Valaikappu Kanavu

Frnds, innaiku (21.07.2015) athikalaila (4.30 maniku) enakku oru kanavu athuku enna arthamnu sollunga, athavathu enakku kai niraya valayal pottu valaikappu nadakku, ana veetla vachu illa eatho pothu idathula kootama pottu muduchudu nan enga chithi veetla ukanthurukkean, ellarum eatho thukka veetuku poitu vanthu kulikiranga, appuram en kail moonu valaiyal mattumthan irukku naney atha amukki udachurean appadiye elunthuruchutean. please pathil therunchavanga sollunga frnds manasu nerudalavey irukku.

//pathil therunchavanga sollunga// என்று கேட்டு இருக்கிறீங்க. எனக்கு என்ன அர்த்தம் என்று சொல்லத் தெரியாது. //manasu nerudalavey irukku.// ம்.. கனவுகள் எதனால் வருகின்ற என்று தெரியாது. சம்பந்தமில்லாத கனவுகளெல்லாம் கண்டிருக்கிறேன். எனக்கு உண்மையில் இவை பற்றிய நம்பிக்கைகள் என்று எதுவும் கிடையாது.

உங்கள் மனம் சஞ்சலப்படுவதால் என் காதில் விழுந்த மற்றவர்கள் சொல்வதை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறேன். இதுவே முழுவதும் நல்ல கனவாக வந்திருந்தால் இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றியிராது இல்லையா! சந்தோஷமாக நாளைத் தொடர்ந்திருப்பீர்கள். சங்கடம் கனவில் வந்த சரியில்லாத நிகழ்ச்சிகளால்தானே! கனவில் சரியில்லாதது வந்தால் நிஜத்தில் நல்லது நடக்கும் என்பார்கள். யோசிக்காம இருங்க. ரொம்பவும் சிரமமாக இருந்தால், ஒரு நடை கோவிலுக்குப் போய் உங்கள் மனக் கவலையை அங்கே இறக்கி வைச்சுட்டு வாங்க. பிறகு மனசு சரியாகிரும். இதையே நினைச்சுட்டு இருக்காம மனதை மாற்ற உங்களுக்குப் பிடிச்ச வேலை ஏதாவது செய்யுங்க. சும்மா சும்மாவெல்லாம் யோசிக்கக் கூடாது குட்டிப்பெண்ணே!

‍- இமா க்றிஸ்

சங்கீதா ஹாய்
சாரி கனவு பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. மனசு நெருடலாவே இருக்குன்னு சொன்னதும் இத சொல்லனும்னு தோணுச்சு பெரியவங்க சொல்வது நல்லதோ கெட்டதோ கண்ட கனவு முழுவதும் நினைவில் இருந்தால் அத பற்றி நினைக்கவே வேண்டாம் நிச்சயம் பலிக்காதுனு. நீங்க அப்படியே சொல்றீங்க கனவை. நீங்க எதையும் நினைச்சு கவலைப்பட வேண்டிய நேரமில்லை மனச ரிலாக்ஸா வச்சுக்கோங்க. இமாம்மா சொன்னது போல கோவிலுக்கு போய்ட்டு வாங்க. மனசு லேசாகும்.

கண்டபடி கெட்ட‌ க‌னவுகள் வந்திருக்கு எனக்கு. உங்களை போல‌ பல‌ நாள் தூக்கமின்றி தவித்திருக்கிறேன். படுத்தா கனவு வரும்னு விடியும் வரை படிச்சுட்டு விடிஞ்ச‌ பின் தூங்க‌ போவேன். அது ஒரு காலம். கனவுகள் நம் மனதில் உள்ள‌ எண்ணங்களின் வடிவமே. அதை நினைத்து கவலை தேவை இல்லை. என் அம்மா சொல்வாங்க‌, கனவை சொன்னா பலிக்காதுன்னு. அதனால் நான் கெட்ட‌ கனவு வந்தா உடனே அம்மாக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்... அது பலிகாதில்ல‌ :) அது மாதிரி இப்ப‌ நீங்க‌ எங்க‌ எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்க‌, பலிக்காது... பயப்படாம‌ இருங்க‌. கூடவே கனவில் கெட்டது கண்டா நல்லது நடக்கும் என்றும், நல்லது கண்டா கெட்டதுன்னு சொல்வாங்க‌. அப்படி பார்த்தாலும் நீங்க‌ கண்ட‌ கனவுக்கு நல்லது தான் நடக்கும். மனசுக்கு குழப்பமா இருந்தா கோவிலில் ஒரு தேங்காய் உடைங்க‌. கடவுள் உங்களை எந்த‌ கெட்டதும் நெறுங்காம‌ காப்பார்... அன்புடன் பிராத்தனைகளும் உங்களுக்காக‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Ippo manasuku aruthala irukku imma sis

Ippo manasu relaxa irukku vani

அன்புள்ள‌ சங்கீதாவுக்கு,
புதிய‌ தோழியான‌ உங்களுக்கு இறைய‌ருளால் எல்லா நலமும் கிடைத்து இனிதே வாழ‌ எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் உரியதாகுக‌.
இரவில் படுக்கும் முன் இறைவனை வழிபட்டுப் படுங்கள்
கிழக்கு மேற்காக‌ தலை கால் வைத்துப் படுக்க‌ வேண்டும், (வடக்கே தலையும் தெற்கே காலும் வைத்துப் படுக்கக்கூடாது, அறிவியல் ரீதியாகவே
காந்த‌ ஈர்ப்பு விசை நரம்பு மண்டலத்தை பாதித்து விடும், நடுத் தலையில் குத்தி
இழுப்பது போல‌ சிலருக்கு நடுஇரவில் வலி ஏற்படும். அது போல‌ கோண‌ திசைகளிலும் தலை வைத்துப்படுக்கக் கூடாது.
பழைய‌ கால‌ வீடானால் உத்திரம் வைத்துக் கட்டிய‌ வீடானால் உத்திரத்தின்
கீழே தலைவைத்துப் படுக்கக்கூடாது.
இவை எல்லாம் படுக்கும் முறைகள்.
அடுத்து உங்கள் கனவு,
இன்று ஆடிச் செவ்வாய்க் கிழமை.நீங்கள் அம்மன்
வழிபாடு செய்பவராக‌ இருந்தால் கை நிறைய‌ கண்ணாடி வளையல்களையும்
மஞ்சள் குங்குமம் பூ பழம் வெற்றிலை பாக்கு மனசுக்குப் பிடித்திருந்தால் தேங்காயையும் கொண்டு
சென்று பக்கத்தில் உள்ள‌ உங்களுக்குப் பிடித்த‌ அல்லது வழக்கமாகச் செல்லும்
அம்மன் கோயிலில் ஒரு அர்ச்சனை செய்து ஒரு டஜன் வளையலை அம்மன்
முன்னலேயே உங்கள் கையில் அணிந்து கொள்ளுங்கள், மீதி வளையலை
நல்ல‌ கயிற்றில் கட்டி கோவிலில் மரம் இருந்தால் மரத்தில் கட்டி விடுங்கள்.
ஒரு மூன்று டஜன் வளையலாவது வாங்கிப்போங்கள். ஒரு பத்து நாளைக்கு
அனாவசியமாக‌ வெளியில் எங்கும் போகாதீகள். ஆடி மாதம் ஆனதால்
செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் செய்யலாம்.
தேவையில்லாமல் கனவைப் பற்றி யாரிடமும் பேசவேண்டம்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

//தேவையில்லாமல் கனவைப் பற்றி யாரிடமும் பேசவேண்டாம்.// பூங்கோதை சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். இது முக்கியமான விஷயம் சங்கீதா. ஆள் ஆளுக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் சொல்ல, தேவையற்ற பயம் வரும். அதனால் பேசாமல் மறந்து விடுவது தான் நல்லது.

‍- இமா க்றிஸ்

Rompa nandri Ponkothai kannammal

sari imma amma

நான் கிராமம், அதுவும் போக‌ நான் வேலைக்கு செல்கிறேன் அதனால் எங்கள் உள்ளூரில் உள்ள‌ காளியம்மன் கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி செல்வேன். எனக்கு குழந்தை வேற‌ இல்லை அதனால் நான் செவ்வாய் வெள்ளி கனிவிளக்கு போடுவேன் அதோடு சேர்த்து இன்னைக்கு வளையல் வாங்கி போடட்டுமா ஆனா அங்க‌ அர்ச்சனை பண்ண‌ மாட்டாங்க‌ பரவாயில்லையா

மேலும் சில பதிவுகள்