:-[Please help me friends....

Vanakkam, Aennoda paiyanukku 3.2years aaguthu, eppo pre.k.g poran. School time 9.00 to 3.00,Aennoda paiyanukku ennum sariya pechchu varala, ovvoru varthaithan pesuvan, athanalathan school-la seththuvittom,aenga pakkaththula kutty pasanga yarum ellai, school la vittalavathu sekkiram pesiruvannu than school seththom. eppo aenna problem na school poi 11 mani vara alama erukkanam, athukkumela countinues a 3 mani vara aluguranam, kutties kooda otrathe ellayam, class ullaye utkaramattanam, miss solrathaiye kekkamattranam, athukkum mela avangala meratranam,kontu pora lunch+snacks um sappitarathillai, ethukku na aenna panrathu+ aepdi avana valikku kondu varathunu konja sollunga frends... aenaku ungaloda advice konjam sollunga plz...

Magan ippa 1 vaarama dhaan school poraanaa? Ippo dhaanae open pannirupaanga? Naan solvadhu sarinna kavalai vendaam. Ellaa pillaigalum aarambathil appadi azuvaanga dhaan. Enna kondu poi vidumbodhu azuvaanga apparam amaidhi aayiduvaanga. Unga paiyan ulta ;)

May be adhu avan thungura nerama bharathi? Appadi irundhaa kuda aza vaaippu irukku. En maganum aarambathil class la utkaarave illannu sonnaanga. Apparam pazagittaan. Bayam vendaam... konjam pesunga avankitta. Azaama gud boy nu peru vaanginaa evening surprise tharennu sollunga. Adhu pola vandhaannaa sonna maadhiri edhavadhu vaangi kodunga. Thaanaa pazagiduvaan.
Kuzandhai dhaanae bharathi... feel pannama irunga, konja naal pona sariyaagiduvaan.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanakkam mam,
1 varamathan poran mam, Kalaila 6manike aenthiruchuran athanala thookam varum pola avanga thoonga vachchalum thoonga matranam, Kalaila school busla jollya bye sollitu povan, evening alarathunala na poi kutitu varuven mam, appo than evlo complaintum solvanga, ketkum pothe kashtama erukkum, Eva payankarama alarathala thani classla utkara vachchutuvangalam, kutties kooda otrathe ellayam, nanga kannadam pesuvom,pakkathula Tamil pesuvanga, entha rendu lang kettu confuse aahi pechu varaliyanu thonuthu, schoollayum Eva pesurathu anga puriyalayam avanga pesurathu evanukku puriyalayam, doctor kitta kamikalamna Kannada oralavukku pesuran, atha aenna panrathunu kavalaiya erukkumam...

"Don't worry be happy"

மேம் எல்லாம் வேண்டாம் :) வனிதான்னு கூப்பிடுங்க‌.

அப்போ பிரெச்சனை அவன் தூக்கமா இருக்கலாம். இரவு எத்தனை மணிக்கு படுக்கறான்? வழக்கமா அவன் எவ்வளவு நேரம் வரை தூங்குவான்? காலை சாப்பிட்டு போறானா? ஏன்னா பசியா இருந்தா கூட‌ பசங்க‌ அழலாம்.

மொழி பிரெச்சனை இல்லை... நாம‌ எதிர் பார்க்குறதை விட‌ பசங்க‌ சீக்கிரம் மொழியை கத்துக்குவாங்க‌. என் பிள்ளை இரண்டுக்கும் வீட்டில் ஆங்கிலம் நாங்க‌ பேசி பழக்கமே இல்ல‌... ஆனா பள்ளிக்கு போக‌ ஆரம்பிச்சு 1 மாதத்தில் எல்லாம் புரிஞ்சுக்க‌, பதிலுக்கு பேச‌ பழகிட்டாங்க‌. இப்போ சரலமா பேசுறாங்க‌ இருவரும். அவன் கன்னடா நல்லா பேசுறான் எனும் போது அவன் பேச்சை பற்றி கவலை வேண்டாம். பள்ளிக்கு சென்று அவன் வயது பிள்ளைகளோடு பழக‌ பேச‌ ஆரம்பிச்சா நல்லா பேச்சு வந்துடும். ஒரு வார்த்தை கூட‌ பேசல‌, திக்குறான் போன்ற‌ பிரெச்சனைன்னா மருத்துவரை பார்க்கலாம்... இப்போ அவசியமில்லை. நீங்கள் வீட்டில் அவனிடம் நிறைய‌ பேசணும். ஸ்கூலில் நடந்ததை வீட்டில் வந்ததும் சொல்ல‌ சொல்லுங்க‌... ஆர்வமா கதை கேளுங்க‌, நடுவில் கேள்வி கேட்டு பதில் சொல்ல‌ வைங்க‌. பேச்சு பற்றி கவலை வேண்டாம்.

அவன் தூக்கம், அவன் உணவில் கவனம் செலுத்துங்க‌. சிறு பிள்ளை சொல்ல‌ தெரியாம‌ கூட‌ இப்படி அழலாம். 11 மணிக்கு மேல‌ அவனுக்கு தூக்கம், பசி இருக்க‌ வாய்ப்பிருக்கு... இதுவரை வீட்டில் இருந்து பழகிய‌ பிள்ளை தாயை தேடுது. எல்லாம் இன்னும் 1 மாதம் போனா சரியாகிடும் பாருங்க‌. :)

ஸ்கூல்ல‌ சொல்லும் கம்ப்ளைன்ட்ட‌ பற்றி ரொம்ப‌ ஆழமா யோசிச்சு குழப்பிக்காதீங்க‌. சிலர் அப்படி தான்... தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்வாங்க‌. எனக்கு தெரிந்த‌ ஒரு பிள்ளை இப்போது தான் யூ கே ஜி போயிருக்கு... அவளுக்கு ஒன்னுமே எழுத‌ தெரியலன்னு புது ஸ்கூலில் கம்ப்ளைன்ட் அதுவும் முதல் 2 நாளிலேயே!!! அதை சொல்லி கொடுக்க‌ தானே பள்ளிக்கு அனுப்பறோம்? அதை கற்றுக்கொடுத்து அனுப்ப‌ வேண்டும் என்றால் அவர்கள் எதற்கு? அவர்கள் பேசிக் சொல்லிக்கொடுக்கட்டும், நாம் அதை நன்றாக‌ செய்ய‌ வீட்டில் பழகுவோம்... இது தான் முறை. அதாவது ஒரு எழுத்தை எப்படி சரியாக‌ எழுத‌ வைப்பது என்று நமக்கு தெரியாது... ஆனால் ஒரு நல்ல‌ ஆசிரியரால் அது முடியும், சுலபமாக‌ ஒரு எழுத்தை எழுத‌ சொல்லி கொடுத்துடுவாங்க‌. இது ஒரு உதாரணம் தான்.

பள்ளிக்கு நீங்க‌ போறதை நிறுத்துங்க‌... உங்களை தேடியே அழப்போறான் அப்பறம். அழுதாலும் 3 மணிக்கு அவனா வரட்டும் பஸ்ல‌. மிஸ் கம்ப்ளைன்ட் பண்றதும் இதனால் உங்க‌ மனக்குழப்பமும் கூட‌ குறையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi sister, i am teacher, starting la chillrence appaditha aluvanaga, 2 month la ellame sari airum, avangaluku friends kidachutangana sari airum, apparam neenga poga vendanu sonnalum avanga poranu solvanga,

avan night 10manikku mela thoonguvan,Kalaila 6 manikku aenthuruchuran, Kalaila pal kudichana tiffin sapidarathilla, athanala Kalaila 1or 2idli sapduvan 7.30 kulla sappiduvan,schoolla 10.30kku snacks time, 12manikku lunch time athuththu 1 manikku mela sleeping time appothan thongurathilaiyam, 3 manikku school mudinchurum, aenga areavukku 2nd trip bus varathinala 5manikku than bus varum, athanala tired ahiduvanu kuppittu varuven.

"Don't worry be happy"

Neengalum, vanithavum sonnathu mathirku aaruthala erukku...
very veru
y thanks sis...

"Don't worry be happy"

10 மணி அதிகம்... கொஞ்சம் சீக்கிரம் தூங்க‌ வைங்க‌. 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ள‌ தூங்க‌ விட்டுடுங்க‌. இந்த‌ வயசுல‌ அந்த‌ தூக்கம் தேவை. பசியா அனுப்பாதீங்க‌... பால் கொடுக்காம‌ முதல்ல‌ உணவை கொடுங்க‌. கிளம்பும் போது பால் கொடுத்து அனுப்புங்க‌. அவனையே மதியத்துக்கு என்ன‌ வேண்டும் என்று கேட்டு அதையே கொடுத்து அனுப்புங்க‌. விருப்பமான‌ ஸ்னாக்ஸ் இருந்தா நோ சொல்ல‌ மாட்டார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

School mudinchu vanthathum paal kudichchittu 4 manikku thoonguna 7manivarai thoonguvan, avanukku ethu venum athu venumnu solla theriyala...

"Don't worry be happy"

4 முதல் 7 வரை தூக்கம் வேண்டாம். 1 மணி நேர‌ தூக்கம் போதும் மதியம். அப்ப‌ தான் இரவு தூங்குவாங்க‌. அவன் தானா வாய்விட்டு கேட்காம‌ அவன் தேவையை பூர்த்தி செய்வதை விடுங்க‌... கேட்டா தான் கிடைக்கும் என்ற‌ வழக்கத்துக்கு பழக்குங்க‌. சின்ன‌ சின்ன‌ விஷயம் கூட‌ அவன் கேட்டால் மட்டுமே கொடுங்க‌. மாலை வெறும் பால் கொடுக்காதீங்க‌... சாப்பிட‌ திட‌ உணவு எதாச்சும் கொடுங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ok Vanitha, eppo thelivayiduchu, daily ethanala rombha tention+upset, aenna panrathune theriyama kuzhambikkite erunthen.eppo than freeya erukku,Romba romba thanks Vanitha...

"Don't worry be happy"

மேலும் சில பதிவுகள்