சிங்கப்பூர் நூடுல்ஸ்

தேதி: February 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மெல்லியதான அரிசி நூடுல்ஸ் - அரைக்கிலோ
கேரட் - ஒன்று
சிவப்பு குடமிளகாய் - ஒன்று
பச்சைகுடமிளகாய் - ஒன்று
முளைவிட்ட பச்சைபயிறு - இரண்டு கோப்பை
முட்டகோஸ் - இரண்டு கோப்பை
நறுக்கிய செல்லரி தண்டு - அரைக் கோபை
வெங்காயத்தாள் - அரை கோப்பை
நசுக்கிய பூண்டு - இரண்டு பற்கள்
நசுக்கிய இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
வெஜிடபிள் ஸ்டாக்(அ)சூப் - அரைக்கோபை
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி
கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால்க்கோப்பை


 

நூடுல்ஸை சுடு தண்ணீரில் போட்டு, நன்கு ஊறவைத்து வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு சாஸ் தயாரிக்க வெஜிடபிள் ஸ்டாக்குடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்கவும்.
காய்கறிகளை கழுவி மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
சட்டியை அடுப்பில் வைத்து நன்கு காயவைத்து எண்ணெயை ஊற்றவும். பிறகு அதில் கறிமசாலா, மற்றும் இஞ்சி, பூண்டைப் போட்டு வதக்கவும்.
பிறகு காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டி கலக்கவும்.தொடர்ந்து அதில் ஒரு சிட்டிகை உப்புத்தூளை தூவி கலக்கவும்.
பிறகு செல்லரி, மற்றும் வெங்காயத்தாளை போட்டு கிளறி விட்டு, நூடுல்ஸை போட்டு நன்கு கலக்கவும்.
நுடுல்ஸ் நன்கு சூடேறியவுடன், கலக்கிவைத்த சாஸை ஊற்றி கிளறவும். சாஸை நூடுல்ஸ் நன்கு இழுத்துக் கொள்ளும் வரை கிளறி விட்டு, இறக்கி சூடாக பறிமாறவும்.


அசைவமாக செய்வதற்கு, ஒரு கோப்பை இறால், அல்லது கோழி இறைச்சியைச் முதலில் வதக்கி விட்டு பிறகு மற்ற பொருட்களை சேர்த்துச் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா இந்த நூடுல்ஸ் செய்து சாப்பிட்டோம். மிகவும் நன்றாக இருந்தது. பிள்ளைகள் இருவரும் (பாயிண்ட்..பாயிண்ட் நோட் பண்ணிக்கோங்க) மிகவும் விரும்பி சாப்பிட்டனர். நன்றி உங்களுக்கு.

வானதி பாயின்டை நன்றாக நோட் பன்னிவிட்டேன்.குழந்தைகள் இந்த நூடுல்ஸ்சை விரும்பியது மனதுக்கு நிறைவாக உள்ளது. அவர்கள் விரும்பும் வகையில் இந்த குறிப்பைச் செய்ததற்கும், பின்னூட்டம் அனுப்பியதற்கும் மனமார்ந்த நன்றி.