உருளைகிழங்கு சூப்

தேதி: February 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (பெரியது)
பால் - 1/2 கப்
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீஸ்- 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முதலில் உருளைகிழங்கை தோல் நீக்கி வெங்காயம்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

வெந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

இதனுடன் மைதாமாவு, பால், மிளகுதூள் சேர்க்கவும்.

அடுப்பில் இந்த கலவையை வைத்து சூடாக்கவும்.தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும்

சூப் கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.இதனுடன் சீஸை சேர்த்து உருகும் வரை கிளறி விடவும்.பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்