மஞ்ச ஆப்பம்

தேதி: June 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
பழைய சாதம் - ஒரு கப்
புளித்த தோசை மாவு - கால் கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
சின்ன வெங்காயம் - 5
சோடா உப்பு - ஒரு சிட்டிகை


 

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை ஊற வைத்து எடுத்து தண்ணீர் ஊற்றி களைந்து விட்டு கிரைண்டரில் போட்டு பழைய சாதம் சேர்த்து முதல் நாளே அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சோம்பு தூள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
அதன் பிறகு அரைத்த விழுதை அரைத்து எடுத்து வைத்திருக்கும் ஆப்ப மாவுடன் சேர்த்து ஒன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் தடவி கரைத்து வைத்திருக்கும் ஆப்ப மாவை ஒரு குழிக்கரண்டி ஊற்றி கரண்டியை வைத்து நடுவில் லேசாக அழுத்தி விட்டு வட்டமாக தேய்க்கவும்.
மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் மூடி வைக்கவும். அப்போது தான் நன்கு ஆப்பம் சற்று மேலே உப்பி வரும்.
பிறகு 2 நிமிடம் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு சிவந்ததும் ஒரு நிமிடம் கழித்து எடுத்து விடவும்.
மிகவும் ருசியான மஞ்ச ஆப்பம் தயார். தேங்காய் சட்னியுடன் இதை சாப்பிடலாம். இந்த குறிப்பை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்