பைனாப்பிள் ஃப்ரைட் ரைஸ்

தேதி: February 12, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - இரண்டு கோப்பை
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு தேக்கரண்டி
பூண்டு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - நான்கு
கேரட் - அரைக்கோப்பை
குடைமிளகாய் - அரைக்கோப்பை
வெங்காயத்தாள் - அரைக்கோப்பை
உலர்ந்த திராட்சை - அரைக்கோப்பை
கரம்மசாலா - இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை - அரைதேக்கரண்டி
சில்லிசாஸ் - ஒரு தேக்கரண்டி
அன்னாசிப் பழத்துண்டுகள் - இரண்டு கோப்பை
கொத்தமல்லி, புதினா - தலா ஒரு பிடியளவு
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால்கோப்பை


 

அரிசியை உதிரி உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம் மற்றும் காய்கறிகளை சற்று சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு நறுக்கிய பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கி அன்னாசிப்பழம் மற்றும் உலர்ந்த திராட்சையைப் போட்டு நன்கு வதக்கி விட்டு வேகவிடவும்.
காய்கறிகள் பாதி வேக்காடாக வெந்தவுடன் ஆறவைத்துள்ள சோற்றையும், வெங்காயத்தாளையும் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
தொடர்ந்து கரம்மசாலா, சர்க்கரை மற்றும் உப்புத்தூள், சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
சோறு நன்கு சூடேறும் வரை கிளறி விட்டு இறக்கி, கொத்தமல்லி, புதினாவைத் தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேம் ரொம்ப நன்றாக இருந்தது. இந்த ரைஸ். என்னோட தோழி ஒருந்தங்க வீட்ல நான் பைன்ஆப்பிள் புலாவ் சாப்பிட்டென். ரொம்ப நன்றாக இருந்தது. சரி இந்த ரெசிப்பி பார்தவுடன் செய்து பார்க்கவேண்டும் போல் இருந்தது. செய்தேன் ரொம்ப டேஸ்டியா இருந்த்து. நன்றி. மேம்

தேங்ஸ் விஜி. இந்த ஃபிரைட் ரைஸ்சை நான் சம்மரில் பார்பிக்யூ பார்ட்டிகளில் அடிக்கடி செய்வேன்.முந்தின நாளன்று செய்து ஃபிரிட்ஜில் வைத்திருந்து மேலும் பழங்களைச் ஃபிரஷ்ஷாக சேர்த்து ஜில்லென்று பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும். இதைச் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்க்கு எனது நன்றி.

மனோகரி அக்கா நேற்று டின்னருக்கு பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் செய்தேன். நன்றாக இருந்தது. இதற்கு சைட் டிஷ் என்ன பண்ணுவதென்று குழப்பமாக இருந்தது. பிறகு தம் ஆலு செய்தேன், நன்றாக இருந்தது. மிகவும் நன்றி!

ஹலோ மல்லி டியர் எப்படி இருக்கீங்க?எனக்கும் மிகவும் பிடித்த இந்த குறிப்பை செய்துள்ளீர்கள் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு தம் ஆலு நல்ல பொருத்தம், மேலும் அசைவத்தில் சிக்கன் டிஷ் எதுவாயினும் நல்ல பொருத்தமாய் இருக்கும். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

நானும் இதை செய்தேனே. மிகவும் நன்றாக இருந்தது. பார்பிக்யூ பார்டிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். நாங்கள் வறுத்த மீனுடன் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது.நன்றி உங்களுக்கு

நன்றி வானதி. இந்த குறிப்பு மீன் வறுவலுடனும் நன்றாக இருந்ததா, இதையும் கவனத்தில் இறுத்திக் கொள்கின்றேன். குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி.

திருமதி. வானதி அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த ரைஸின் படம்

<img src="files/pictures/pineapplerice.jpg" alt="picture" />