சுபிதா கவிதைகள் - 14 - அறுசுவை கவிதை பகுதி - 32134

Kavithai Poonga

சுபிதா கவிதைகள் - 14

தாயின் தவிப்பு.....

பண்டிகைக்கு
ஓடி ஆடி வித விதமாய் சமைத்து
எல்லோருக்கும் பரிமாறிவிட்டு
சாப்பிட தன் வாய் அருகே
கொண்டு செல்லும் போது

மணமுடித்து கொடுத்த
தன் ஆசை மகளின் முகம்
கண்முன்னே வந்து
கண்ணீராய் ஓரத்தில் வடிகிறது.......

- M. சுபி

மழலை

பொம்மை வேண்டும்
என்று அழுதது குழந்தை
அதனிடம் முத்தம் வேண்டும்
என்று அடம்பிடித்தேன் நான்
ஜெயித்தது இருவருமே.....

தேனின் சுவை
அலாதியானதா என்ன?
நீங்க நாளைக்கு வந்தீங்களே என்ற
மழலையின் சொல்லை விட......

- M. சுபி

 
பூவும் நானும்

பூவும் நானும் ஒன்றுதான்,
முகம் மலர்கிறேன்
உன் நினைவால்,
வாடி போகிறேன்
உன் பிரிவால்

- M. சுபி

மெழுகுவர்த்தி !

உருகி உருகி வேண்டினேன்
என் வேண்டுதலுக்கு
மனமிறங்கி
உருகிப்போனது
மெழுகுவர்த்தி........

- M. சுபி

 
திகில்

இதயத்தின்
லப் டப் ஓசையும்

கடிகாரத்தின்
டிக் டிக் சத்தமும்

திகில் படம் பார்க்கும்
உணர்வை கொடுக்கின்றன

நிசப்தமான நடு இரவில்
தூக்கத்தில் விழிக்கும் போது........

- M. சுபி

 
 subi sako

congrats...yellaa kavithaiyum nandraaha irukku..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றிகள் பல,

அறுசுவை டீம் அண்ட் பாபு அண்ணாக்கு எனது நன்றிகள்,
மறுபடியும் எனது கவிதைகளை வெளியிட்டதற்க்கும் என்னை தொடர்ந்து ஊக்கபடுத்தியற்க்கும் நன்றி.

இவை எனது 50- வது கவிதைகள் மிகவும் சந்தோசம், எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவு தான் காரணம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அறுசுவை குடும்பம்

உங்களுடைய ஆதரவும், தொடர்ந்து உற்சாக படுத்தியதன் விளைவே
எனது கவிதைகள் 50 கவிதைகளை தாண்டி வந்துள்ளது.

அறுசுவை குடும்பத்தில் உள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றி,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Subi

50 வது கவிதையா. வாழ்த்துக்கள். இன்னும் பல படைப்புகள் அனுப்புங்க. எல்லா கவிதையும் சூப்பர்.

Be simple be sample

சுபி

50 வது கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழி

அன்பு சுபி

அரை சதம் அடித்த‌ சுபிக்கு வாழ்த்துக்கள்
மழலை கவிதை டச்சிங்கா இருக்கு. அதைப்படிக்கும் போது எனக்கு குழலினிது யாழினிது,, அப்புறம் சிறுகை அளாவிய‌ கூழ் ரெண்டு குறளும் நினைவுக்கு வந்துச்சு.:))
சூப்பர் சுபி

ரேவா சிஸ்,

ம்ம் , தாங்க்ஸ் கா.
வருகைக்கும் வாழ்த்திற்கும்........

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஹாய் அபி

ரொம்ப நன்றி,
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நிகி க்கா

ஆமாம் மழலைனு சொன்னாலே டச்சிங் தானே, ம்ம் கண்டிப்பா அந்த குறள் தான் தோணும் ,

தாங்க் யூ சோ மச் கா, உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ஷேக் சார்

உங்கள் வாழ்த்திற்க்கும், பதிவிற்கும் நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *