hemoglobin

Hi. Please friends suggest some foods which increase hemoglobin in blood. Sorry for typing in tamil. Mobile update thats why. Thank you

நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா? ரெட் மீட் தான் மிகவும் சிறந்தது என்கிறார்கள். கடும் பச்சை நிறக் கீரைகளை எடுப்பது நல்லது. அவற்றுடன் சிறிதாவது மாமிசம் சேர்த்து எடுத்தால் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவது, தனியே கீரையை உண்ணும் போது உறிஞ்சப்படுவதை விட அதிகம்.

இன்னும் நிறைய விடயம் சொல்லலாம். மற்றச் சகோதரிகள் வந்து சொல்லுவார்கள்.

‍- இமா க்றிஸ்

dates,beetroot,pomegranete,fish,

ரெட் மீட், கீரை வகைகள், பாதாம், மாதுளை, கரும்பு ஜூஸ், டேட்ஸ், ஃபிக், வேர்கடலை மற்றும் வெல்லம், பீட்ரூட், ஆப்பிள் போன்றவை இரும்புச்சத்து தரும் உணவுகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காய்ந்த‌ கருப்பு திராட்சை சாப்பிடுங்கள். முதல் நாள் 5,6 பழங்களை நீரில் ஊறவைத்து அடுத்த‌ நாள் சாப்பிட‌ வேண்டும். 24 மணி நேரம் ஊற‌ வேண்டும்,பழத்தை ஊற‌ வைக்கும் முன் நன்கு கழுவ‌ வேண்டும்.தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட‌ வேண்டும்.அதாவது முதல் நாள் 6 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால் தினமும் அந்த‌ டைம் சாப்பிடனும் அந்த‌ நீரையும் குடிக்க‌ வேண்டும்.இது நான் முயற்சித்தது நல்ல‌ பலன் கிடைத்தது.நீங்களும் முயற்ச்சித்து பாருங்கள்.

நல்லது குறிப்பு.. நான் கருப்பு திராட்சை அப்படியே சாப்பிட்டு வந்தேன்.. Haemoglobin, அதிகரிக்கவில்லை.. இனி ஊற வைத்து சாப்பிட்டு பார்க்கிறேன்..

மேலும் சில பதிவுகள்