கத்தரிக்காய் சட்னி

தேதி: February 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறிய கத்தரிக்காய்கள்-8
தக்காளி-4
பெரிய வெங்காயம்-2
வற்றல் மிளகாய்-6
புளி-சிறிய நெல்லி அளவு
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய்- 5 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது


 

கத்தரிக்காய்களை சுட்டு தோல்களை நீக்கி சதைப்பாகத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
3 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் பொடியாக அரிந்த மிளகாயையும் வெங்காயத்தையும் தக்காளியையும் நன்கு குழைய வதக்கவும்.
ஆறியதும் புளி, கத்தரிக்காய், உப்பு சேர்த்து ஒன்று பாதியாக அரைத்துக் கொள்ளவும்.
பாக்கி எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்