3 maadha kuzhandhai

en magal pirandha 15 naalil paal sariyaga kudikamal migavum kastapattu vittal.. 3 kg la irundhu 2 kg agitta.. hospital admit panni 5 days kazhichu dhan 400 gram adhigamachu... ippo 3rd month start aga pogudhu...

night lam muzhikira.. morning kulika vecha udane thoonga arambicha evening varaikum thoongura.. adicha kooda muzhika matra... ennoda milk express panni ooti viduven paadhi paal keela dhan pogum ...

enaku bayamave iruku marubadiyum adhe problem vandhudum nu... 3rd month baby evlo milk thevaipadum... 5 minutes mela kudika matra thoongura... bayama iruku enaku...

enakum low bp night fulla muzhichi paarthukaren morning sariya feed panna mudila ...

please advice venum... 3rd month evlo milk papa intake edukanum... 4 th month la irundhu enna enna kodukalam...

முன்பு இப்படி ஆனது எதனால் என்று மருத்துவர்கள் சொன்னார்களா? இப்போது இப்படி இடைவிடாமல் தூங்குவது எவ்வளவு நாட்களாக‌? இப்போது மருத்துவரிடம் காட்டினீர்களா? குழந்தைகள் எவ்வளவு நேரம் பால் குடிக்கிறார்கள் என்பது கணக்கில்லை சரிதா (உங்கள் பெயர் சரியா?). வயிற்றுக்கு தேவையான‌ பால் கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். ஒருவேளை குறைவாக‌ குடிப்பதாக‌ தோன்றினால் அடிக்கடி கொடுக்கலாம். தூங்கினாலும் எழுப்பி கொடுக்க‌ முயற்சியுங்கள். சிறு பிள்ளைகள் தூங்குவது உண்டு தான். ஆனால் காலை முதல் மாலை வரை என்பது சற்று கூடுதலாகவே தெரிகிறது. நீங்கள் ஏதும் மருந்து எடுக்கிறீர்களா? சில‌ நேரம் தாய் எடுக்கும் மருந்தினால் கூட‌ பிள்ளை வெகு நேரம் தூங்கும் என்பார்கள். எது எப்படி இருந்தாலும் மருத்துவரிடம் காட்டிவிடுவது மேல். ரொம்ப‌ சின்ன‌ பிள்ளை பாருங்கள்.... சிரமம் இல்லாமல் காட்டிவிடுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சில‌ குழந்தைகள் பாலைச் சப்பிக் குடிக்க‌ உதட்டில் பலமில்லாமல் இருக்கலாம், ஓரளவு வயிறு நிறைந்தவுடன் தூங்கிவிடுவார்கள். அதனால்
உங்கள் பாலையே பாலாடையில் எடுத்து பாலாடையாலேயே குழந்தைக்கு
புகட்டி விடுங்கள்.பயம் வேண்டாம். குளிப்பாட்டியதுமே சிலகுழந்தைகள்
தூங்கிவிடுவார்கள். அது ஒன்றும் பெரிய‌ விசயமே இல்லை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்