irumal for 6 month baby

Hi sisters advice pls .yen paiyanuku 6th month achu 2daysa irumal irukku .thulasi+mulaku+vethalai pottu antha water kodutha innum konjam konjam irumara athunala thoogam disturb aguthu pls help.
Poongothai amma yenna pannna sollunga pls.

அன்புள்ள‌ சத்தியாவிற்கு,
தாமதத்திற்கு மன்னிக்கவும். சரியாகக் கவனிக்கவில்லை. சித்தரத்தையை ஒரு அங்குலத்துண்டு அளவு எடுத்து நசுக்கி
ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை கப் ஆகும் அளவு நிதானத் தீயில் கொதிக்கவைத்து
ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து (துளசி,மிளகு,கருப்பு வெற்றிலை இதோடு சேர்த்தும் தரலாம்)தேனும் கலந்து கூடத்தரலாம். எப்போதும் நோய்கள் வந்தால்
உடனடியாக‌ குறைக்க‌ முயற்சி செய்யக் கூடாது(மிக‌ மோசமான‌ நோய்களைத்
தவிர‌) உடனடியாகக் குறைக்கும் மருந்துகள் வீரியம் அதிகம் உடையவை.
படிப்படியாகக் குறைதல் மிக‌ மிக‌ நல்லது. குழந்தை பெற்ற‌ தாய் கட்டாயம்
பழைய‌ நாள்களில் வெற்றிலையைக் கட்டாயம் போடுவார்கள். அதனோடு
சேரும் பாக்கு சுண்ணாம்பு லவங்கம் சாதிக்காய்( பிடித்தால் குல்கந்து) வால்மிளகு போன்றவை பாக்கு வயிற்றுப் பூச்சியை நீக்கும்,சுண்ணாம்பு இரும்பு
சத்துக்கு,வால்மிளகு சீதளத்திற்கு, சாதிக்காய் நல்ல‌ உறக்கத்திற்கு.லவங்கம்
மருந்து,குல்கந்து தேன்+ரோஜா இதழ்கள்+கல்கண்டு சேர்ந்தது, அனைத்தும்
மருந்தே, நீங்கள் சாப்பிடுவதன் மூலம் நீங்கள் பிரசவத்தின் மூலம் இழந்த‌
பலம், இரும்புச் சத்து போன்றவற்றை மீண்டும் மிக‌ எளிமையாக‌ உணவின்
மூலமாகவேபெறுவதோடு மட்டுமல்லாமல் வெற்றிலைச்சாறு சீரணத்திற்கும்
சிறந்த‌ மலமிளக்கியாகவும் வாய்வுக்கும்(குழந்தைக்கும் உங்களுக்கும் )
மிக மிகத்தேவையானது.சின்ன‌ தேவைகளுக்கெல்லாம் டாக்டரைத் தேடி
இரவு நேரங்களில் ஓடவேண்டிய‌ தேவையிருக்காது.சித்தரத்தை பொடியாகவும்
கிடைக்கிறது, பொடியானால் இரண்டு அல்லது மூன்று சிட்டிகைப் பொடியை
நேரடியாகத் தேனில் குழைத்துத் தரலாம். கைவசம் இருப்பது நல்லது.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Romba thanks amma

மேலும் சில பதிவுகள்