please yennoda life problem ku solution sollunga

frds and my sisters,
life la yellarthukum vara problem pola yenakum. love dhaan...naan yenga veetuku ore ponnu...amma appa velaiku poravanga ...so always thaniya dhaan..schooldays varaikum appa ve oru head master maadhiri irundhu yenna padika vappar..naan yeppome school first and class first dhaan..hard work pannidhaan padipen..so college pona jolly ah irukalam nu yellorum solluvanga...yenaku neraya cinema parthu naanum love pannanum oru payyana paarthu propose pannen college first yearlaye, avan two months kalichu accept pannan, but appo yennoda love avan serious ah yeduthakala..yenna neraya aluga veppan,,,kandapadi thittuvan...yenaku yennu ippo varaikum puriyadhu,aluven,four years ipdiye senjan...avan seyyra yellathukum naan adjust panni poven...naan post graduation kaaga vera college poiten...avan job thedi kedachu chennaila irukan...neraya muttalthanama cinema la vara maaadhiri avanye nenachitu irupen...studies no concentration,,,but avan nalla padichan...yengalukulla konjam pechu vaartha cut aachu,,,,two months pesala...yenaku adhu palagiduchu...pesama love vendam nu thaniya irundhidalam nu mudivu panniten(during post graduation),,,,,dhideernu vandhu avan yenna mannichuru yenna thirumba accept panniko nu two months ah kenjinaan...i refused,,,but finally accepted...ippo yen veetula alliance pakranga...avanta sonna vendam nu sollu appa ammata sanda podunu solran...yenaku appa ammava kashtapadutha manasu varala...but kalyanam vendam nu veetla sollitu dhaan iruken..ippo veetla idhaa sonnalum accept panika mattanga ,,,bcz naanga inter-caste...aana avan naan strong ah irundha kalyanam nadakum nu solran...yenaku ivan pecha kekradha...illa appa amma pecha kekradha,,,onnum puriyala...totally romba manasu baarathoda idha type panren..ippo naan post graduation mudichuten,,,,job illa...avan yenna vida one year young....please yennoda life problem ku solution sollunga...yaarum vendam nu yengayavadhu thaniya poidalamnu kooda thonudhu...appa ammava yemathromnu manasu romba kashtama iruku,,,ipo veetla sonna,,,sethiduvom nu meratuvanga...yenna panradhunu puriyala....

//appa ammava yemathromnu manasu romba kashtama iruku,// நீங்க அம்மா, அப்பாவை ஏமாற்றல. உங்களை நீங்களே ஏமாத்திக்கறீங்க.

எங்கயும் நீங்க, 'அந்தப் பையனை உயிருக்குயிரா நேசிக்கிறேன், இல்லாமல் வாழ்க்கையே இல்லை,' இந்த மாதிரி எதுவும் சொல்லவில்லை. (தங்லிஷ் பதிவு - என் கண்ணில் படாத இடத்தில் சொல்லி இருக்கக் கூடும்.) உங்க காதல், மனசைப் பார்த்து வந்த காதல் இல்லை. நீங்க ஒரு கனவு உலகத்துல இருக்கீங்களோன்னு தோணுது. ஒரு கொள்கை இல்லாத பேச்சாகத்தான் பேசுறீங்க.

உங்களுக்கு அந்தப் பையன் மேல் பெரிதாக ஈடுபாடு இல்லை. பெற்றோரைப் பற்றி யோசிப்பதாகச் சொன்னாலும் உண்மையில் அப்படியும் தெரியவில்லை. நீங்க... யோசிக்கணும் நிறைய.

உங்களால சுயமாகச் சிந்திக்க இயலவில்லை. பேசாமல் பெற்றவர்கள் கையில் பொறுப்பை விடுவதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இமா சொன்னது தான் தோணுது. நீங்க‌ அப்பா அம்மா மேலயோ அல்லது அந்த‌ பையன் மேலயோ கூட‌ ரொம்ப‌ பற்றுள்ளவரா தெரியல‌. இப்போ அப்பா அம்மாவை ஏமாத்துறோம்னு தோணுது... ஆனா இத்தனை வருடம்?? காதல் என்று ஒன்று வந்தால், அது உண்மையான‌ காதலாக‌ இருந்தால் தைரியமா பெற்றோருக்கு சொல்லத்தோன்றும். எப்போ அது தப்புன்னு தோணுதோ அப்ப‌ தான் மறைக்க‌ தோணும். சொன்னால் செத்துடுவோம்னு சொல்வாங்கன்னு சொல்லிருக்கீங்க‌... ஆக‌ இன்னும் நீங்க‌ சொல்லல‌... ஆனா அதை சொல்லாம‌ இருக்க‌ காரணம் தேடுது உங்க‌ மனசு. உண்மையான‌ பற்று இருந்தால் இப்படி தோணாதுங்க‌... என்ன‌ நடந்தாலும் எதிர் கொள்ளும் தைரியம் இருக்கும். அதனால் இமா சொன்ன‌ மாதிரி ஒரு தெளிவில்லாத‌ நீங்க‌ உங்க‌ அப்பா அம்மா கையில் உங்க‌ வாழ்க்கையை ஒப்படைப்பது தான் சரின்னு நான் நினைக்கிறேன். சினிமா வாழ்க்கை ஆகாது... காதலிக்க‌ சினிமாவை உதாரணம் கொண்டது போல‌, சோகத்துக்கும் உங்களுக்கு சினிமா உதாரணமாகுது. நிஜ‌ வாழ்க்கைக்கு ஒத்துவராத‌ நிழல் அது. புரிஞ்சுகிட்டு அப்பா அம்மா பேச்சை கேட்டு நடங்க‌... அது தான் உங்க‌ வருங்காலத்துக்கு நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Unga vayasu karavungala nenaichu alugaratha ella sirikaratha enaku theriyala pa ,

Unga avaur onnum hero ella atha neenga purunjukkonga, ethuvaikkum unga avan enna pannerukar eppo vanthu unga kita ottika

epo avarukku time pass panrathuku thank neenga.

neenga unga appa ammava nenaichu parunnga avanga ungalukkaga evvalavu thiyagam senju eruppanga may be athu avanga kadamaia erunthalum

antha kadamaiya avvalavu appa amma nala correct ah seiyamudiyuthu pa ??

think unga mom & dad senja nallavishayam = unga avar ungalukku senja nalla vishyam erandaiyume neenga yosieenga .

neenga poonnunga gettha erunga, ungaluku unga padippu erukku, unga pinnadi unga parents erukkanga,

ethu erandume ellama ethana peru epadi enga ellam kastapaduranga theriuma .

eppo unga age ku ethu ellam annavasiyam

go with ur parents they know about u & they know how about u * they only know wat s fit for u !!!

don't confuse your self . relax ur self & think and take decision

& mela eruvarum solli erukkanga athu than pa saree, porumaiya yosieenga.

All the best for ur future

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

தமிழில் type செய்திருந்தால் படிக்க அலுப்பு இல்லமால் இருந்து இருக்கும் . நெறைய தோழிகள் பதில் கூறுவார்கள் . இது மாதிரி பெரிய post போடுகிரர்வர்கள் சிரமம் பார்க்காமல் தமிழில் type செய்யுங்கள் . தோழி ! கவலை பட ஒனுற்றும் இல்லை . ஒரு பேப்பர் எடுங்கள் எழுதுங்கள் உங்கள் மனதில் இருப்பதயை .. ஒரு புறம் நீங்கள் உங்கள் அம்மா அப்பா திருமணம் சம்மதிபதால் என்ன நடக்கும் சம்மதிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் . உன்னொரு புறம் உங்கள் காதலன் ஏற்று கொண்டால் என்ன நடக்கும் நடுவில் விட்டு சென்றால் என்ன நடக்கும் .. இப்படி போசிடிவே நெகடிவ் ரெண்டு பெருகும் எழுதுங்கள் . படித்து பாருங்கள் புரியும் . ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன் திருமணம் நடந்த பிற்கு இதெல்லாம் யோசித்து பார்த்தல் சிரிப்பு தான் வரும் .அப்பா அம்மா அவர்களை தவிர நம்மை அக்கறை அன்பு பாசம் வைத்து இருபவர்கள் உலகத்தில் யாருமே இல்லை தெய்வம் கூட அடுத்த தான் . நம்மளை china வயதில் இருந்து கவனித்து உங்களுக்கு கல்யாணம் கூட வைக்க லயகற்றவர்கால ? பெற்றோர்கள் . அதனால் இதெலாம் passing clouds மாதிரி இது காதல் அல்ல . மனதை போட்டு குழப்பாமல் இருங்கள் .திருமணம் பிறகு பெற்றோர்களின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் . உங்களைகாதலன் திடிர்ன்று வேண்டாம் என்றோ திருமணதிற்கு பிறகு வெறுத்தாளோ நீங்கள் இதே நிலைமையில் தான் இருக்க வேண்டும் . வாழ்கையில் தெளிவு வேண்டும் .மனம் உறுதி வேண்டும் . பெற்றோருக்கு ஒரே செல்ல மகள் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள் அதை விட்டு காதல் அது இது என்று புலம்பமால் மனதை புத்தகம் படிப்பு Isai என்று திசை திருப்ப முயற்சித்து பாருங்கள் . வாழ்க்கை ரொம்ப பெரியது . நம்ம வயதின் முக்கால் வயது கணவரிடம் குழந்தையிடம் வாழ்கை கழிகிறது அதனால் அது நமக்கு சந்தோசம் பாதுகாப்பு மன நிம்மதி இதெலாம் உன் காதலரிடம் கெடைக்குமா என்று யோசியுங்கள் . காதல் கல்யாணம் சிறந்து தான் இல்லை என்பதில்லை . பெற்றோரின் அசிர்வதாம் கேடைதல் நன்று . மாதா மனமறிய வாழா ஒரு நாளும் .. வாழ்க நீ

உங்க பதிலுக்கு நன்றி.நான் இன்னும் சொல்ல நிரயா இருக்கு.காலேஜ் days la நான் ரொம்ப true ah இருந்தேன்.yenna அழ vachite இருந்தான். நம்ம select பண்ண பையன் சரி இல்ல னு தனியா இருந்தேன். அவனுக்கு வேலை kidacha உடனே திரும்ப pesinan. அவன் லவ் ல confident ah இப்போ iruken,வீட்ல பேசலாம் னு solran.ஆனா yenaku அப்பா அம்மா சம்மதம் solvangala னு பயமா iruku,காலேஜ் ல இருந்தபோது அம்மா அப்பா ட சொல்ல தைரியம் இருந்துசு,இப்போ job இல்லாம irukradhunaala yenna வேற yaaravadhuku கல்யாணம் பண்ணி vechiduvaanganu பயமா iruku, yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken,

//நான் இன்னும் சொல்ல நிரயா// சொல்றது எல்லாம் முதல்ல சொல்லிரணும். நான் பதில் போட்ட பின்னால கேள்வி கேட்ட ஆள் வந்து, 'இல்ல, அது இப்படித்தான்,' என்று பதில் கொடுத்தா... 'நம்ம நேரத்தை வீணாக்கிட்டமோ!' என்று எனக்குத் தோணுறது உண்டு. :-)

காலேஜ் days la நான் ரொம்ப true ah இருந்தேன்.// அது இறந்தகாலம். இப்போவும் அதே அளவு ட்ரூவா இருக்கீங்களா?

//yenna அழ vachite இருந்தான்.// சரி... எதிர்காலத்துல அதே போல அழவைக்க மாட்டார்னு எப்படி நம்புறீங்க? அன்பு எந்தக் காலத்திலும் பிரியமானவர்களை அழவைக்காது.

//நம்ம select பண்ண பையன் சரி இல்ல னு தனியா இருந்தேன்.// இப்பவும் அதே பையனும் அதே நீங்களும்தான்ங்க. ஆட்கள் மாறவில்லை. அடிப்படை மனித குணாதிசயம் காலத்தோடு பெரிதாக மாறுவது இல்லை.

//அவனுக்கு வேலை kidacha உடனே திரும்ப pesinan.// ஒரு விஷயம் முன்பிருந்தே கவனிச்சுட்டு வரேன். 'அவன்' - ஒருமையில் அழப்பது தவறு இல்லை. பிரியமானவர்களை அழைக்கலாம். உங்கள் எழுத்திலிருந்து அந்தப் பையன் மேல் உள்ள காதலோ, அன்போ... புரியவில்லை. எங்கும் உங்கள் காதலன் என்பதாகவும் குறிப்பிட மாட்டேன் என்கிறீர்கள்.

//அவன் லவ் ல confident ah இப்போ iruken,// நினைச்சு நினைச்சு வெட்டுறதும் ஒட்டுறதும் உண்மைக் காதலில்லை.

//இப்போ job இல்லாம irukradhunaala yenna வேற yaaravadhuku கல்யாணம் பண்ணி vechiduvaanganu பயமா iruku,// ஏன்? புரியல இது.

//yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken,// ;)))) சிரிக்கிறேன்னு கோபிக்காதீங்க. சின்னப் பொண்ணு இல்லை நீங்க. வேலை இல்லைன்னு தெரியுது. வெறும் கை முழம் போடாது. அம்மா, அப்பா வீட்ல இருக்கும் போது வேலை இல்லை; வருவாய் இல்லை என்கிறது பிரச்சினையே இல்லை. எல்லாம் அவங்க பார்த்துக்கறாங்க. அப்படி இருக்க வேலை இல்லாததைப் பற்றி யோசிக்கிறீங்க. ஆனா உங்களுக்கு 100% நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி வேலை இல்லாத நீங்கள் போனால்!!! யோசிச்சுப் பாருங்க.

//yaarukum பாரம் ah இல்லாம yengavadhu poidalam nu iruken// ம்.. பயணத்துக்கு காசு வேணும்; போய்த் தங்குறதுக்கு நம்பிக்கையான இடம் வேணும், அதுக்குப் பணம் வேணும். சாப்பாட்டுக்குக் காசு வேணும். வேலை இல்லாம 'எங்காவது போய்' என்னதான் பண்ணப் போறீங்க!!

முதல்ல ஒரு வேலை தேடிக்கங்க. அந்தப் பையன் முடிந்தால் காத்திருக்கட்டும். வேலை இருந்தால் அம்மா, அப்பாவிடம் பேச உங்களால முடியும் இல்ல! ம்.. அதன் பிறகு பேசுங்க. அம்மா, அப்பா ஆளைப் பற்றி விசாரிச்சுப் பார்க்கட்டும். பிறகு எல்லோருமா சேர்ந்து என்ன செய்றது என்பதை முடிவு பண்ணிக்கங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்