piles

friends en hubbyku piles eruku.romba kastapadurar.work athigam erukrathala avarala relaxed erukave mudila.....burning pain eruku.bleeding illa...doctorta check pannitom..avar foodla control pannikalamnu sollitar...ivar operate pannidalamnu solliyum doctor ketkala....foodslaye contol pannikalamnu solli anupitar,,,but ivarala vali thanga mudila pa,,,,,entha foods eduthukanumm....vera treatment enna erukunu sollunga....pls share with ur views......

அன்புள்ள‌ ஷிவானா
1. வெங்காயம் சின்னது, பெரியது நிறைய‌ சேர்த்துக் கொள்ளவும்
மலபார் சேனை எனப்படும் குண்டு சட்டி சைசில் உள்ள‌ சேனை,பிடிகருணை, இவை சாப்பிட‌ வேண்டிய‌ முக்கியமான‌ கிழங்குகள்.
கட்டாயம் கீரை நாரை முழுவதுமாக‌ உரிக்கக்கூடாது, மிக்சியில் கீரையை
அரைக்கக்கூடாது, சட்டியில் தான் மத்து வைத்து கடைய‌ வேண்டும். நாருடன் தான் இருக்கவேண்டும், தினந்தோறும் கட்டாயம் ஒரு கீரை இருக்கவேண்டும்
பச்சை மிளகாயைப் பார்க்காமல் இருப்பதே நல்லது, நெய் கட்டாயம் உணவில் சேர்க்கவேண்டும். பழங்களைக் கூடுமானவரை நேரிடையாக‌ உண்பதே மிக‌ மிக‌ நல்லது.ஜூசாகக் குடிக்கவேண்டாம். தினமும் 150 கிராம் வெங்காயம் (வெள்ளை) பொடியாக் அரிந்து நெய்யில் வதக்கி சாதத்தில் சுண்டைக்காய் வற்றல் இருந்தால் வறுத்துப் பொடித்து கலந்து நான்கு உருண்டையாவது
சாப்பிட‌ வயிறு குளிரும், அடுத்த‌ நாள் காலைக் கடன் கழிக்கும் போது வலி இருக்காது. ரத்தம் வராது. கோதுமை மாவு, மைதா மாவு உணவுகளைத் தவிர்த்து விடுங்கள், நார் நிறைந்த‌ காய்கள் நல்லது மசாலா நிறைந்த‌ மாமிச‌ உணவு ஆகாது. முடிந்தால் கடுக்காய் பொடி வாங்கி இரவில் தினமும் இரவில் மூன்று சிட்டிகை அளவு மோரில் கலந்து குடித்தால் காலைகடன் கழிக்கும் போது தொல்லை இருக்காது. நாட்டு மருத்துவம் பார்க்கவும் சன் டீ.வி
உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஓமியோபதியில் பார்க்கவும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மூடப்பட்ட‌ சீட் உள்ள‌ ஆசனத்தில் வீடோ,
அலுவலகமோ உட்காரவே கூடாது, உட்காரும் சீட் பின்னல் சீட்டாக‌ இருத்தல் மிக‌ மிக‌ நல்லது. வேட்டி, கைலி போன்ற‌ அடிப்பகுதி காற்றோட்டம் உள்ளதாக‌ ஆடை அணிவதைக் கடைப்பிடிப்பது அவசியம். அறுவை சிகிச்சை செய்தாலும் சிலருக்கு மீண்டும் வர‌ வாய்ப்பு உண்டு
பருத்தி ஆடைகள் தான் அணியவேண்டும். சிந்தெடிக் கூடவே கூடாது. பைக் ஓட்டுபவராக‌ இருந்தால் கூடுமானவரை குறைத்துக் கொள்ளவும். குறிப்பாக‌ அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடாது (கோபம் ஆகாது)
ஊறுகாய் வகைகள் தற்போது வேண்டாம். உங்கள் கணவர் என்ன‌ வேலை செய்கிறார் என்று தெரியவில்லை. உடல் குளுமையாக‌ இருக்கவேண்டியது அவசியம். கட்டாயம் தலையில் எண்ணெய் வைத்தால் தான் சூடு குறையும்.
உங்கள் மருத்துவர் மருந்து எதுவும் தரவில்லை என்றால்
FP-TABS & FP-OINTMENT TABLETS & OINTMENT FOR FISSURES AND PILES
IT IS AN HOMIOPATHY TABLETS AND AN OINTMENT FOR PILES FROM SBL COMPANEY PRODUCT. YOU CAN GET IT FROM HOMIOPATHY MEDICAL SHOPS ONLY. IT IS THE BEST MEDICINE FOR PILES. ENQUIRE ABOUT THIS MEDICINE AND USE IT.( VISIT ABC WEB SITE)
இந்த‌ வெப் சைட்டில் போய்ப் பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//foodla control pannikalamnu sollitar.// அது நல்லது. உண்மையில் சத்திரசிகிச்சை செய்தாலும் கூட உணவுக் கட்டுபாட்டைத் தொடர்வது அவசியம். சத்திர சிகிச்சையின் பின், குணமாகும் காலப்பகுதியில் அதிக நேரம் உட்காருவது, காலைக்கடன் எல்லாம் சிரமமாகத்தான் இருக்கும். ஆப்பரேஷனுக்கு போன மறு நாள் மாஜிக் போல எல்லாம் சரியாகாது. இருப்பதை விட மோசமாகி அதன் பின் சரியாகுவது கூட ஆகலாம்.

//ivar operate pannidalamnu solliyum doctor ketkala.// டாக்டருக்கு இதனால் என்ன லாபம்! உங்களுக்கு நல்லது என்று ஒன்றைச் சொல்கிறார். புரிந்துகொள்ளுங்கள்.
//foodslaye contol pannikalamnu solli anupitar,// உண்மையைச் சொல்லியிருக்கார். :-) நிச்சயம் உணவுப் பழக்கங்களால் குணமாகும். (அப்படிக் குணமா(க்)கி இப்போ பிரச்சினையே இல்லாமலிருக்கிற ஒருவர் இங்கே இருக்கிறார். :-) சாப்பாட்டு விஷயத்தில் தொடர்ந்தும் கவனமாக இருக்கிறார்.)

//ivarala vali thanga mudila// இந்தப் பிரச்சினை... ஆரம்ப நிலை என்றாலும் கூட மிகவும் வேதனையானதுதான். ரொம்ப சிவியராக இருந்திருந்தால் ஆப்பரேஷன் பண்ணச் சொல்லி இருப்பாங்க.

//vera treatment enna erukunu// ஏதாவது ஆயின்மண்ட் கிடைக்குமா என்று வேண்டுமானால் உங்கள் டாக்டரிடம் கேட்டுப் பார்க்கலாம் நீங்கள். கொஞ்சம் வேதனையைக் குறைக்கக் கூடும். இது கூட டாக்டர் வேண்டாம் என்றால் வற்புறுத்திக் கேட்க வேண்டாம். சில மருந்துகளுக்குப் உடனடிப் பின்விளைவுகள் இருக்கும்.

மற்றப்படி உணவுதான் தீர்வு. பூங்கோதை நிறைய டிப்ஸ் கொடுத்திருக்காங்க. அதற்கு மேல் சொல்வதற்கு அதிகம் இல்லை. வயிற்றோட்டம் ஆகாமல், மலச்சிக்கலும் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வயிற்றில் பூச்சித் தொற்று இருப்பதாகத் தெரிந்தால், உடனுக்குடன் worm treatment எடுப்பது நல்லது. உட்கார - நாற்காலியின் மேல் நடுவில் துளையுள்ள வட்ட வடிவ குஷன் பயன்படுத்தலாம். டென்ஷன் ஆகாது.

ஆப்பரேஷன் இல்லாமல் வேறு சிகிச்சை முறைகளும் இருக்கின்றன. நீங்களாக செய்யக் கூடியவை அல்ல அவை. அவசியமா அல்லவா என்பதை டாக்டர்தான் முடிவு செய்ய வேண்டும்.

‍- இமா க்றிஸ்

en husbanku pain kuraiyave illa ma...oinment ketkave illa.so we decided to go surgery....now we r in bangalore...pls suggest us best doctor in bangalore r trichy for this problem...

amma nan morning avarku 3 slice apple ,1 cup of sprouts,idli r dhosai n one cup milk......lunchku sambar,poriyal,keerai,,,,,night tiffin items n chappathi ...after one cup milk with dates syrub.....ithu correct ana diet ah....inbetween juice dryfruits sapduranga...analum pain irunthute than ma eruku

//poriyal// தேங்காய்த்துருவல் சேர்த்து வறுக்கிறதைச் சொல்றீங்களா? தேங்காய்த்துருவல் சேர்த்த உணவு... கொஞ்சம் சிரமம் கொடுக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்