4 வயது குழந்தை சளி மருந்தை அதிகமாக குடித்துவிட்டான்

என் பையன் 4 வயது. கோல்ட்டர் என்று சளி மருந்தை அரை பாட்டில் அளவு குடித்துவிட்டான். நேற்று இரவு குடித்தான். ஞாயிறு என்பதால் குழந்தை டாக்டர் யாரும் இல்லை. அதனால் நார்மல் டாக்டர்கிட்ட காண்பித்தேன். பவர் கம்மி தான் பயப்படாதிங்கன்னு சொல்லிட்டார். என் யையன் இன்னமும் தூங்குறான். பால் கொடுத்தேன். குடிச்சிட்டு மறுபடியும் தூக்கம் வருதும்மானு படுத்து தூங்குறான். டாக்டர் 9 மணிக்கு தான் வருவார். அதுவரைக்கும் பயமாவே இருக்கும். எதாவது பிரச்சனை வருமா சொல்லுங்கள் தோழிகளே..

//கோல்ட்டர் என்று// அப்பிடின்னா என்ன‌! சொல்றதுக்கு க்வாட்டர் மாதிரி இருக்கு. ;)))

//அரை பாட்டில்// அப்படிச் சொல்லாமல் இன்ன‌ மருந்து, செறிவு இன்னது, குடித்தது இத்தனை மில்லி என்று சொல்ல‌ வேண்டும். பாட்டில் குட்டியூண்டாவும் இருக்கலாம்; பெருசாவும் இருக்கலாம். எப்படி டாக்டர் அரை பாட்டில் கணக்குப் பார்ப்பார்! ம்.. அவருக்கு இன்ன ம‌ருந்துன்னு தெரிஞ்சிருக்கும். அதனால்தான் பயப்படவில்லை.

//என் யையன் இன்னமும் தூங்குறான்.// இல்லை. இடைல‌ எழுந்து //பால்... குடிச்சிட்டு மறுபடியும் தூக்கம் வருதும்மானு படுத்து தூங்குறான்.// அப்போ எழுந்துட்டார்னுதான் அர்த்தம். யோசிக்க‌ வேண்டாம். தூங்கம் முழுசா முடிஞ்சதும் சரியாகி இருப்பார்.

//டாக்டர் 9 மணிக்கு தான் வருவார். அதுவரைக்கும் பயமாவே இருக்கும்.// பயம் தேவையில்லை. அதான் எழுந்துட்டார், சாப்பிட்டு, பேசி எல்லாம் இருக்கார்ல‌! எதுக்கு பயம் இனி! //எதாவது பிரச்சனை வருமா// வரவே வராது.

ஒரே ஒரு பிரச்சினை வரலாம்... சின்னவருக்கு மருந்தின் சுவை பிடித்திருந்தால் பாட்டில்கள் கண்ணில் படும் போதெல்லாம் சுவை பார்க்கத் தோன்றும். மருந்து, மண்ணெண்ணெய், ஷாம்பூ, நிஜ‌ க்வாட்டர், நெய்ல் பாலிஷ் ரிமூவர் இப்படி குழ‌ந்தைகளுக்கு ஆகாதவை மட்டுமல்ல‌ க்ரைப் வாட்டர் போன்றவையும் கூட‌ குழந்தைகள் பார்வை படும்படி வைக்கவே கூடாது. இது உங்களுக்கு ஒரு பாடம். சில‌ குழந்தைகள் மேலே ஏறியும் எடுப்பார்கள். பூட்டும் திறப்புமாக‌ வைப்பதுதான் நல்லது.

ஒரு பிரச்சினையும் வராது. சின்னவர் தூங்கினாலும் நேரத்துக்கு நேரம் எழுப்பி பால், சாப்பாடு கொடுக்கப் பாருங்கள். உடலிலுள்ள மருந்தின் செறிவு குறைய‌ இது உதவும். தண்ணீர் கொடுங்கள். நேரத்துக்கு டாய்லட் போக‌ வையுங்கள். மற்றப்படி எதுவும் செய்ய‌ வேண்டாம். பயம் இல்லை. சரியாகிருவார்.

‍- இமா க்றிஸ்

இப்போ தான் எழுந்தான். ஆனா உடம்பு லைட்டா ஜில்லன்னே இருக்கு. மத்த படி நார்மலா தான் இருக்கான். பாட்டில் 200 மில்லி. கோல்ட்டர். சளி மருந்து.. Colter. குளிருதுன்னு சொல்றான். இனி மிகவும் ஜாக்கிரதையாக இருப்பேன் தோழி.. தங்களின் பதிலுக்கு நன்றி. டாக்டர்கிட்ட பாட்டில் காட்டிட்டு தான் தோழி வந்தேன்

மேலும் சில பதிவுகள்