பனீர் சாண்ட்விச்

தேதி: February 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பனீர் - 300 கிராம்
பிரெட் துண்டுகள் - 8
மல்லிக்கீரை - ஒரு கட்டு
மைதா - ஒரு ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
பெப்பெர் சாஸ் - 2 ஸ்பூன்
முளைகட்டிய பச்சை பயிறு - ஒரு பிடி
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - அரை ஸ்பூன்


 

பனீரை உதிர்த்துவிட்டு, அத்துடன் சாஸ் வகைகள், தூள் வகைகள், முளைகட்டிய பச்சை பயிறு, பொடியாக நறுக்கிய மல்லிக்கீரை, மைதா, உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு ப்ரெட் துண்டின் மேல் இரு பக்கமும் வெண்ணெயை தடவி அதன் மேல் பனீர் கலவையை வைத்து பரப்பி, வெண்ணெய் தடவிய இன்னொரு ப்ரெட் துண்டை அதன் மேல் வைத்து மூடி ப்ரெட் டோஸ்டரில் வைத்து சுட்டு சூடாக பரிமாறவும்.


டோஸ்டர் இல்லாவிட்டால், தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டுக்கொண்டு, இருபுறமும் பொன்முறுவலாக சிவக்கவிட்டு எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்