தேவையான பொருட்கள்
- மக்ரோனி ட்யூப்கள் - 1 கப்
- எலும்பு நீக்கிய கோழிக்கறி - 1 கப்
- உருளைக்கிழங்கு - 150 கிராம்
- துருவிய சீஸ் - 1 கப்
- முட்டை - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
- மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
- மிளகுத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
- தைம் இலை(காய்ந்தது) - 1 ஸ்பூன்
- ரஸ்க் தூள் - 2 கப்
- உப்பு - 2 ஸ்பூன்
|
செய்முறை
- மக்ரோனியை தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேகவைத்து மசிக்கவும்.
- உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துவிட்டு மசித்துக்கொள்ளவும்.
- எலும்பு நீக்கிய கோழிக்கறியை தூள் வகைகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
- இவையனைத்தையும் துருவிய சீஸுடன் சேர்த்து நன்கு பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கலக்கிய முட்டையில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டியெடுத்து ஃப்ரீஜரில் சுமார் 4 மணி நேரம் வைக்கவும்.
- பிறகு சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
|
குறிப்பு:
பொரிக்கும்போது எண்ணெய் போதுமான சூடு இல்லாவிட்டால் வெடித்து களைந்து போகலாம். அதனால் நல்ல சூட்டில் பொரிக்கவும்.
வழங்கியவர்
அஸ்மா ஷர்ஃபுதீன்,ஃபிரான்ஸ்.
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு நிமிடம் 33 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
39 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -