முருங்கைப்பூ வடை

தேதி: February 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

முருங்கைப்பூ - 4 கப்
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 100 கிராம்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மல்லிக்கீரை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - சுமார் அரை லிட்டர்
உப்பு - ஒரு ஸ்பூன்


 

பருப்பு வகைகளை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்துவைக்கவும்.
அத்துடன் முருங்கைப்பூவைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு முருங்கைப்பூவை கழுவி நைசாக நறுக்கி அதனுடன் போட்டு நன்கு பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி அதில் போட்டு பொன்னிறமானவுடன் எடுக்கவும்.
இதை தனியாகவோ விரும்பிய சட்னியுடனோ சேர்த்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்