பாகற்காய் வறுவல்

தேதி: February 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய பாகற்காய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை


 

முதலில் பாகற்காயை கழுவி மெலிதாக ரவுண்டாக வெட்டிக்கொள்ளவும்.
பின்பு அனைத்து மசாலாவையும் அதில் சேர்க்கவும்.
மேலும் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அஜீனோமோட்டோ சேர்த்து பிசறி வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெயை விட்டு சூடானதும் பாகற்காயை பரப்பினாற்போல் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது சாப்பிட சுவையாகவும், கசக்கும் தன்மை குறைவாகவும் இருக்கும் சின்ன பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா அக்கா, வறுவல் மிகவும் நன்றாக இருந்தது இதில் புதிது என்ன வென்றால் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் அஜினோமோட்டோ மிகவும் அருமையான டேஸ்ட்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ரொம்ப நன்றிமா பின்னூட்டதிர்க்கு,இது எனது மாமியாரிடம் கற்றுக்கொண்டது,அவர்கள் தான் அஜினோமோட்டோ போடுவார்கள் இதனால் கசப்பு சுவை தெரியாது,எங்கள் வீட்டில் இந்த முறைய்யில் பொறிக்கும் போது பிள்ளைகள் நன்றாக சாப்பிடுவார்கள்

today i tried this dish....it was so tasty.. thank u

nanriyudan