www.arusuvai.com
பைன்ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ்
தேவையானப் பொருட்கள்
- பச்சரிசி-இரண்டு கோப்பை
- வெங்காயம்-ஒன்று
- இஞ்சி-ஒரு தேக்கரண்டி
- பூண்டு-ஒரு தேக்கரண்டி
- பச்சைமிளகாய்-நான்கு
- கேரட்-அரைக்கோப்பை
- குடமிளகாய்-அரைக்கோப்பை
- வெங்காயத்தாள்-அரைக் கோப்பை
- உலர்ந்த திராட்சை-அரைக்கோபை
- கரம்மசாலா-இரண்டு தேக்கரண்டி
- சர்க்கரை-அரைதேக்கரண்டி
- சில்லிசாஸ்-ஒரு தேக்கரண்டி
- அன்னாசிப் பழத்துண்டுகள்-இரண்டு கோப்பை
- கொத்தமல்லி, புதினா-தலா ஒரு பிடியளவு
- உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்-கால்க்கோபை
செய்முறை
- அரிசியை உதிரி உதிரியாக வடித்து ஆறவைக்கவும்.
- வெங்காயம் மற்றும் காய்கறிகளை சற்று சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி முதலில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு நறுக்கிய பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு காய்கறிகளைப் போட்டு வதக்கி அன்னாசிபழம், மற்றும் உலர்ந்த திராட்சையைப் போட்டு நன்கு வதக்கி விட்டு வேகவிடவும்.
- காய்கறிகள் பாதி வேக்காடாக வெந்தவுடன் ஆறவைத்துள்ள சோற்றையும், வெங்காயத்தாளையும் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
- தொடர்ந்து கரம்மசாலா,சர்க்கரை மற்றும் உப்புத்தூள், சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- சோறு நன்கு சூடேறும் வரை கிளறி விட்டு இறக்கி, கொத்தமல்லி புதினாவைத் தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
5நபர்களுக்கு |
30நிமிடங்கள் |
30நிமிடங்கள் |