Paravaigal valapathu patri advice pls

dear friends eanaku illathil 1.5 vayathil girl baby vulathu ipothu avalukaga finch paravaigal erandu vangiyullen ithu nalatha apram matra paravaigal valakalama ithu enudaya relaxatation kaga vanginathu maru kadai verethum valigal ulatha relaxation ku velaiku poi vanthathum tierd aga vulathu eathilum nattam illai kuripaga samayalil ithai matra ena seiyalam pls advice kurungal

//illathil 1.5 vayathil girl baby vulathu// வேலைக்குப் போறீங்களா? வீட்டு வேலை, குழந்தை.. இவற்றோடு பறவைகளைப் பராமரிக்க நேரம் கிடைக்குமா? இடையில் நீங்கள் எங்காவது பயணம் போனால் பறவைகளைப் பொறுப்பாகப் பராமரிக்க அயலில் யாராவது முன்வருவார்களா?

//apram matra paravaigal valakalama// ம்... எங்கே வளர்ப்பீர்கள்? வீட்டினுள்ளா? குழந்தைக்கு சுவாசப் பிரச்சினைகள், ஒவ்வாமை எதுவும் இல்லையென்றால் பிரச்சினை இல்லை. உங்கள் இடம் எப்படி என்று தெரியவில்லை. எலி, பாம்பு இருக்கிற இடம் இல்லைதானே? பறவை வாசனை இவற்றை உள்ளே அழைத்து வரலாம்.

// ithu enudaya relaxatation kaga vanginathu// நல்ல விடயம் சகோதரி.

// maru kadai// !!! //verethum valigal ulatha relaxation ku// நிறைய இருக்கிறதே! புத்தகம் வாசிக்கலாம், தோட்டம் செய்யலாம், கைவினை, பெய்ண்டிங், குழந்தைக்கான துணிகள் தைக்கலாம், குழந்தையை அழைத்துக் கொண்டு பார்க் போகலாம்.

//velaiku poi vanthathum tierd aga vulathu// இதனால்தான் உங்களுக்கு இந்தப் பறவைப் பராமரிப்பு சரிவருமா என்று யோசிக்கிறேன். வேறு ரிலாக்சேஷன்ஸ் எல்லாம் நீங்கள் களைப்பாக இருக்கிறது என்று தூங்கி விட்டால் பிரச்சினை இல்லாதவை.

செல்லப் பிராணிகள்... ஜீவராசிகள் - உயிருள்ளவை. பசிக்கும் அவைக்கு. நீங்கள் கொஞ்சமாவது அவற்றோடு பேச வேண்டும் என்று அவை விரும்பும். அல்லாவிட்டால் சோகமாகிவிடும். கூடு சுத்தமாக இல்லாவிட்டால் அவற்றுக்கு நோய் வரும். அவற்றுக்கு மட்டும் அல்லாமல் வீட்டிலுள்ளவர்களுக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம். அவற்றைச் சரியாகப் பராமரிக்க முடியவில்லையென்று உங்களுக்கும் ஸ்ட்ரெஸ் வரலாம். ரிலாக்சேஷன் என்று ஆரம்பித்ததே களைப்பைக் கொடுக்கும் விடயமாக மாறிவிடக் கூடாது இல்லையா!

//eathilum nattam illai// அப்போ செல்லப் பிராணிகள் வளர்ப்பதை சிபாரிசு செய்ய மாட்டேன்.

//ithai matra ena seiyalam // நீங்கள் களைப்பாக இருப்பதுதான் படித்த எல்லாவற்றிலிருந்தும் எனக்குத் தெரிகிறது. நாட்டமில்லாவிட்டாலும் சமையல் செய்யத்தான் வேண்டும். ஆரோக்கியமான உணவாக, சுலபமான சமையலாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். இடையிடையே சூப் சாப்பிடலாம். முடியாமல் இருக்கும் சமயம், 'டேக் எவே' கூடப் பரவாயில்லை. கொஞ்ச நாட்கள் போக உடலில் தெம்பு ஊறியிருக்கும். அப்போ எல்லாமே பிடிக்கும். நேரம் கிடைக்கும் போது ஓய்வெடுங்கள். வேலையால் வந்ததும் சின்னதாக ஒரு குளியல் போடுங்கள். சூடாக ஏதாவது ஒரு பானம் அருந்துங்கள். குழந்தையோடு விளையாடுங்கள். ஆஃபீஸ் கவலைகளை வீட்டிற்குக் கொண்டு வராதீர்கள். அங்கேயே விட்டுவிட வேண்டும்.

முடிந்தால் குடும்பத்தோடு ஒரு சின்ன விடுமுறை - எங்காவது போய் வரலாமே! இது சாதாரணமான விடயம் போல தெரிந்தாலும் 2 நாட்கள் விடுமுறையில் கூட பெரிய அளவு மாற்றம் தெரியும்.

‍- இமா க்றிஸ்

Thank you akka paravaigalai paramarika oru pothum somberi thanam vanthathu illai en kulanthai athanudan vilayadum pothu santhosa padukiren atharku sapadu thaneer idam sutham thalam thavaramal parthu kolgiren. erunthalum strees enbathu naveena kala katta noi mathiri mari vitathu tierd varthai sulabamaga navil vanthu vidugirathu. enna seivathendru puriyamal nan.

:-) புரியுது.
//strees enbathu naveena kala katta noi mathiri mari vitathu tierd varthai sulabamaga navil vanthu vidugirathu.// இல்லைங்க. யாரும் பொய்க்கு ஸ்ட்ரெஸ் என்றோ களைப்பு என்றோ சொல்றது இல்லை. வேணுமானா... சரியான வார்த்தையைப் பிடிக்க முடியாமல் இந்த வார்த்தையைத் தெரிந்திருக்கக் கூடும் நீங்கள். எங்கே இடிபாடு என்பதைக் கவனித்துப் பிடியுங்களேன்! பிறகு உங்களுக்கே என்ன செய்ய வேண்டும் என்பது புரியும்.

உங்களால் முடியும் என்று தோன்றினால்... இன்னும் அதிகம் பறவைகள் வாங்கிக்கங்க. எனக்கும் பறவைகள் பிராணிகள் வளர்க்கப் பிடிக்கும். இப்போ இங்கே ஊரில் வளர்த்தது போல நிறையப் பிராணிகள் வைத்திருப்பது சிரமம். ஆனால் இரண்டு முயல்கள், மூன்று கோல்ட் ஃபிஷ் இருக்கிறாங்க. பார்த்தாலே மனசு லேசாகிரும். :-)

சமைக்கப் பிடிக்கல என்றீங்க. முடிந்தால் வாரம் ஒரு நட்பை அழைக்கலாம். அவர்களுக்காக என்று சமைக்கும் போது ஒரு ஈடுபாடு வரும். அனேகமான விஷயங்களுக்கு ஆரம்பம்தான் இடிக்கும். அதைக் கடந்துவிட்டால் பிறகு எங்களையறியாமல் நன்றாகவே காரியம் ஆகும். யாரையாவது பார்க்கப் போகும் போது அன்பளிப்பாக இனிப்புகள் வாங்கிப் போகாமல் நீங்களே தயாரித்து எடுத்துப் போக முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

unmayaga mudiyum ini muyarchi seikiren sweet seithu palaguvatharku mikka magilchi tholi ungaluda oru urayadalil oru periya santhosam eanaku meendum nandrigaludan surya

:-) உங்களுக்கு உதவ முடிவதையிட்டு சந்தோஷம் சகோதரி.

யாராவது நம் சமையலைப் பாராட்டினால்... அது கொடுக்கும் சந்தோஷம் இன்னும் சமையலில் ஆரவத்தைத் தூண்டும். அப்படியே உங்கள் அன்றாட சமையலும் சந்தோஷமான வேலையாக மாறும். :-) வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

mikka magilchi anal paratum padi namaku samayal vara matenguthu sagothari eatho seigiren

மேலும் சில பதிவுகள்