wedding anniversary

<!--break-->Hi friends tomorrow is my first wedding day

Happy wedding anniversary dear friend.. May your love forever last...

Happy wedding anniversary
may God bless you

பரணிகா:)

Thanks jenisa and paranika

Honesty is the best policy

jenisha

happy married life , wish a happy and heartfull wishes to you both.
God bless u and ur family.

Thanks sanjanasam

Honesty is the best policy

Hi frnds today engaluku 2nd wedding day but nanum en husband um wish panala.theriadha mathiri irundhutam.baby vera ila enaku marriage life pidikala athan na wish panala.enaku epo pidikidho apo wedding day nalla celebrate panikalam nu vituten.Ivar elarkume wish panuvaru avanga veetla irukavangaluku but engaluku baby iladhanala yarume phone panala.avangala ipdi irukadhu enaku pidikala but Ivar avangaluku than support panuvaru.ithe verupairuchu pa.

முதலில் உங்கள் இருவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்.

//nanum en husband um wish panala.// அவரை விட்டுருங்க, நீங்க விஷ் பண்ணியிருக்கணும். இப்பவும் லேட் இல்லை. சர்ப்ரைசா ஏதாச்சும் ஸ்வீட் பண்ணுங்க. கொடுத்து விஷ் பண்ணுங்க.

//theriadha mathiri irundhutam.// தப்பு. ;(( அதுவும் பன்மையில் சொல்றது இன்னும் பெரிய தப்பு.. :-) உங்களுக்கு உங்கள் மனம் மட்டும் தானே தெரியும்? எப்படி 'இருந்துட்டம்' என்பீர்கள்? 'இருந்துட்டேன்' என்று ஒருமையில் சொல்லுங்க.

//baby vera ila// இது உங்கள் கணவரது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நீங்கள் இருவரும் ஒருவர் ஒருவரை எந்த அளவு சந்தோஷப்படுத்துகிறீர்களோ அந்த அளவு குழந்தை கிடைக்கும் சாத்தியம் அதிகரிக்கும்.

//enaku marriage life pidikala// ஏன்? மாப்பிள்ளை பிடிக்கலயா? அதைக் கலியாணத்துக்கு முன்னால வீட்ல சொல்லி இருக்கணும். கட்டினதுக்கு 2 வருஷம் பிறகு முரண்டு பிடித்தால் நஷ்டம் உங்களுக்குத் தான்.

//epo pidikidho apo wedding day nalla celebrate panikalam// :-) சந்தோஷங்களைத் தள்ளிப் போடக் கூடாது. நாளை எங்களுக்காக எதைத் தட்டில் வைத்துக் காத்திருக்கிறதோ!

//but engaluku baby iladhanala yarume phone panala.// யாராச்சும் சொன்னாங்களா, 'உங்களுக்கு பேபி இல்லை. அதனால் விஷ் பண்ண மாட்டோம்,' என்று? நீங்களாக கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். நீங்களே விஷ் பண்ணலயாம். பிறகு மற்றவங்க விஷ் பண்ணணும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

//avangala ipdi irukadhu enaku pidikala// எப்படி இருக்கிறது? உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உறவு உறவுதான். அவங்களைப் பிடிக்கல என்று உங்கள் மணநாள் சந்தோஷத்தைக் கெடுப்பீர்களா?

அவங்க மறந்திருக்கலாம் கண்ணா. நானும் நினைவு வைச்சு வாழ்த்து அனுப்புறது உண்டு. ஆனால் எனக்கு வருவது மிகமிகக் குறைவு. அதற்காக என் உறவு நட்பு எல்லாம், வேணும் என்று எனக்கு விஷ் பண்ணல என்று எப்படி நினைக்கிறது? அவரவர் பிரச்சினை அவரவருக்குத் தான் தெரியும்.

ஒன்று... உங்க உறவுகள் தேதியை மறந்திருக்கலாம். அல்லது... உங்கள் நடத்தை மாற்றங்கள் அவங்களுக்குப் புரிந்ததில் ஏன்ன செய்தால் உங்களுக்குப் பிடிக்கும் என்பது புரியாமல் சங்கடத்தினால் விஷ் பண்ணாமல் தவிர்த்திருக்கலாம். ஒரு வேளை அவங்க விஷ் பண்ண, நீங்க இருக்கிற மூட்ல, 'நான் அனிவேசறி செலிப்ரேட் பண்ற மூட்ல இல்லை,' என்று சொல்லிட்டீங்கன்னா!! :-) எனக்கு இந்த அனுபவம் இருக்கு. ஒரு தடவை ஒருத்தருக்கு ஃபோன்ல பேத்டே விஷ் பண்ணேன். 'நான் கொண்டாடுற மனநிலைல இல்லை,' என்று சொன்னாங்க. :-) எப்பிடி ரியாக்ட் பண்றது? சங்கடமான நிலமை. :-)

இதே நிலையில் தான் உங்கள் கணவரும் இருக்கிறாரோ என்னவோ! அவர் பாவம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

//.ithe verupairuchu pa.// சந்தோஷம் வெளியே இருந்து வருவதில்லை கண்ணா. அது எமக்குள்ளேயே தான் இருக்கிறது. அழகான பெயர் உங்களது. ஜோதி... ஜோதியைத் தூண்டிப் பிரகாசிக்க வைப்பதும் அமர்ந்து போக வைப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

ஜோதி திருமணநாள் வாழ்த்துக்கள் பா.

இப்போ நீங்க‌ கன்சிவ்வாக‌ தானே இருக்கீங்க‌.வேரோரு பக்கத்தில் நீங்க‌ 7வாரம் 2நாள் கர்ப்பமாக‌ உள்ளேன் என்ற‌ பதிவை சொல்லியிருந்தீர்கள்.கன்சீவ்வா இருக்கும் போது ஏன் குழந்தை இல்லனு கவலை படுரீங்க‌.அப்போ உங்களுக்குள்ளே உங்கள் குழந்தை வளர்கிரது இந்த‌ மாதிரி நேரத்தில் இப்படி கவலையாக‌ இருக்கலாமா.

வரப்போகும் குழந்தையை நினைத்தும் திருமணநாளையும் சந்தோசமாக‌ கொண்டாடுங்கள்.கோவிலுக்கு போய்ட்டு வாங்க‌.

Nit wish paniten ma.enaku en husbanda remba pidikum enga Amma Appa va Vida.but mamanar mamiyar starting LA irundhen problem panikite irupanga.athan life pidikalanu sonen.

OK suvathi thanks

மேலும் சில பதிவுகள்