சீஸ் போண்டா

தேதி: February 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துருவிய சீஸ் - அரை கப்
மைதா மாவு - ஒரு கப்
முந்திரிப்பருப்பு - 15
மல்லிக்கீரை - பாதி கட்டு
பச்சை மிளகாய் - 5
ரஸ்க் தூள் - அரை கப்
எண்ணெய் - சுமார் அரை லிட்டர்
உப்பு - 3/4 ஸ்பூன்


 

பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கி, அத்துடன் எண்ணெய், ரஸ்க் தூள் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
எண்ணெயை காயவைத்து ரஸ்க் தூளில் உருண்டைகளை புரட்டி, உடனே பொரித்தெடுக்கவும்.


உருண்டையில் ரஸ்க் தூள் சரியாக ஒட்டவில்லையென்றால் மட்டும், ஒரு முட்டையை கலக்கி அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக நனைத்து பிறகு பிரட்டி எடுக்கலாம். மாவை உருட்டியவுடனேயே பொரித்துவிடவும். அதிகமான நேரம் வைத்திருந்தால் பொரிக்கும்போது உடையலாம். திடீர் விருந்தாளிக்கு உடனே செய்து பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்