நண்டு குருமா

தேதி: February 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

நண்டு - 6
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்ப் பால் - 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
டால்டா - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி


 

முதலில் நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கவும்.
பின்பு ஒரு வாணலியில் டால்டாவை விட்டு உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் மிளகாய்ப்பொடி போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசனை வரும்வரை வதக்கி அதில் நண்டு துண்டுகளைப் போட்டு கிளறவும்.
பின்பு அதில் தேங்காய்ப்பால், உப்பு, அனைத்து மசாலாப்பொடிகளையும் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். நண்டு வெந்து, குருமா திரண்டு வந்தப் பின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிறீர்கள்? இந்த குறிப்பில் சீரகம், உப்பு மற்றும் கறிவேப்பிலை எந்த இடத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளிப்பில் சேர்க்க வேண்டுமா? நன்றி

நான் நன்றாக இருக்கிறேன்,மிக்க நன்றி!நீங்களும் நலம்தானே?ஜீரகப்பொடி என்று இருக்கவேண்டும்,ஆக அனைத்து மசாலா பொருட்க்களுடன் சேர்ந்துவிடுகிறது,என்னுடைய கவனமின்மையை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி,குறிப்பை திருத்திவிட்டேன்,இனி சமையுங்கள், ருசியுங்கள்!மீண்டும் நன்றீ!

நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என் சந்தேகத்தை தெளிவு செய்ததற்கு மிக்க நன்றி. நண்டு குருமா செய்து பார்த்துவிட்டு பதில் அனுப்புகிறேன்.
நன்றி

ஹலோ ஹலோ சுகமா? நண்டு குருமா செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டுவிட்டு அனைவரும் பாராட்டினார்கள். அந்த பாராட்டுக்கள் அனைத்து உங்களுக்கே வந்து சேரும். நீங்கள் செய்வதில் உங்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது?நீங்கள் எப்பொழுது இந்தியா வருகிறீர்கள்?welcome to our India.

ஆமா ஆமா சுகமே!நீங்களும் சுகம் தானே?நண்டு குருமாவை சமைத்து நன்றாக இருந்ததாக பாராட்டியுள்ளீர்கள்,மிக்க நன்றி!எனக்கு என் சமையலில் என்ன பிடிக்கும் என்று கேட்டுள்ளீர்கள்,நான் சமைப்பதை கடமையாக செய்ய மாட்டேன் ரொம்பவும் ரசித்து செய்வேன் ஆக எல்லாமே பிடிக்கும் ஆனால் எனக்கு கடல் உணவுகள் ரொம்ப பிடிக்கும் இந்த நண்டு குருமா,மீன் குழம்பு எறா அயிட்டம் அனைத்தும்,மேலும் மட்டன் வெள்ளை குருமா,பிரியானி,சிக்கன் தந்தூரி,சைவத்தில் நான் வைக்கும் சாம்பார்,வத்தல் குழம்பு,பச்சப்பயறு குழம்பு,மின்னெலை ரசம்(அது இங்கு கிடைக்காது இந்தியாவில் தான் மின்னெலை இருக்கிறது போய் தான் சாப்பிடனும்)சைனீஸ் ரோல்ஸ் இன்னும் சில சைனீஸ் சூப் வகையராக்கள்,பூண்டுகுழம்பு,இன்னொன்னு சொல்லட்டுமா எனக்கு கருவாடு என்றால் ரொம்பவே பிடிக்கும்!என்ன பாலா அடுக்கிகொண்டே போகிறேனா போதும் போதும்... என்பது எனக்கும் கேட்க்கிறது,அப்புறம் இறைவனின் உதவியால் நாங்கள் அடுத்த வாரம் இந்திய காற்றை சுவாசிப்போம் என நினைக்கிறேன்,உங்கள் வரவேற்ப்பிர்க்கு மிக்க நன்றி!அப்புறம் உங்களிடம் ஒன்று கேட்க்க வேண்டும் நம் நாட்டில் ஃபிஷ் சாஸ் கிடைக்கிறதா? எங்கு? தெரிவிப்பீற்களா?நான் சைனீஸ் ரோல்ஸ் செய்வதர்க்கான பொருட்க்கள் வாங்கிப்போய் எங்கள் வீட்டினருக்கு செய்து குடுக்க ஆசை,ஃபிஷ் சாஸ் கவனமாக எடுத்து செல்லவேன்டும் இது அங்கு கிடைத்தால் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை! ப்ளீஸ் தெரிந்தால் சொல்லுங்களேன்!

இந்த குருமா ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி உங்களுக்கு!!

டியர் மேனகா!உங்களுக்கு இந்த குருமா உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி!