Please help me friends tell ur suggestions

Enaku baby illa nanga joint family...amma appa illa husband working in abroad.inaiku enoda co sister babya miratiten ava enna adichutannu she is studying in school now ...athuku ellarum enna romba asingama thitranga kashtama pochu un babya athu ithuhnu ....nan en babya nenechu than adichutannu kathinen ipadiya panuva nnu athuku ivlo periya problem create panitanga enna asingama thitranga unaku athu than babye illanuthana ennala thangala mudiyala

ம்ம்... பிள்ளையை வேறூ யார் அடித்தாலும் தாய்க்கு கோபம் வரும் தான். என் தங்கையே என் பிள்ளைகளை அடித்தாலும் எனக்கு சில‌ நேரம் கோபம் வரத்தான் செய்யும். இனி அது போல‌ செய்யாதீங்க‌ வாணி. எனக்கு புரிகிறது, நீங்க‌ உங்கள் பிள்ளையாய் நினைக்கிறீர்கள் என்று, ஆனால் பிள்ளை என்று வரும்போது தாய் யாரையும் அனுமதிக்க‌ மாட்டார். வகுப்பாசிரியர் ஒருமுறை என்னை அடித்துவிட்டார் என்று என் அம்மா பள்ளிக்கு வந்து அந்த‌ டீச்சரை திட்டியது எனக்கு இன்றும் நினைவிருக்கு. அது தான் தாயின் சுபாவம். // unaku athu than babye illanuthana// ‍ அவர்கள் சொன்ன‌ இதை தான் என்னால் மன்னிக்க‌ முடியாது. பரவாயில்லை... அவர்களை மன்னிக்க‌ நான் யார்? நீங்கள் மன்னியுங்கள்... நாளை உங்களுக்கு பிள்ளை பிறந்ததும் அந்த‌ குழந்தையையும் இப்படி தான் தாங்குவார்கள். நம்புங்க‌... நிச்சயம் அந்த‌ காலம் விரைவில் வரும். :) அவர்கள் பேசியது சரியென‌ நியாயப்படுத்தவில்லை... ஆனால் பரவாயில்லை என‌ மன்னிக்கலாம் என்கிறேன்... :) மற்றவர்கள் மேல் கோபம் வருத்தம் வந்தாலும் நம்ம‌ உடம்புக்கு தான் கெடுதி? சரி தானே வாணி? சிரிங்க‌... ஃபீல் பண்ண‌ கூடாது. சரியா? பீ குட் கெர்ள். விரைவில் நல்ல‌ செய்தி சொல்லி குடும்பத்தாரையும் அறுசுவை நட்புகளையும் மகிழ்விப்பீர்கள். உங்களுக்காக‌ எங்கள் பிராத்தனைகளும் அன்பும். :) மூட் சரியாயிடுச்சான்னு சொல்லணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

En husband um intha mathiri epovumey soldranga but enaku vara vara avanga soldra mathiri athunalathan namaku baby illaiyonnu thonuthu en maamiyar oru varthai thitinen atha 10 varthaiya avarta solli prob pani vitutanga ......neengalum pathitu thasna irunthingannu keten athuku en ammavaiye thappa pesitanga enaku kashtama pochu en amma uyiroda illa vanitha .....

//vara vara avanga soldra mathiri athunalathan namaku baby illaiyonnu thonuthu // ‍ இப்படித்தான் ஊருக்குள்ள‌ நல்லா இருக்க‌ பொண்ணுங்களை எல்லாம் பைத்தியமாக்கி வைக்கிறாங்க‌ போல‌. இது போல‌ எண்ணங்களை முதல்ல‌ விட்டுடுங்க‌ வாணி... அது உங்களுக்கு நல்லதில்லை. நெகடிவான‌ எண்ணங்கள் மனதில் நுழைந்தால் அங்கே நல்லது எப்படி வரும்?? அடுத்தவர் மனம் நோகும் என்று எண்ணாமல் பேசுப‌வர்கள் வார்த்தைகள் நிஜமாவதில்லை.

வருத்தப்படாதீங்க‌... உங்க‌ அம்மா ஆத்மா என்றும் துணை இருக்கும். பிள்ளைக்கு வாரிசு இல்லன்னு கோபமோ என்னவோ... அது உங்க‌ மேல் பாயுதுன்னு நினைக்கிறேன். எல்லாம் சரியாகிடும் வாணி... உங்களுக்கு ஒரு பாப்பா வந்துட்டா எல்லாமே சரியாகிடும். நம்பிக்கையோடு இருங்க‌. எதிர்த்து பேசுறதை விட்டுடுங்க‌... கணவரும் அருகில் இல்லை... யார் சொல்வதை அவர் கேட்க‌ முடியும்? தேவையில்லாமல் அவர் வரை பிரெச்சனையை கொண்டு போய் அவர் தனிமையில் அதை நினைத்து குழம்புவானேன்?? பாவமில்லையா? நீங்க‌ அமைதியாக‌ போய்விட்டால் உங்கள் மாமியார் பிரெச்சனை பண்ண‌ மாட்டார் இல்லையா? உங்களுக்காக‌ வேண்டாம், தனியே இருக்கும் அவரின் அமைதிக்காக‌ செய்யலாம் தானே வாணி?? கடவுள் பார்த்துட்டு தானே இருக்கார்... அவர் மேல் பாரத்தை போட்டுட்டு அமைதியா போங்க‌. உங்க‌ உடம்பும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks vanitha kadavul enomo enna romba ala vaikiraru ....pakukiren enna than nadakuthunu ..anathai mathiri aagiten

என்ன‌ வார்த்தை இதெல்லாம்?? உலகில் மனிதர்களும் கடவுளும் இருக்கும்வரை யாரும் அனாதை இல்லை. நாங்கள் எல்லாம் இருக்கிறோமே... நாளை இந்த‌ கோபம் போனதும் என்ன‌ வார்த்தை சொல்லிவிட்டோம்னு நினைப்பீங்க‌. உங்க‌ வருத்தம் புரியாமல் இல்லை வாணி... உங்களுக்கு என்ன‌ வயசு இருக்கும்?? மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 26 / 27?? வாழ்க்கையில் பார்க்க‌ இன்னும் எவ்வளவோ இருக்கே... அதுக்குள்ள‌ இவ்வளவு வெருத்து பேசினா எப்படி? இங்கே நாங்கள் எல்லாம் இருக்கிறோம் உங்களுக்கு நல்லது நினைக்க‌, உதவ‌, ஆறுதல் சொல்ல‌, அன்பாய் பேச‌.... எல்லாத்துக்கும் மேல‌ உங்களூக்கு குழந்தை கிடைக்க‌ பிராத்திக்கவும். :) எப்பவும் சிரிக்கணும்... கவலை இல்லாத‌ மனிதன் இல்லை வாணி... உங்களை சிரிக்க‌ சொல்லும் எனக்கு எத்தனையோ பிரெச்சனைகள் உண்டு... அதுக்காக‌ அழுதுட்டே இருந்தா பிரெச்சனையை போக்குவது யார்? அதை சரி பண்ண‌ அடுத்து என்ன‌ பண்றதுன்னும் யோசிக்க‌ வேண்டியவங்க‌ நாம‌ தானே? அப்படி சிந்திக்க‌ நல்ல‌ ஆரோக்கியமான‌ மனசு வேண்டும்... அதுக்கு நம்மை வருத்தும் குப்பைகளை மனதில் வைக்க‌ கூடாது. சரியா?? எதையும் தாங்கும் தைரியமும் நம்பிக்கையும் துணிவும் பெண்ணுக்கு அவசியம் வேண்டும் வாணி. பிரெச்சனை வரும்போது அம்மா அப்பாவை நினைச்சுக்கங்க‌... உங்க‌ கணவரின் அன்பை நினைச்சுக்கங்க‌... கோபம் போயிடும், சுத்தி யார் பேசுறதும் காதில் விழாது, அமைதியா இருக்க‌ முடியும். கடவுளை மனதார‌ பிராத்தியுங்கள். சீக்கிரமே வந்து பிள்ளை உண்டான‌ செய்தி சொல்வீங்க‌... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காலையில் பார்ப்போம் வாணி... உங்களுக்காக‌ தான் லேப்பி எடுத்து உட்கார்ந்தேன்... நாளை காலை சீக்கிரம் எழணும், வேலை இருக்கு, இப்ப‌ போய் படுக்கறேன். எதையும் யோசிச்சுட்டு தூக்கத்தை கெடுக்காம‌ போய் தூங்குங்க‌. விடியும் பொழுது நல்லதாகவே விடியும். இரவு வணக்கம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ur words make me happy now nan onnum thappu seiyala aana eno saami enna test pandraru enaku 26 vayasu married 2 1/2 yrs aguthu husband working In abroad avaruku panam than first marr aagi 2 yrs thank thaniya irunthom ipovum apopo than varuvaru...nan ethum avarta solla maten problem na vanitha en veetula iruka vangaley muthalla ellam solliduvanga nan seiyra nallathulam kashtapatakooda solla matanga but thappunu chinna thappuna kooda ellarkitavum sodranga ellam enna asingama pesuranga kashtama iruku .....

K vanitha enaku neenga ellam than advice tharanun ini ....good ngt

மேலும் சில பதிவுகள்