periods doubt

அன்பள்ள சகோதரிகளுக்கு எனது சந்தேகதிற்கு பதில் சொல்லவம் நேற்று எனக்கு periods வந்தது நான் மலைவோம்ப சாறு இன்று காலை குடித்தேன் பிறகு periods சில கட்டிகள் உடன் வருகிறது ஏன் இப்படி வருகிறது இது தான் முதல் முறையாக கட்டிகள் வருகிறது பயமாக உள்ளது அது grey colour கட்டிகள் blooding thik ah
வருகிறது இது normal தானா please clear my doubt..

Periods varathukku 1maruthum illaya

எனக்கு 26 டொ 29 பிரியட்ஸ். போன மாதம் 31 நாள் வந்தது. இந்த மாதம் 33 நாள் வந்தது.. கடந்த 3 மாதமாக பிரியட்ஸ் வருவதற்கு 2 நாள் முன் தயிர் போன்று வெள்ளை படுகிறது. அப்பொது அரிப்பும் உள்ளது.. இன்று 3 நாள். ரத்தம் கட்டி கட்டியாக போனது.. என்னக்கு என்ன ப்ரொப்லெம்.. Please tell me friends if u know...

Please help me pa..

காலையில் இளநீர் குடிங்க தினமும் .உடல் சூடு இருந்தாலும் இப்படி ஆகும். நிறைய பேருக்கு பீரியட்ஸ் முன்னாடி வெள்ளைபடும். கட்டி கட்டியாக போகும். இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அன்புள்ள‌ ஜோதிக்கு மாதவிலக்கு சில‌ நேரங்களில் மனப் பதற்றம்,
உணவில் மாற்றம், ஓயாத‌ அலைச்சல் காரணங்களினால் மூன்று நான்கு
நாள்கள் முன் பின்னாக‌ ஆவது உண்டு. அது குறித்து பயம் தேவையில்லை.
அரிப்பு, ரத்தம் கட்டி கட்டியாக‌ வெளியாதல் அதனால் ஏற்படும் வலித்தொந்தரவுகள் தீர‌ எளிமையான‌ வழி முருங்கைக் கீரையை மாதவிலக்கிற்கு முன்னால் இரண்டு நாள்கள் சாம்பார், கூட்டு, பொரியல்
என்று ஏதாவது ஒரு வகையில் உண்டால் மேற்கூறிய‌ தொல்லைகள் தீரும்.
முடிந்தால் மாதவிலக்கு ஆகும் அனைத்து நாள்களிலும் அரைகப் முருங்கைக்
கீரையை முன் சொல்லியவாறு சாப்பிடுங்கள். விரைவில் சீராகும்.
வேப்பிலை, மஞ்சள் தூள் இரண்டையும் நீரில் இட்டு கொதிக்கவைத்து
அந்த‌ நீரை மாதவிலக்கு நாள்கள் முழுவதும் கைகால் கழுவப்(புரியும் என்று
நினைக்கிறேன்) பயன்படுத்துங்கள்.அபி சொன்னது போல‌ இள நீரில் முதல்
நாள் இரவு (காயில் ஓட்டை போட்டு) அரை தேக்கரண்டி வெந்தயத்தைப்
போட்டு நன்கு மூடி வைத்துவிட‌ வேண்டும், அடுத்த‌ நாள் காலையில்
அந்த‌ ஊறின‌ வெந்தயம்+இளநீர் இரண்டையும் ஒரு நான்கு நாளைக்கு சாப்பிட‌
வெள்ளைத்தொந்தரவு இல்லாமல் போகும். முயன்று பாருங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப நன்றி பா.. நான் ரொம்ப பயந்துடு இருந்தேன். நீங்க சொன்ன மாதிரி செய்து பார்கிறேன் பா.. தினம் ஒரு இளநீர இவ்வாறு செய்ய வேன்டுமா அல்லது ஒரு இளநீரை சிறிது சிறிதக குடிக்க வென்டுமா..

பூங்கோதை அம்மா சொன்ன மாதிரி இரவு ஓட்டை போட்டு வெந்தயம் போட்டு மூடி வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளநீரையும் வெந்தயத்தையும் குடிக்க வேண்டும்.4,5 நாட்களுக்கு இதே போல செய்ய வேண்டும்.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்