சாத பக்கோடா

தேதி: July 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

சாதம் - ஒரு கப்
கடலை மாவு - கால் கப்
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு கப்


 

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடலை மாவு, உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் வெங்காயம் போட்டு பிசைந்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிசைந்தால் தனித்தனியாக வரும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை பக்கோடாவாக உதிர்த்து விடவும்.
பக்கோடா நன்கு பொரிந்தது எண்ணெயில்லாமல் வடித்து விட்டு எடுத்து விடவும்.
மொறுமொறுப்பான சாத பக்கோடா ரெடி.
இந்த குறிப்பினை நமக்காக செய்து காட்டியவர், திருமதி. பானுமதி குமரப்பன் அவர்கள். பழமையும், புதுமையும் கலந்த புதுவகை சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். கணவர் மருத்துவர் என்பதால், இவரது தயாரிப்புகளில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாத பக்கோடா நல்லா இருக்கு.
நானும் உங்களது குறிப்பில் குறிப்பிட்டது
போல் செய்துள்ளேன்.நான் சாததை அரைத்து செய்வேன்.

பக்கோடா ரொம்ப‌ நல்லா இருக்கு. இந்த‌ வாரம் ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....