munnar patri solunha friends.wedding dayku pohalaamnu irukom.

enhaluku september month wedding day varuthu.mind relax'ah irukurathukaaga pogalaamnu irukom. enhaluku inum baby illa. 2 days matum pohalaamnu irukom . epdi porathunu konjam solunga friends. naanha ithuku munaadi kodaikanal matum thaa poirukom. vera enhayum ponathilla. munnar la ena place elaam iruku? busla pogalaam'ah or train la pohalaamaa? anga therunjavanha yarum ila. please friends yaaravadu uthavi seiyunha. ithuku munaadi munnar ponavanga munnar patri konjam solunha pa.

செப்டம்பர் மாதத்தில் மூணாறு நன்றாக இருக்கும். மழை இருக்கலாம். குளிர் கடுமையாக இருக்காது. ஓணம் பண்டிகை முடிந்துவிட்டதால் தங்கும் விடுதிகள் ஓரளவிற்கு எளிதாக, கொஞ்சம் குறைந்த வாடகைக்கு கிடைக்கலாம். கூட்டமும் குறைவாக இருக்கும்.

எப்படி போவது என்ற கேள்விக்கு எங்கே இருந்து என்று பதில் கேள்விதான் கேட்க முடியும். :-) நீங்கள் எங்கே இருந்து புறப்படுகின்றீர்கள் என்ற விபரம் தேவை. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கின்றீர்களா? தேனி, போடிநாயக்கனூர் வழியாக செல்லலாம். அதுதான் ஓரளவிற்கு நல்ல ரூட். மூணாறுக்கு ட்ரெயின் வசதி கிடையாது.

கொடைக்கானல் சென்றவர்களுக்கு மூணாறு பெரிய அட்ராக்சனாக தெரியாது. கிட்டத்திட்ட ஒரே மாதிரிதான். இன்னும் சொல்லப் போனால் கொடைக்கானல் இதைவிட நன்றாகவே இருக்கும். இது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. :-)

மூணாறு முழுக்க டீ எஸ்டேட்ஸ்தான். மழைக்காலத்தில் மிக பசுமையாக இருக்கும். பிரச்சனை என்னவென்றால், மிகவும் மழையாக இருந்தால் நீங்கள் வெளியே சென்று சுற்றிப் பார்ப்பது சிரமமாக இருக்கும். பார்க்க வேண்டிய இடங்கள் என்று சொல்லவேண்டுமென்றால், ஓரிரு சிறிய அளவிலான நீரருவிகள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம், படம் எடுக்கலாம். குற்றாலம் போல் குளிக்க முடியாது. மட்டுப்பெட்டி அணைக்கட்டு இருக்கின்றது. பார்க்கலாம். எரவிக்குளம் நேஷனல் பார்க் என்று சொல்வார்கள். பெரிய எதிர்பார்ப்போடு சென்றால் ஏமாறுவீர்கள். நிறைய நடக்க வேண்டும். ஆடு மட்டும்தான் பார்க்கலாம். மழை இல்லாமல் இருந்தால், மலை ஏறுவதற்கு ஆர்வம் இருந்தால் சென்று பார்க்கலாம். அங்கு இருக்கும் ஆனைமுடி உச்சி இல் இருந்து மூணாறின் இயற்கையை ரசிக்கலாம்.

என்னுடைய எண்ணம் மற்றும் ஆலோசனை இதுதான். மூணாறு, கொடைக்கானல் மாதிரியான மலைப்பிரதேசங்களுக்கு சுற்றிப் பார்க்க என்று செல்லக்கூடாது. இரண்டு நாட்களில் அதைப் பார்க்க வேண்டும், இதைப் பார்க்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அலைந்து, உடல் களைத்துப் போவதைவிட ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டும் பார்த்துவிட்டு, ரூமிலேயே இருந்து க்ளைமேட்டை என்ஞாய் செய்யலாம்.. :-) நீங்கள் மைண்ட் ரிலாக்ஸ் ற்காக என்று சொல்லி இருக்கின்றீர்கள். ஆகவே, சுற்றி பார்க்க செலவு செய்யும் பணத்தை, தங்கும் விடுதிக்காக செலவு செய்தால், நல்ல ஒரு ரிசார்ட்டில், நல்ல வியூ உள்ள ரூம் புக் செய்து, நல்ல அனுபவத்தைப் பெற்று வரலாம்.

இரண்டு நாட்கள் என்று சொல்லிவிட்டீர்கள். அங்கே தங்குவது இரண்டு இரவுகளா அல்லது ஒரு இரவு, இரண்டு பகலா என்பது தெரியவில்லை. அடுத்து நள்ளிரவு நேரத்தில் எல்லாம் மூணாறுக்கு பேருந்துகள் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் நீங்கள் புறப்பட இயலும்.

நீங்கள் எங்கே இருந்து, எந்த தேதியில் புறப்பட இருக்கின்றீர்கள்.. எத்தனை பேர் செல்கின்றீர்கள், எத்தனை இரவுகள் தங்கப் போகின்றீர்கள், எவ்வளவு பட்ஜெட் என்பதை சொல்லுங்கள். நான் டூர் ப்ளான் தருகின்றேன். :-)

naanha keta udane pathil kuduthatharku mikka nandri admin.

enha wedding day september 15th.sunday september 13th inha irundhu kelambalaamnu irukom. enha ooru srivilliputtur. enha sister'oda ooru trichy.srivilliputtur or trichyla irundhu kelambalaamnu irukom. sep14th morning anha reach aahura maadhiri irukumnu ninaikren. enha budget 20,000'kulla irundhaa podhum . sariyaana budget enaku theriyala. adhuku mela selavu senjaa enha maamiyar thittuvaanga. enha mamiyar'ku tour porathe pidikaathu. nanum en husband mattum thaa porom . sep15th evening kelambalaamnu irukom.

kodaikanal kum ithe madhiri kelambunom.sep13th afternoon kelambunom dindugal to vatthalakundhu,vatthalakundu'la irundhu kodaikanal bus'ye varala romba neram wait panunom,evening orey oru bus matum vandhuchu adhulayum romba koottam.ithukappuram kodaikanal'ku bus ilanu solitaanha,apram adhe busla ninute kodaikanal ku ponom. romba tired aahiruchu. sep13th night rifaya hotel'ku poitom anha stay panitu anhaye saptom avanga oru tour package kuduthaanha,anhaye car arrenge pani kuduthaanga . avangale suthi kaatunaaha. anha kodaikanal la therunjavanha irundhaanga. sep14th morning suthi paarthom temple,park,garden,echo point,evening boating self drive ponom nallaa enjoy panunom , camera kondu poirundhom neraya photos eduthom, horse savvaari senjom,adutha naalum neraya places ponom. elaame pakkathulaye irundhuchu, shopping ponom, differnt fruits vangunom, konjam things vaangunom. romba nallaa enjoy panunom.
ovvoru placelayum nallaa time spend panunom. first time en life la tour ponathu.
en husbandum nallaa enjoy panunaanha. apa 10,000'kulla thaa selavu senjirundhom. plan illaama ponathaala bus'kaaha romba neram wait panitu irundhom.sep15th evening kelambitom.

indha time train ticket book panitu pohalaamnu irukom. avaruku train'na nallaa thoongite pogalaam. tiredness theriyaathu. bus'na konjam kulungum. en husband IT/bpo companyla GM and company partner'aah irukaaru. athanaala sunday leaave'naale saapdaama kooda thoongite thaa irupaaru. 14 hours apuram thaa endipaaru.epa paarthaalum phnla pesite irupaaru or thoonguvaaru or english movie paarpaaru. athanaala anhayum hotel'laye irundhomna thoongite thaa irupaaru or mobile'la pesite thaa irupaaru. konjam veliya suthura maadhiri sollunga admin avarhale. munnar'ku train illanu solirukinha. en kanavarta sollanum. munnarku busla poganum. neenha solrathaa parthaa andha alavuku munnarla places illanu ninaikren. apdinaa naanha tour plan'a change panradhu nallathaa.
cochin la ena places elaam irukum?

naanga anha endha hotel or resort book panrathu ? evlo neram aahum anha porathuku ? endha places nallaa irukum ? andha places elaam reach panrathuku evlo neram aahum, distance evlo irukum ? pakkathulaye irundhaa 6 or 7 place paakura madhiri sollunga . distance poruthu thaa suthi paarka mudiyum .avasara avasaramaa suthi paarka vendaamnu ninaikrom.

enhaluku oru shedule pottu kudunha. tour plan pottu kudunha admin.

மூணாறுல places இல்லன்னு சொல்லலங்க. நீங்க கொடைக்கானல்ல பார்த்த மாதிரியேத்தான் இங்கேயும் இருக்கும். குறிப்பிட்டு சொல்ற மாதிரி எதுவுமில்ல. இங்கேயும் லோக்கல் டூர் ஹோட்டல்லேயே அரேஞ்ச் பண்ணுவாங்க. ஜீப்ல அழைச்சுக்கிட்டு போய் இடங்களை சுற்றிக் காட்டுவாங்க. நீங்க இடங்கள் சுற்றிப் பார்க்கணும்னு நினைச்சா, அதுதான் பெஸ்ட் சாய்ஸ்.

திருச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் எங்கே இருந்து புறப்பட்டாலும் கிட்டத்திட்ட பயண தூரம் ஒரே அளவுதான்னு நினைக்கிறேன். பஸ்ல போனா 7 அல்லது 8 மணி நேரம் எடுக்கலாம். 13 ஆம் தேதி நைட் புறப்பட்டு 14 காலையில அங்க போற மாதிரி பஸ் இருக்குமான்னு தெரியல. மிட்நைட் பஸ் சர்வீஸஸ் மலைப்பிரதேசங்கள்ல ரொம்ப இருக்காது. ஆன்லைன்ல திருச்சி டூ மூணாறு பஸ் தேடினா எதுவும் கிடைக்கலை. நீங்க தேனி போயி அங்கே இருந்துதான் பஸ் பிடிக்க வேண்டி இருக்கும்.

தேனியில இருந்து நைட் சர்வீஸ் பஸ்ஸஸ் எத்தனை மணி வரைக்கும் இருக்கும்னு தெரியல. ட்ராவல் டைம் 3 - 4 மணி நேரம் ஆகலாம். எப்படி இருந்தாலும் நீங்க மூணாறுக்கு நைட் 8 அல்லது 9 மணிக்குள்ள போயிடணும். அதுதான் நல்லது. அப்படி நைட் டைம்ல போனா ரெண்டு நாளைக்கு ரூம் புக் பண்ண வேண்டி இருக்கும். அதாவது 13 ஆம் தேதி நைட் போனீங்கன்னா, 13 நைட் & 14 நைட் ரூம் தேவைப்படும். அதுக்கு 24 ஹவர்ஸ் செக் இன் உள்ள மாதிரி ரூம் புக் பண்ணினா, 15 ஆம் தேதி நைட் ரூம் வெக்கேட் பண்ணலாம்.

மூணாறுல இருந்து ஈவினிங்கே புறப்பட்டு தேனி வந்துட்டீங்கன்னா எந்த நேரத்துக்கும் ஊர் திரும்ப பஸ்ஸஸ் கிடைக்கும். இராத்திரி பயணம் தவிர்க்க முடியாததா இருக்கும். என்னுடைய ஆலோசனை, நீங்க ரெண்டு நாள் தங்க நினைச்சா, கூடுதலா ஒரு நாள் ட்ராவலுக்கு ஒதுக்கணும். பஸ் ட்ராவல்ங்கிறதால எல்லாமே நாம திட்டமிட்டபடி நடக்கும்னு சொல்ல முடியாது. நீங்க 13 ஆம் தேதி காலையில புறப்பட்டு 10 மணிக்குள்ள தேனி வர்ற மாதிரி பார்த்துக்கோங்க. அங்கே இருந்து மூணாறுக்கு டைரக்ட் பஸ் பிடிச்சு மதியம் 1 அல்லது ரெண்டு மணிக்கு மூணாறு வந்துடுங்க. பகல்ல மலைப்பயணம் நல்லா இருக்கும். 13 நைட், 14 நைட் அங்கே தங்கிட்டு 15 மதியத்துக்கு மேலே ரூம் வெக்கேட் பண்ணிட்டு ஈவினிங்கே தேனி வந்துடலாம்.

தேதி, எப்படி பயணம், டைமிங்க் எல்லாம் முடிவாச்சுன்னா, ஆன்லைன்லேயே ரூம் புக் பண்ணிடுங்க. 2 நாளைக்கு 20,000 தாராளமான பட்ஜெட்தான். தங்குறதுக்கு மூணு விதமான சாய்ஸஸ் இருக்கு. பஸ் ஸ்டாண்ட், ரெஸ்டாரண்ட்ஸ் மற்ற கடைகள் எல்லாம் பக்கத்துலேயே இருக்கணும்னா, டவுன்லேயே ஹோட்டல் புக் பண்ணலாம். 1000 - 2500 ரேஞ்ச்ல நல்ல ஹோட்டல்ஸ் கிடைக்கும்.

கொஞ்சம் அதிகம் செலவு பண்ணினா நல்ல ரெசார்ட்ல ரூம் புக் பண்ணலாம். பெரும்பாலான ரெசார்ட்ஸ் கொஞ்சம் அவுட்டர்ல இருக்கும். ஆனா ரொம்ப நல்லா இருக்கும். ரூம் நாள் ஒன்றுக்கு 3000 க்கு மேலே ஆகும்.

அடுத்த சாய்ஸ் Home stay, வீட்டுல தங்குற மாதிரியான ஃபீலிங்க் இருக்கும். பட்ஜெட் க்கு கிடைக்கும். நல்ல ஹோம்ஸ் நல்ல வியூஸ் உள்ள இடங்கள்ல கிடைக்கும். நீங்க ஆன்லைன்ல Munnar home stay ன்னு தேடிப் பாருங்க. எதுவா இருந்தாலும் முன்னாடியே ஆன்லைன்ல புக் பண்ணிட்டு போயிட்டீங்கன்னா ரொம்ப நல்லது.

கொச்சின்

மூணாறா, கொச்சியா ங்கிறது உங்க விருப்பம். ரெண்டும் ரெண்டு எக்ஸ்ட்ரீம். அது மலைப்பிரதேசம், இயற்கை காட்சிகள், க்ளைமேட் சம்பந்தமான இடம். இது நெரிசல் நிறைஞ்ச சிட்டி. ஷாப்பிங் மால்ஸ், தீம் பார்க், பீச் னு நீங்க சென்னையில பார்க்கிற இடங்கள் இருக்கும். மைண்ட் ரிலாக்ஸ்க்காக கொச்சி போக முடியாது. :-) தீம் பார்க் ல இண்ட்ரெஸ்ட் இருந்தா வொண்டர் லா போகலாம். ஒருநாள் முழுக்க டைம் எடுக்கும். லூலூ மால் போகலாம். அரை நாள் எடுக்கும். பீச், போட் ட்ரிப் போகலாம். ஒரு அரை நாள் எடுக்கும். இரண்டு நாட்கள் சரியாகிடும். அப்படி கொச்சி போக நினைத்தால் Palm grove service villa வில் தங்குங்க. இது ஒரு ஹோம் ஸ்டே மாதிரியான ஹோட்டல். ஆன்லைன்ல புக் பண்ணலாம். பெஸ்ட் சாய்ஸ் ஆ இருக்கும். (வேணும்னா என்னோட பேரை சொல்லுங்க. அதனால் டிஸ்கவுண்ட் எதுவும் கிடைக்காது. :-)) லூலூ மாலுக்கு நடந்தே போகிற தூரத்துல இருக்கு.

thank you so much admin. enaku theme park romba pidikum. en husband'ku andha alavku interest irukaathu. enha oorla exibitionla break dance la yerunom. avaruku adhuve thala sutthuthu,vomit vara madhiri irukunu sonaaru. naanha kochin poitu anha irundhu thaa wonderla'ku poga mudiyumaa ?
beach,boat trip elaam pakkathulaye irukuthaa. adhaavathu 20km or 30 km'kulla irukumaa? apram wonderla park entrance fee amount ? ovvoru gamekum thani thaniya pay pannanumaa or motthama entrancelaye pay pannanumaa? naa neraya kelvi ketkurenu ninaikren. idhku munadi pona anubavam ila athanaala ithana kelvi ketkuren thappaa eduthukaathinha. unha pathivu romba udhaviyaa iruku. matravanhalukum usefullah irukum.

munnarla shopping pora madhiri irukaa?

வொண்டர்லா Kochi லதான் இருக்கு. பார்க் கட்டணம், வார நாட்கள்ல ரூ 720/- பெரியவங்களுக்கு. அதுவே விடுமுறை நாள்னா (சனி, ஞாயிறு மற்ற விடுமுறை நாட்களில்) 900 ரூபாய். எண்ட்ரன்ஸ் டிக்கெட் மட்டும் எடுத்தா போதும். உள்ளே வேற எதுக்கும் டிக்கெட் எடுக்க வேண்டியதில்ல. கேமராவுக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது. சாப்பாடு உள்ளேயே கிடைக்கும். அது நீங்க தனியா வாங்கிக்கணும். காலையில 11 மணிக்கு தொடங்கி சாயங்காலம் 6 மணி வரைக்கும் நீங்க எந்த ரைடு வேணும்னாலும், எத்தனை டைம் வேணும்னாலும் போகலாம். 7 மணி நேரத்துல எல்லாமே போக முடியாது. எண்ட்ரன்ஸ்லேயே ஒரு ஃபாம்லெட் கொடுப்பாங்க. எங்கெங்க என்ன ரைடு இருக்குன்னு மேப் இருக்கும். உங்களுக்கு பிடிச்சதை முன்னாடியே செலக்ட் பண்ணிட்டு அதை மட்டும் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். வரிசையா எல்லாம் போகணும்னு நினைச்சா, டைம் இல்லாம போயிடும். மயக்கம் வராத ரைடுகள் நிறைய இருக்கு. நிறைய வாட்டர் கேம்ஸ் இருக்கு. அதெல்லாம் தைரியமா போகலாம். :-) கண்டிப்பா நனையற மாதிரித்தான் இருக்கும். அதனால அதுக்கு தகுந்த மாதிரி எக்ஸ்ட்ரா ட்ரெஸ் எடுத்துக்கிட்டு போகணும். உள்ளேயே லாக்கர் வாடகைக்கு எடுத்து பொருட்களை பத்திரமா வச்சுக்கலாம்.

நீங்க கொச்சின்ல எங்க தங்கப் போறீங்கங்கிறதைப் பொறுத்துதான் எல்லாமே பக்கத்துல இருக்கா, தூரமான்னு சொல்ல முடியும். இருந்தாலும், எல்லாமே சிட்டியை ஒட்டிதான் இருக்கு. அதிகபட்சம் 10, 15 கிமீட்டர் தூரத்துலதான் இருக்கும். நான் முன்ன சொன்ன Palm grove service villa ன்னா, பெரும்பாலான இடங்கள் ரொம்பவே பக்கம். லூலூ மால், அரை கிலோ மீட்டர் தான் இருக்கும். நடந்தே போயிடலாம். அங்க இருந்து 1 கிமீட்டர் தூரத்துல Oberon mall இருக்கு. சின்ன மால் தான். அங்க Wax museum இருக்கு. பல பிரபலங்களோட உருவங்கள் மெழுகுல செய்யப்பட்டு, நிஜம்போலவே இருக்கும். பக்கத்துல நின்னு போட்டோஸ் எடுத்துக்கலாம். அதே மால்ல 9D theater ஒண்ணு இருக்கு. கால் மணி நேர ஷோ. ரொம்ப என்ஜாய் பண்ணலாம். பல மால்கள்ல அந்த மாதிரி 5D, 6D ன்னு ஷோஸ் பார்த்திருக்கேன். அங்க பார்த்த அளவுக்கு எபெக்ட்ஸ் எங்கேயும் இருந்ததில்ல. வொண்டார்லா வும் அங்கே இருந்து ஒரு பத்து, பன்னிரண்டு கிமீட்டர் தூரத்துலதான் இருக்கு. பீச் மட்டும் கொஞ்சம் தூரம், 25 - 30 கிமீட்டர் இருக்கும்.

மூணாறுல ஷாப்பிங் பண்ணலாம். நீங்க கொடைக்கானல்ல பார்த்த மாதிரிதான் இங்கேயும் கடைகள் இருக்கும். சின்ன சின்னதா நிறைய கடைகள். பழக்கடைகள், மசாலாப் பொருட்கள் கடைகள்னு இருக்கும். நிறைய Made in Kerala items வாங்கலாம். டீத்தூள் வாங்கலாம். :-)

naanha confirm panitom cochinku pohanumnu.neenha sonna palm grove service villa onlinela parthen ticket book panrom. onlinelaye train ticket book panrom. naanha mall, beach pakkathula irukura madhiri book pannanum. oh unha pathiva paartha piragu romba happyya iruku. cochin poitu vandhu enhaloda anubavanhala solrom . admin avarhaluku மிக்க‌ நன்றி.

திருமண நாளை சந்தோசமாக கொண்டாட, முன்கூட்டியே எங்களது வாழ்த்துக்கள். :-)

எந்த ஹோட்டல்ல தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, அதே ஹோட்டலை வேற வேற வெப்சைட்ல செக் பண்ணிப் பாருங்க. எல்லா சைட்லயும் tariff ஒரே மாதிரி இருக்கிறது இல்ல. ஒரே ஹோட்டல், ஒரே ரூமுக்கு வெவ்வேற சைட்ல வெவ்வேற ரேட் இருக்கும். clear trip மாதிரியான சைட்ல டிஸ்கவுண்ட் கொடுப்பாங்க. கூப்பன் கோடு அந்த சைட்லேயே இருக்கும். பார்த்து புக் பண்ணுங்க. டூர் முடிச்சு வந்து உங்க அனுபவத்தை சொல்லுங்க.

மீண்டும் வாழ்த்துக்கள். :-)

நாங்க‌ train ernakulam express ticket today afternoon book பன்ரோம். ஆனா எந்த‌ station la இறங்குறதுனு தெரியல‌. நெட் ல‌ நெறய‌ ஹோட்டல் இருக்கு. நீங்க‌ சொன்ன‌ மாதிரி வெவ்வேற ரேட் இருக்கு. ரொம்ப‌ குழப்பமா இருக்கு.
palm grove service villa'gradhe neraya iruku. north pride,beith,the olive cochin,malabar illam........ ipdi neraya iruku. apram neenha sona cleartrip madhiriye goibibo,travelguru,booking.com,yatra, expedia ....ipdi neraya iruku. k 50% deal,80% deal nu offer madhiri poturukanga. andha hotel overview paartha ac room 1500 offer partha 1200. veliya deal la vera oru rate ulla open pani parthaa anha oru rate poturukaanha. return train ticket'um book panrom. enha stay panrathunu thaa theriyala.

first day wonderla park porom. one day full'ah angaye time spend panrom. sep13th night 8.10 to next morning 6.40ku reach aahurom. apram hotel la refersh aahitu breakfast finish panitu,aduthu wonderla park evening varaikum anga tha irupom. next day lulu mall,oberon mall, beach,boating,shopping elaam finish pana one day fullah correct'ah irukum. endha beach pogurathu ? fort kochi beach and cherai beach nu netla parthen. sep15th night train 10'o clk and 11'o clk iruku.

14 காலை யில இருந்து 15 மாலை வரைக்கும் ரூம் தேவைன்னா, நீங்க ஒரு இரவுதான் ரூம்ல தங்கப் போறீங்க. ஆனா, ரெண்டு நாளைக்கு ரூம் புக் பண்ண வேண்டி இருக்கும். ஒரு நாள் அல்லது அரை நாள் ரூம் வாடகை வேஸ்ட்டாத்தான் போகும். 14 ஆம் தேதி காலையில வந்து ரெஃப்ரெஷ் பண்றதுக்கு மட்டும்தான் ரூம் தேவைப்படுது. மீதி பகல் முழுக்க ஒண்டர்லா விலத்தான் இருக்கப் போறீங்க. நைட் மறுபடியும் ரூம் வர்றதுக்கு 8 மணி ஆயிடும். ரெண்டு நாள்தான் டூர் ங்கிறதால பெரிசா லக்கேஜ் எடுத்துப் போகமாட்டீங்க. காலையில ரெஃப்ரெஷ் பண்றதுக்கு, லக்கேஜ் வைக்கிறதுக்கு மட்டும் ஒரு நாள் ரூம் வாடகை கொடுக்க வேண்டி இருக்கும். அந்த செலவை தவிர்க்க நினைச்சா, ட்ரெயின்லேயே ரெஃப்ரெஷ் பண்ணிட்டு, காலை டிபன் முடிச்சிட்டு நேரே வொண்டர்லா போயிடலாம். ஒரு இரண்டு மணி நேரம் எங்கேயாவது கஷ்டப்பட்டு ஓட்டணும். :-) ஆண்களுக்கு இது பெரிய விசயமா இருக்காது. பெண்களுக்கு சரி வருமான்னு தெரியலை.

15 ஆம் தேதி நைட் ட்ரெயின்ல ஊர் திரும்புற ப்ளான் இருக்கிறதால, நீங்க எர்ணாக்குளம் ரயில்வே ஸ்டேசன் பக்கத்துலேயே ரூம் எடுங்க. அதுதான் ஓரளவு எல்லாத்துக்கும் வசதியா இருக்கும். Palm grove service villa வேண்டாம். இப்படி கொஞ்சம் நேரம் தங்குறதுக்கு அது கொஞ்சம் காஸ்ட்லி. ஆன்லைன்ல புக் பண்றப்ப, 24 hours check in உள்ள ஹோட்டலா பார்த்து புக் பண்ணுங்க. அதாவது நீங்க எந்த டைம் ஹோட்டல்ல ரூம் எடுக்குறீங்களோ அதில இருந்து 24 மணி நேரத்துக்கு ஒரு நாள் வாடகை எடுத்துப்பாங்க. நீங்க சாயங்காலம் 5 மணிக்கு ரூம் எடுத்தா, அடுத்த நாள் சாயங்காலம் 5 மணி வரைக்கும் ஒரு நாள்னு கணக்கு வரும். ஆன்லைன் புக்கிங்ல பெரும்பாலான ஹோட்டல்ஸ் 12 - 11 check in வச்சிருப்பாங்க. அதாவது மதியம் 12 மணியில இருந்து அடுத்த நாள் 11 மணி வரைக்கும் ஒரு நாள் கணக்கு. நீங்க நைட் 8 மணிக்கு வந்தாலும் அடுத்த நாள் 11 மணிக்கு வெக்கேட் பண்ணிடணும். அதனால check in timing பார்த்து ரூம் புக் பண்ணுங்க.

ஹோட்டல் எதுன்னு முடிவு பண்ணிட்டு, நீங்க சொல்லி இருக்கிற எல்லா சைட்லயும் அந்த ஹோட்டல் நேம் கொடுத்து ரேட் செக் பண்ணிப்பாருங்க. எதில ஆஃபர் இருக்கோ அதில புக் பண்ணிடுங்க.

வொண்டர்லா டிப்ஸ் :-)
-------------------

10.30 மணிக்கு எல்லாம் வொண்டர்லா போற மாதிரி முன்கூட்டியே புறப்படுங்க. 11 மணிக்கு எல்லாம் உள்ளே நுழைஞ்சிடுங்க.

தண்ணியில நனையறதுக்கு வசதியா ட்ரெஸ் எடுத்துக்கோங்க. மாற்று ட்ரெஸ், ஈரத்துணிகளை வைக்கிறதுக்கு கேரி பேக் எல்லாம் எடுத்துக்கிட்டு போயிடுங்க.

அப்புறம் Easy pay wristband வாங்கிக்கோங்க. 500 ரூபாய்க்கு வாங்கிக்கலாம். இதை டிக்கெட் கவுண்டர்லயும் வாங்கலாம் உள்ளே நுழைஞ்ச பிறகும் வாங்கலாம். ஒரு Micro chip உள்ள Band ஒண்ணு கொடுப்பாங்க. அதில அமவுண்ட் டாப் அப் பண்ணி கொடுத்துடுவாங்க. உள்ளே சாப்பாடு மற்ற ஐட்டங்கள் எது வாங்கணும்னாலும் இந்த band ஐ கொடுத்தா அவங்க swipe பண்ணிப்பாங்க. அமவுண்ட் தீர்ந்துட்டா டாப் அப் பண்ணிக்கலாம். பேலன்ஸ் அமவுண்ட் இருந்தாலும் திரும்ப வாங்கிக்கலாம். நிறைய வாட்டர் கேம்ஸ் இருக்கிறதால கையில பணம் எல்லாம் வச்சுக்க முடியாது. இந்த Band இருந்தா ரொம்பவே வசதி, கையில வாட்ச் மாதிரி மாட்டிக்கலாம். தண்ணியில நனைஞ்சாலும் ஒண்ணும் ஆகாது. அதே மாதிரி லாக்கரும் எடுத்துக்கோங்க. ட்ரெஸ், டவல், கைப்பை, செல்போன், செருப்பு(முக்கியமாக) எல்லாமே லாக்கர்ல வச்சிட்டுப் போயிடுங்க. லாக்கர் கீயும் ஒரு band போட்டு கொடுப்பாங்க. கைல மாட்டிக்கலாம். இதைத்தவிர கையில எதுவுமே வச்சிக்காதீங்க. அப்படி எதுவும் இருந்தா நனைய முடியாது. சில rides எல்லாம் போகவே முடியாது. நிறைய பேர் போனாக்கூட ஒருத்தர்கிட்டே எல்லாத்தையும் கொடுத்துட்டு மற்றவங்க போயிட்டு வரலாம். ரெண்டு பேர் போனா, ஒருத்தங்க அதை வச்சுக்கிட்டு நிக்கணும். ஒருத்தங்க மட்டும் தனியா போற மாதிரி இருக்கும். அதனால கையில எதுவுமே வச்சுக்காதீங்க.

பெரிய தர்மசங்கடம் கேமராத்தான். எல்லாத்தையும் ஃபோட்டோ எடுக்கணும்னு தோணும். ஆனா, கேமராவை எப்படி வச்சிக்கிறதுங்கிற சிரமம் பெரிசா இருக்கும். என்னோட அனுபவப்பூர்வமான ஆலோசனை இதுதான். கேமராவை லாக்கர்லயே வச்சிட்டு போயிடுங்க. மொதல்ல நனையற மாதிரி இருக்கிற வாட்டர் கேம்ஸ் எல்லாம் முடிச்சிடுங்க. அதுக்கே மணி 2 அல்லது 3 ஆயிடும். அப்புறம் லாக்கர் ரூமுக்கு வந்து ஈர உடைகளை மாத்திட்டு, கேமரா எடுத்துக்கிட்டு மற்ற raids போகலாம். அப்போ ஃபோட்டோ எடுத்துக்கலாம்.

எல்லாம் முடிச்சிட்டு வெளியே வர்றப்ப, மேலே இருந்து கீழே பர்ஸ்ட் எண்ட்ரன்ஸ்க்கு ஃப்ரீ பஸ் இருக்கு. வெளியே வந்தவுடனே அந்த பஸ் பிடிச்சு கீழே வந்துடுங்க. அங்கே இருந்து கிடைக்கிற டாக்சி, ஆட்டோ, பஸ் எதுவா இருந்தாலும் பிடிச்சு ரூம் திரும்பிடுங்க. கூட்டம் அதிகம் இருந்தா வாடகை வாகனம் கிடைக்கிறது கஷ்டமாயிடும்.

Oberon mall ல அந்த 9d show, wax museum மட்டும்தான் ஸ்பெஷல். மற்றபடி எல்லா malls மாதிரித்தான் இருக்கும். 9D show ல ஒரு பிரச்சனை என்னன்னா, தியேட்டர்ல 9 பேர் ஒரு நேரத்துக்கு ஷோ பார்க்கலாம். குறைஞ்சது 6 பேராவது இருந்தாதான் ஷோ ஆரம்பிப்பாங்க. கால் மணி நேரம்தான். ஆனா, ஆட்கள் வரலேன்னா வெயிட் பண்ற மாதிரி இருக்கும். ஆட்கள் இல்லேன்னா அவங்ககிட்டே ஃபோன் நம்பர் கொடுத்துட்டு நீங்க மால்லை சுத்தி பார்க்கலாம். ஆட்கள் சேர்ந்தா ஃபோன் பண்ணி கூப்பிடுவாங்க.

காலையில் 10 மணிக்கு எல்லாம் அங்கே போயிட்டு ஒரு மணி நேரத்துல இந்த இரண்டையும் பார்த்துட்டு அங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு லூலூ மால் போயிடுங்க. ஒரு கிமீட்டர் தூரம்தான். லூலூ மால்தான் பெரிய மால். கண்டிப்பா பார்க்கணும். அங்க மிகப்பெரிய Hypermarket இருக்கு. அங்கேயே எல்லா ஐட்டமும் பர்சேஸ் பண்ணலாம். மால் சுத்திப் பார்த்துட்டு கடைசியா ஹைப்பர் மார்கெட் வந்து பர்சேஸிங் பண்ணுங்க. ஹைப்பர் மார்க்கெட்ல கிடைக்காத ஐட்டமே இல்லை. சாப்பாடு வகை வகையா கிடைக்கும். ஆனா பார்சல்தான் வாங்கி போகலாம். அங்கேயே சாப்பிட முடியாது. என்னோட சஜசன், நீங்க ஃபுட் கோர்ட்ல சாப்பிடாம, கடைசியா இங்க வந்து சாப்பாடு வாங்கிக்கிட்டு ரூமுக்கு எடுத்துப் போயி சாப்பிடலாம். அவ்வளவு வெரைட்டிஸ் இருக்கும். ரேட்டும் குறைவா இருக்கும். மறக்காம அரேபியன் ஸ்வீட்ஸ் வீட்டுக்கு வாங்கிட்டு போங்க. :-)

ஈவினிங்க் டைம் இருந்தா, களைப்பு இல்லேன்னா Fort Kochi & Marine drive போகலாம். கடல்ல இறங்கி விளையாடணும்னா Cherai beach போங்க. அது கொஞ்சம் தூரம். இதுவே டைட் ஷெட்யூலா இருக்கும். போட்டிங்க்கு எல்லாம் நேரம் இருக்குமான்னு தெரியலை.

super tips kudukurinha. selavu kammi panra alavku budget potu kudukurinha first idhuku oru thanks solikiren.wonderla parkla water ridesla poganumna naanum yosichite irundhen indha money epdi eduthutu poradhunu,camera eduthutu porathunu nenachite irundhen. indha idea'vum neengale solitinha. enhaluku ini kelambi pohura vela mattum thaa micham iruku. kandippa arebian sweets vangitu porom. en hubby'ku friends circle, family romba perusu. elaarukume paarthu paarthu porumaya purchase pananum. purchase'kunu 2 hours spend pananum. enaku veetla vaikra alanhaara porutkal vaanhurathu romba pidikum, romba different'ah irundhuchuna vangiduven, apram bangles, purse, different snacks items vanhanum. en husbandku moolihai oil, marundhu, headku oil indha madhiri thaa vaanhuvaaru. kodaikanal'la apdi tha oil,marundhu enanamo vaanhunaru. adhellam apply paniyum no use.

neenha sona ellaa visayanhalum aduthu cochin poguravangaluku romba useful'ah irukum.

3 dress set,nanaja dress vaika 1 carry bag,slipper vaika 1 carry bag,mobile camera purse ku thaniya 1 pouch, mall'la purchase panra things vaika oru kuti travel bag kondu porom.

மறுபடியும் அட்மின்'க்கு மிக்க‌ நன்றி.

மேலும் சில பதிவுகள்