வரகு பெசரெட்

தேதி: August 7, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (2 votes)

 

சிறுபயறு - 100 கிராம்
வரகு - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
அலங்கரிக்க :
வதக்கிய பெரிய வெங்காயம்
கொத்தமல்லித் தழை
உள்ளே வைக்க :
ரவா உப்புமா


 

பயறு, வரகு இரண்டையும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து வதக்கிய வெங்காயம், மல்லித் தழை தூவவும்.
வெந்ததும் நடுவில் ரவா உப்புமா வைத்து மடிக்கவும்.
சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு பெசரெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நிகிலா..
நீங்கள் உங்களது சிறுதானியங்கள் பற்றிய‌ வலைப்பதிவில் சொல்லியிருந்த‌ வரகு பெசரட் ப‌டித்துவிட்டு நேற்று முன் தினம் செய்தேன்..நல்ல‌ சுவையாக‌ இருந்தது..
வழக்கமாக‌ செய்வதை விட‌ மொறுமொறுப்பாக‌ நன்றாக‌ வந்தது..நான் சிறுபயறு முளை கட்டி செய்தேன்..
நன்றி தோழி..:‍‍‍‍‍‍‍‍‍‍‍‍)

அன்புடன்,
கவிதாசிவகுமார்.

anbe sivam

Intha mathri dish ipathan kelvi padren... Super nikila akka...

சூப்பரா இருக்கு நிகி. அருமையா செய்து காட்டி இருக்கீங்க‌. சத்தான‌ உணவு.

எல்லாம் சில‌ காலம்.....

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி.:))
நானும் இரவிலே ஊறப் போட்டால் காலையில் சிலது முளை விட்டிருக்கும்.
ச‌த்தான‌ டிபன் இது.

. இது ஆந்திரா டிஷ் தோழி
இனி செய்து அசத்துங்க‌.
பதிவுக்கு நன்றி தோழி:)

பாராட்டுக்கு நன்றி :))
செய்து சுவைத்து பாருங்க‌.

Supernga :) micham irukadhaiyum ningalum revsm serndhu anupidunga :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாராட்டுக்கு நன்றி.
செய்து பார்த்து சொல்லுங்க‌ வனி.
சோள‌ அடை அனுப்பியிருக்கேன் :)