தாமரைச்செல்வி கவிதைகள் - 5 - அறுசுவை கவிதை பகுதி - 31973

Kavithai Poonga

தாமரைச்செல்வி கவிதைகள் - 5

தாலாட்டு

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே
காலமது காத்திருக்கு
கண்ணுறங்கு மகனே

வீரத் திருமகனே
வித்தையில் வித்தகனே
நாடு போற்றும் குணமகனே
நல்லோர் நன்மகனே
காலைக் கதிரோனே
மாலை மதியோனே

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே

நாட்டுப்புற கலைகள் எங்கே
நல்லதங்காள் கதைகள் எங்கே
ஏடரித்து போனதிங்கே
ஏதும் சொல்ல வழியில்லையே
நாடாளும் மன்னவரோ
நல்லவர் இல்லையென
நாளும் தவமிருந்தார்
நீ வரும் நாளையெண்ணி

கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே
காலமது காத்திருக்கு
கண்ணுறங்கு மகனே

விவசாயம் செய்யவுமே
வழியில்லை என்றழுதார்
வீடில்லா வறியவரும்
வாழ வழியில்லையென்றார்
வீரமகன் வருவானென்று
வாழ்கின்றார் உனக்காக
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே
காலமது காத்திருக்கு
கண்ணுறங்கு மகனே

- தாமரைச்செல்வி

குழந்தை மனம்

கவலையில்லா உலகம் படைக்க வாருங்கள்
கைகோர்த்து குழந்தைகளாய் மாறுங்கள்
கள்ளம் கபடமில்லா சிரிப்பிலே
கவலைகள் மறந்து போகும் பாருங்கள்
கொஞ்சி கொஞ்சி பேசும் தத்தை மொழியிலே
கயமைகள் தோற்றுப் போகும் கேளுங்கள்

கோபத்தை கணப்பொழுதில்
மறந்து போகும் குணமதனை
கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்

கஷ்டமான வேலையையும்
இஷ்டமாய் செய்யும்
குழந்தையின் அறிவைப் போற்றுங்கள்

காற்றையும் கடலையும்
விளையாட அழைக்கும் கண்மணிகளை
வியந்து நோக்குங்கள்

- தாமரைச்செல்வி

 கவிதை - ரொம்ப நன்றி அட்மின்

வாவ்....... இவ்வளவு சீக்கிரம் வெளியிடுவீர்கள் என்று நினைக்கவேயில்லை. ரொம்ப நன்றி அட்மின்.
இதை ஒரு தாலாட்டு பாடல் போலவே எழுதி இருக்கிறேன்.
ஆராரோ ஆராரோ... ஆராரோ ஆராரோ... என்ற மெட்டில் பாடலாம்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வாவ்....... இவ்வளவு சீக்கிரம்

வாவ்....... இவ்வளவு சீக்கிரம் வெளியிடுவீர்கள் என்று நினைக்கவேயில்லை. ரொம்ப நன்றி அட்மின்.

c b கேசவன்...

:-) ட்ரையல் இடுகையா! :-)

கமண்ட் பாக்ஸ்ல க்ளிக் பண்ணினதும் type method என்று வரும். Tamil ponetic செலெக்ட் செய்துவிட்டு தட்ட ஆரம்பிங்க. ஏற்கனவே உள்ள கமண்ட்டையே திரும்ப எடிட் பண்ணலாம். பண்ணுங்க. இல்லாட்டா தாமரை குழம்பிரப் போறாங்க. :-)

இமா க்றிஸ்

arumai

Kavidhai arumai