தினைப் பணியாரம்

தேதி: August 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

தினையரிசி - முக்கால் டம்ளர்
பச்சரிசி - கால் டம்ளர்
தேங்காய் துருவல் - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று
வெல்லம் - தேவையான அளவு
சோடா உப்பு - சிறிது
நெய் - தேவையான அளவு


 

தினையரிசி, பச்சரிசி இரண்டையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
ஊறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு அவற்றோடு தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்து எடுத்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு புளித்ததும் அதில் வாழைப்பழம், வெல்லம், சோடா உப்பு சேர்த்து பிசையவும்
குழிப்பணியாரக்கல்லில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றவும். சிறிதளவு நெய் போதுமானது.
வெந்ததும் திருப்பி விட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு எடுத்து விடவும்.
சுவையான தினைப் பணியாரம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா நிகி. முகப்பு கலை கட்டுதே. சூப்பர் நிகி. பணியாரம். மேலும் தொடரனும்.

Be simple be sample

களை கட்டுதா ??
தொடர‌ முயற்சிப்போம்:))
நன்றி.

நிகி,
வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி சேர்க்கலாமா?
என் பையனுக்கு வீசிங் தொந்தரவு இருக்கு.

தாராளமா சேர்க்கலாம்.
சர்க்கரை தான் உடலுக்கு நல்லதல்ல‌.
கருப்பட்டி ரொம்பவும் நல்லது தானே தோழி
செய்து பார்த்து சொல்லுங்க‌. கட்டாயம் பிடிக்கும்:)

அன்பு நிகிலா..
இன்று காலை உங்க‌ தினைப் பணியாரம் செய்தேன்..என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ரொம்ப‌ பிடிச்சு போச்சு:))ரொம்ப‌ சுவையா இருந்ததுங்க‌..
சின்னவ‌(3 வயசு) எடுத்து சாப்டுக்கிட்டே இருந்தா..
என் கணவருக்கு இந்த‌ மாதிரி சிறுதானிய‌ உணவுகள்னா அலாதி பிரியம்..எனக்கும் தான்;))
அப்பப்ப‌ செய்றதுண்டு....இனி தினசரி சாப்பாட்டுல‌ சிறுதானியங்கள் சேத்துக்க‌ முயற்சி செய்றேன்..
குறிப்புக்கு நன்றி தோழி..:))
அன்புடன்,
கவிதா சிவகுமார்

anbe sivam

நன்றி நிகி.
கண்டிப்பாக செய்வேன். என் கணவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். அதனால் கண்டிப்பாக செய்றேன் பா.

அன்பு கவிதா
//இன்று காலை உங்க‌ தினைப் பணியாரம் செய்தேன்..என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் ரொம்ப‌ பிடிச்சு போச்சு:))ரொம்ப‌ சுவையா இருந்ததுங்க‌..
சின்னவ‌(3 வயசு) எடுத்து சாப்டுக்கிட்டே இருந்தா..
என் கணவருக்கு இந்த‌ மாதிரி சிறுதானிய‌ உணவுகள்னா அலாதி பிரியம்..எனக்கும் தான்;))//

வாவ்......
ரொம்பவும் சந்தோஷம் பா.

செய்த‌தோடு நில்லாமல் இங்கே வந்து சந்தோஷமா சொன்னீங்க‌ பாருங்க‌..:)
அதிலும், உங்க‌ குட்டிப் பொண்ணுங்களுக்கு பிடித்தது குறித்து எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. நன்றி கவி.

செய்துட்டு எப்படி இருக்கு நு வந்து சொல்லுங்க‌ தோழி.:)