ்ட்ட‌ யாரும் பார்க்கலை. ஏன் யாரும் பதில் போட‌ மாட்றீங்க‌.

உங்களுக்கு தேடிப் பார்க்க நேரமில்லை; எங்களைக் கேள்வி கேட்குறீங்க.
ஹ்ம்! :-)
http://www.arusuvai.com/tamil/node/24906
http://www.arusuvai.com/tamil/node/16978

‍- இமா க்றிஸ்

thank you imma amma.
எப்படி தேடுவதுன்னு தெரியலை. சாரி இமா அம்மா.
சுக‌ பிரசவத்திற்கான‌ கற்பரட்சாம்பிகை மந்திரம் ஐடி இருந்தால் கொடுங்களேன். ப்ளீஸ். என் தோழி சொன்னாங்க‌. ஆனால் ஐடி கிடைக்கலையாம்.

கர்ர்... இங்க தட்டினதை மேலே இருக்கிற சர்ச் பாக்ஸ்ல தட்டி என்டர் கொடுத்திருந்தா தேவைக்கு மேல விபரம் கிடைக்கப் போகுது. உதவுறேன் என்கிறதுக்காக இப்பிடிப் பண்ணப்படாது.

//கற்பரட்சாம்பிகை மந்திரம் ஐடி இருந்தால் கொடுங்களேன்.// ;))) யார்ட்ட என்ன கேட்கிறது என்பதே இல்லையா! ;D

http://www.arusuvai.com/tamil/node/18574

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்