ஆர்கமி பார்ட்டி கப்ஸ் - காகித வேலை - அறுசுவை கைவினை


ஆர்கமி பார்ட்டி கப்ஸ்

திங்கள், 20/07/2015 - 16:42
Difficulty level : Easy
5
3 votes
Your rating: None

 

  • சதுரத் தாள்கள் - 15 c.m x 15 c.m
  • பேப்பர் ஸ்கோரர் (PAPER SCORER) / கரண்டி

 

தாள் மற்றும் கரண்டியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சதுரத் தாளை, முதலில் மூலைவிட்டத்தின் வழியே இரண்டாக அழுத்தி மடிக்கவும்.

ஒரு பக்கத்தைப் படத்தில் காட்டியுள்ளபடி கீழிருந்து மேலாக, அந்தப் பக்கத்தின் பாதிக்குச் சற்றுக் கீழே மடிப்பு வரும்படி மடிக்கவும்.

முக்கோணத்தில் அடிக் கோடும் மடிப்பின் மேற்கோடும் சமாந்தரமாக இருக்குமாறு வைத்து அழுத்தி விடவும்.

முழுவதையும் அப்படியே திருப்பி, மறு பக்கமும் அதே போல ஒரு மடிப்பு மடிக்கவும்.

மேலே தெரியும் முக்கோணங்களில் முன்னுக்கு உள்ள துண்டை காட்டியுள்ளபடி முன்னால் மடித்து அழுத்தவும்.

அதை கீழ் மடிப்பின் பை அமைப்பின் உள்ளே சொருகி அழுத்தவும்.

பின்னால் உள்ள முக்கோணத்தை பின் மடிப்பினுள் சொருகி அழுத்தினால் கைக்கடக்கமான சிறிய கிண்ணமொன்று கிடைக்கும்.

ஒரே சமயம் அதிக எண்ணிக்கை கிண்ணங்களைத் தயார் செய்வதாக இருந்தால் அழுத்துவதற்கு நகத்தைப் பயன்படுத்தி (நகத்தைக்) கெடுத்துக் கொள்ளாமல், பேப்பர் ஸ்கோரர் அல்லது ஒரு தேக்கரண்டியின் பின்பக்கத்தைப் பயன்படுத்துவது நல்லது.

கிண்ணங்களை உணவு பரிமாறப் பயன்படுத்தப் போவதால், பாதுகாப்பான தரமான கடதாசிகளைத் தெரிந்து வாங்குவது அவசியம். கைவினை என்று கருதாமல் சமையல் வேலை செய்வது போல பாவித்து, வேலையை ஆரம்பிக்கும் முன்பு கைகளைக் கழுவிக் கொள்ளவும். கிண்ணங்களைத் தயார் செய்தும் ஒன்றுக்குள் ஒன்று சொருகி வைத்துவிட்டால் சேமித்து வைப்பது சுலபம். (எண்ணுவதும் சுலபமாக இருக்கும்.) மீண்டும் எடுக்கும் போதும் உள்ளே கை படாமல் சுத்தமாகப் பிரித்து எடுக்க வசதியாக இருக்கும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..இமா

சூப்பர். பாப்கார்ன் போட்டு கொடுக்கும் பை போல‌ அழகா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேப்பர் கிண்ணம்

அட்மின் யாருக்கோ பார்ட்டி ஐடியா கொடுத்திருந்தாங்க சமீபத்துல. அதுல மிக்க்ஷர் பற்றி சொல்லியிருந்தாங்க வனி. அப்போ இதை அனுப்பத் தோன்றியது.

ஸ்கூல்ல ஒரு சின்னவர் எப்ப கைல பேப்பர் கிடைச்சாலும் கப் மடிப்பார். "I can make paper cups like a pro," என்பார். :-) ஒரு நாள் என்னைப் பிடிச்சு வைச்சு சொல்லிக் கொடுத்தார். ஒரு மஞ்சல் கப்ல ஆட்டோக்ராஃப் போட்டும் கொடுத்தார் பத்திரமா வைக்கச் சொல்லி. :-)

இமா க்றிஸ்

இமா

அப்படின்னா ஒரு குட்டிகிட்ட‌ கற்றுக்கொண்டதா ;) சூப்பரு... அப்படின்னா இப்ப‌ இன்னும் அழகா தெரியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி டீம்

சொல்லிக் கொடுத்தவர் Asperger syndrome இருக்கிற குட்டியர். அவருக்கு, எனக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுத்தது பற்றி ரொம்பப் பெருமை. இந்த போஸ்டை அவருக்குக் காட்டப் போறேன். சந்தோஷத்தில் குதிப்பார். :-)

இமா க்றிஸ்

இமாம்மா

குட்டி பையனுக்கு முதல் தாங்ஸ், இமாம்மா உங்களுக்கு இரண்டாவது தாங்ஸ் எங்க வீட்டு குட்டியர்களுக்கும் கற்றுக் கொடுக்க போறேன், டைய்லி ஈவினிங் ஸ்நாக்ஸ் கூட இதுல கொடுத்தா குஷியாவாங்க.

தேவி

நன்றி. :-) குறிப்பு யாருக்காவது பயனுள்ளதாக இருந்தால் சந்தோஷம். ஃபேஸ்புக்ல இருந்தால்... குட்டீஸ் செய்யும் கிண்ணங்களிம் படம் அறுசுவை க்ளோஸ்ட் க்ரூப்ல போடுவீங்கல்ல! இருக்கீங்களா!!

இமா க்றிஸ்

இமாம்மா சாரி

ரொம்ப சாரி இமாம்மா பேஸ்புக் ல இல்ல நான். லேப்டாப் எனக்கு கிடைக்கும் நேரம் ரொம்ப கம்மி அதனால் அறுசுவை பார்க்கவே நேரம் சரியா இருக்கும். கண்டிப்பா குட்டீஸ் எப்படி செய்தாங்கன்னு அவங்க கமண்ட்ஸ் சேர்த்து போடுறேன்.

ஆர்கமி பார்ட்டி கப்ஸ்

இமா நான் செய்து பார்த்து விட்டேன். அழகாக இருக்கிறது. என் குழந்தைக்கும் சொல்லித் தருவேன். நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

பேப்பர் கிண்ணம்

மிக்க மகிழ்ச்சி திவ்யா & தாமரை செல்வி. இருவருக்கும் என் நன்றி சகோதரிகளே! :-)

இமா க்றிஸ்

பேப்பர் கிண்ணம்

கிண்ணம் சூப்பர் இமா. புக் மார்க் பண்ணிகிட்டேன்.
செய்து பார்த்து படம் காட்டறேன்:))