வெஜிடபுள் பிரியாணி

தேதி: July 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

அரிசி - 2 கப் (அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்
மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - 3 3/4 கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
தாளிக்க :
எண்ணெய்
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய்


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
அதன் பிறகு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து சீராக பிரட்டவும்.
பிறகு ரைஸ் குக்கரில் தேங்காய் பால், பிரட்டி வைத்துள்ள அரிசி சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் முந்திரியை நெய்யில் வறுத்து அதில் சேர்த்து கிளறவும்.
சுவையான வெஜிடபுள் பிரியாணி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு நித்யா.வெஜ் பிரியாணி

Be simple be sample

குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி.

நன்றி Revathi