advice pls

Hi sister yen paiyanukku ippo 4 month complete achu.3 1/2 month irunthu na kul kudukkuren doctor advice padi.avanukku senthukuchu banana try pannen athum senthukuchu anaa cold pidikkuthu.athunala stop pannita ithu normala advise pls.

Till 6 months only mother milk has to be fed. Its too early for your baby to start solid food.. Anyway banana also might be reason for cold.. you can stop for a while and see..

//kul kudukkuren// என்ன கொடுத்தீர்கள் சத்யப்பிரியா!! குள்! கள்! குல்!

//doctor advice padi.// நானும் என் சின்னவருக்கு மூன்றாம் மாதம் முடிவிலிருந்து திட உணவு கொடுக்க ஆரம்பித்தேன், மருத்துவ ஆலோசனையின் பேரில்.

வயிற்றைச் சங்கடப்படுத்தாத வரை எதுவும் கொடுக்கலாம். எதையும் ஆரம்பிக்கும் போது குறைவாகக் கொடுங்கள். குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரியும்போது விட்டுவிடுவதுதான் நல்லது. சில மாதங்கள் கழித்து மீண்டும் கொஞ்சமாகக் கொடுத்துப் பார்க்கலாம். இப்போது வேறு ஏதாவது கொடுத்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks nga sona milk sufficienta illa athunala one time I wil give

Imma ma thanks for ur advice Vera yentha mathiri food items ippo kodukalam sollunga pls

Paiyanuku 3yr 8mnth ipo dha konjam konjam pesaran ...enna pandradhu ...edhavadhu help pannuga frds

ரொம்பவே யோசிச்சு, க்றிஸ்ஸைப் பிடிச்சு வாசிக்க வைச்சேன். அவங்க ஈசியா, 'கூழ்' என்று வாசிச்சுட்டாங்க. இமாதான் மக்காக இருக்கிறேன். அப்படிக் கேட்டதுக்கு என்னை மன்னிக்க வேண்டும் சத்யா. ;(

//yentha mathiri food items ippo kodukalam// இந்த விஷயத்தில் என் அட்வைஸ் உங்களுக்குப் பொருத்தமாக இராது. எனக்குக் கூழ் கொடுக்கிறதே தெரியலை பாருங்க.

முதல்ல இங்க முன்னால இதே டாபிக்ல உள்ள த்ரெட் எல்லாம் படிச்சுப் பாருங்க. அதுக்குப் பிறகும் தேவையா இருந்தா, மற்றவங்களைக் கேட்டுப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

3 வயது என்கிறீங்க. பேசுற வரைக்கும் ஒழுங்காக பேசுறாங்க இல்ல! மற்றவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கிறாரா? விளையாடும் போது ஏனைய குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுகிறாரா?

‍- இமா க்றிஸ்

Neengalum solid food earlier start pannathala keta imma ma.I think u have share ur experience nu.thanks for ur advice.

சின்னவர் ப்ரீமாச்சூர்ட் ஆக இருந்தார். பார்த்தது போதனா வைத்தியசாலையில். தடுப்பூசிகள், உணவு முறை எல்லாவற்றுக்கும் எனக்குக் கிடைத்த வழிகாட்டல், மூத்தவருக்குக் கிடைத்தவற்றை விட வேறாக இருந்தது. தவிர... என் நாடு வேறு; உணவுப் பழக்கம் வேறு. அதனால் இன்னொரு குழந்தைக்கு அதே விடயங்களைப் பரிந்துரைக்க முடியாது. அவருக்குப் பால்... உள்ளே போவதில் பாதிக்கு மேல் வாந்தியாகப் பீய்ச்சியடிக்கும். திட உணவுதான் உள்ளே தங்கிற்று.

மூத்தவர் எப்போ நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தாரோ அப்போதிருந்தே அருகே யார் என்ன சாப்பிட்டாலும் 'ஆ' காட்டி வாங்கிக் கொள்கிற ஆளாக இருந்தார். :-) அவருக்கு எதுவுமே பிரச்சினையாக இருந்தது இல்லை. எல்லாமே செரித்தது.

‍- இமா க்றிஸ்

Oknga imma ma .

மேலும் சில பதிவுகள்