boy baby

Enakku girl baby piranth two wepathueks akinrathu. First girl next payan piranthu six yearsla iranthuttan. After eight years trumbavum girl baby. But ellarukkum feeling. Pon payan trumbi varuvan en nana ninithan. Nadakkala. Irandu pasanga iruupathu nalltha?irandu ponnunga iruupathu nallatha? Oru ponnu oru payan irupathu nalltha? ennoda mind free yaka give some ideaspls

//Irandu pasanga iruupathu nalltha?irandu ponnunga iruupathu nallatha? Oru ponnu oru payan irupathu nalltha?// எது நல்லது என்பதை விட‌ எது கூடாதது என்று கேட்டிருக்கலாம். ஒரு வகையில், இந்தக் கேள்வியின் கருத்து அதுதான் இல்லையா! :) இது என்ன‌ காரா பங்களாவா? எது நல்லது என்று யோசிக்க‌! அதுவும் குழந்தைகள் பிறந்த‌ பின்னால்!! ஏன் இந்தக் கேள்வி! இங்கு ஆள் ஆளுக்கு ஒரு அபிப்பிராயம் சொல்லுவார்கள். அந்தப் பதில்களில், 'இரண்டு பெண்கள் இருப்பதுதான் நல்லது,' என்று யாரும் சொல்லாவிட்டால் என்ன‌ செய்வீர்கள்??? எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? மாற்றத்தான் முடியுமா?

எப்படி இருந்தாலும் நல்லதுதான். குழந்தையே இல்லாமல் இருப்பதை விடவும், ஒரேயொரு குழந்தை மட்டும் இருப்பதை விடவும் 2 நல்லதே. //But ellarukkum feeling.// என்ன‌ சொல்றதுன்னே தெரியலைங்க‌. பட்டிமன்றத்துல‌ பேசுறதுக்கு வேணுமானா உங்க‌ கேள்வி நல்லதா இருக்கலாம். இது உங்க‌ வாழ்க்கை. உங்களால‌ உருவாக்கப்பட்ட‌ இரண்டு சின்னவங்களோட‌ வாழ்க்கை. இனி திரும்பிப் பார்க்கக் கூடாது; மைண்ட்டை என்ன‌ இறுகப் பிடிச்சிருக்கு!! நிறைய‌ திட்ட‌ வருது. யார் அந்த‌ எல்லாரும்!! அவங்கதான் வேலை இல்லாம‌ விமர்சிக்கிறாங்க‌ என்றால் பெற்ற‌ அம்மாவும் இப்படி யோசிக்கலாமா? இதனால்தான் பால் போதாத‌ பிரச்சினை போல‌ இருக்கு. உங்க‌ மைண்ட் ஃப்ரீயா இல்லாட்டா பால் சுரக்கிறதுலயும் பிரச்சினை இருக்கும்.

//ennoda mind free yaka give some ideaspls// என்ன ஐடியா வேணும்கறீங்க‌? என்ன பிரச்சினை இப்போ மைண்ட் இறுக்கமாக‌ இருக்க‌!! இருக்கிறது இருக்கிறதுதான். இப்படி கசமுசா என்று யோசிக்காமல் குழந்தையை ஒரு வரமாகப் பார்க்கணும். அதை சந்தோஷமா ஏற்றுக் கொள்ளணும். இப்படி ஒரு சந்தோஷமில்லாத‌ மைண்ட் செட்ல‌ இருந்தால் உங்கள் மனநிலை மீதிக் குடும்பத்தாரை... முக்கியமாக‌ அந்தச் சின்னவர்கள் இருவரையும் பாதிக்கும். அம்மா நீங்க‌. பொறுப்பா நடக்கணும்.

‍- இமா க்றிஸ்

Nan pen kulanthi piranthathai ninithu kavalipadavilli. Peoriyavanga mamiyarveetil ennidam sooli feel pannum pothu ennoda mind upset. Athandaya takkamthan inaatha kalvi? ungaludaya pathil ennai yaro kannathil araithathupol irunthathu nan kattathu mikuntha muttalthanmana kalvi imamama. enakku ungalidamirunthuinnum niraya advice tavai immama pls . Talivana mindkku

சொல்றேனு தப்பா நினைக்காதிங்க‌.பெரியவங்கள் சொன்ன என்ன‌ அதுக்காக் பிள்ளையே தூக்கி கீழேயே போட‌ முடியும்.அவங்க‌ அப்ப்டி சொன்னால் இனிமேல் அப்படி சொல்லாதீங்கனு சொல்லுங்க‌.எங்க‌ அம்மா சொல்வாங்க‌ பெண் பிள்ளைங்க‌ இருக்குற‌ வீட்டுலே கஸ்டமே இருக்காதுனு..அதுவரைக்கும் நீங்க‌ சந்தோசப்படுங்க‌.என்ன‌ மாரி எத்தனை பேர் என்ன பிள்ளைனாலும் பரவாயில்லை நம்க்கு சீக்கிரம் கிடைக்கனும்னு வேண்டிக்கிட்டு இருக்கோம்.கிடைச்சும் நீங்க‌ இப்படி பீல் பன்றேன் சொல்றீங்க‌..தேடாமல் கிடைத்தால் அப்ப்டிதான் இருக்கும். மனதை புண்படும் பேசி இருந்தால் மன்னிக்கவும்..யாரு பேசினா என்ன‌ நீங்கதான் வளர்க்க‌ போ
றீங்க‌ படிக்க‌ வைக்க‌ போறீங்க‌.அவங்கவாட்டு பேசிட்டே இருக்கட்டும்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Nan pen pillayai vandamnu ninikkala. Mattavanga truppi pasum pothu ennoda mind upset akuthuppa. Ungalukku sikkirama kadavul kulathayai taruvar kavalaipadathinga

//Pon payan trumbi varuvan en nana ninithan.// போன‌ பையனா! //Nadakkala.// அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. இன்னொரு பையன் கிடைத்தாலும் முன்பு இருந்த‌ உங்கள் மகன் வேறு. அதே பையன் இனி திரும்பி வர‌ மாட்டார். மனதைத் தேற்றிக் கொள்ள‌ வேண்டும் நீங்கள்.

மற்றவர்கள் பேசுவதைப் பற்றிப் பெரிதாக‌ எடுக்க‌ வேண்டாம். விரும்பினால் இன்னும் சில‌ வருடங்கள் கழித்து இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதுவும் பெண்ணாகக் கிடைக்கக் கூடும். அதனால் இதைப் பற்றி யோசிக்க‌ வேண்டாம். முன்பே சொன்னேன்... இந்த‌ மாதிரி எண்ணங்களால் பால் சுரப்பது குறையலாம்.

இப்போ உங்களுக்குத் தேவை அமைதி. ஒரு பேச்சுக்கு வேண்டுமானால் மேலே உள்ள‌ மாதிரி... இது பையனாக‌ இருந்திருக்கலாம், என்று சொல்லலாம். அதைப் பெரிய‌ பிரச்சினையாக‌ எடுத்துக் கொள்ள‌ வேண்டாம். யாராவது சொன்னால் அவர்கள் பேச்சைத் தொடர‌ முடியாதபடி மாற்றி விடுங்கள். இப்போ கிடைத்த‌ குழந்தையை உங்கள் பையனாகப் பாருங்கள். பேசுபவர்களுக்கு, 'இதுதான் அந்த மகன்.' என்று நீங்களாகச் சொல்ல‌ முடிந்தால் பேச்சு தொடராது.

//Irandu pasanga iruupathu nalltha?// ம்.. எனக்கு இரண்டு பசங்கதான். நல்லது. சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்.
//irandu ponnunga iruupathu nallatha?// இரண்டு பையன்கள் போல‌ அவர்களும் ஒருவருக்கொருவர் நல்ல‌ தோழிகளாக‌ இருப்பார்கள்.
//Oru ponnu oru payan irupathu nalltha?// ம்... இது நானும் என் தம்பியும் போல‌. :) இதுவும் நல்லதுதான்.

//ennoda mind free yaka give some ideaspls// யோசிக்கவே கூடாது. பேசுபவர்கள் பேச்சைக் காதில் வாங்காதீர்கள்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்துள்ளீர்கள். நிச்சயமாக‌ மணிமேகலை
காப்பியம் உங்களுக்கு தமிழில் பாடமாக‌ இருந்திருக்கும். போன‌ பையன் திரும்பி
வருவான் என்று நீங்கள் கூறியதில் இருந்து மறுபிறவியைப் பற்றி உங்களுக்கு
நம்பிக்கை இருக்கிறது என்று தெரிகிறது. பொதுவாக‌ ஆன்மாவிற்கு இந்த‌ உடல்
ஒரு சட்டை. ஏதோ ஒரு காரணத்தால் இருக்கும் சட்டை பயன்படாது போனால்
வேறு சட்டையை மாற்றிக் கொள்கிறோம் அல்லவா. அது போலத்தான் உயிரும்
தான் முன்பு குடியிருந்த‌ உடலாகிய‌ சட்டையை உதறி விட்டு வேறு ஒரு உடலாகிய‌ சட்டையை தேடிப் போய்விடுகிறது. இந்த‌ வயதில் ஒரு தாயாக‌
இந்தக்கருத்துக்களை மனம் ஏற்றுக்கொள்வது என்பது மிக‌ மிகக் கடினம்.
நாம் நம் குழந்தைகளுக்கு சிறு வயதில் அவர்களுக்கு வேண்டியவற்றை நாம்
தேர்ந்து எடுத்துக் கொடுப்பது போல‌ இறைவன் உங்கள் மகனுக்கு பெண்ணாகப்
பிறக்கும் அரியதோர் வாய்ப்பை இப்பிறப்பில் கொடுத்திருப்பார்,
உலகம் ஆண்கள் மட்டுமே வாழக்கூடிய‌ வகையில் இருந்தால் மக்கள் பிறப்பு
என்பது எங்கிருந்து வரும், நீங்கள் ஆண்பிள்ளை பெறாமல் இல்லை.
எங்கள் சென்னையில் உண்மையில் நடந்த‌ ஒன்று, குடும்ப‌ நண்பர் ஒருவர்
அவருக்கு மூத்தது ஆண்பிள்ளை அடுத்து இரண்டு பெண்பிள்ளைகள்.
கல்லூரியில் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கடலில்
குளிக்கச் சென்ற‌ பையன் கடலில் மூழ்கி இறந்து விட்டான். எல்லோரும்
அதிர்ந்து விட்டனர். இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தை காப்பான் என்று
எதிர்பார்த்த‌ பிள்ளை கண்மூடித்திறக்கும் வேளையில் மாயமானான். ஆனால்
யாரும் சற்றும் எதிர்பாராத‌ நிலையில் அந்தத்தாய் மீண்டும் கருவுற்று ஒரு
ஆண்பிள்ளையப் பெற்றார்கள் அடுத்த‌ ஆண்டே.
எனவே இறைவனின் கணக்கை யாராலும் கணிக்க‌ இயலாது.நம்முடைய‌
வாரிசுகள் யார் என்பதை இறைவன் தான் தீர்மானிக்கின்றவன், நாம் அல்ல‌.
நம் பிறப்பே நம் கையில் இல்லாத‌ போது எது நல்லது தீர்மானித்து இறைவன்
உங்களுக்கு அளித்த‌ செல்வங்களை அன்பான தாயாக‌ வளருங்கள்.
தேவகி சிறையில் அடைபட்டுப் பெற்ற‌ குழந்தைகள் எட்டில் ஏழைப் பறிகொடுத்தாள். பிறந்து உயிரோடு ஒரு குழந்தையை அதே இரவில்
யசோதை வளர்க்கக் கொடுத்து அனுப்பினாள்.
பெற்ற‌ குழந்தைகளை முத்துப்போல் காத்து வளர்க்க‌ இறைவன் தங்களுக்குத் துணை இருப்பானாக‌.

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

எனக்கும் 1 பெண்குழந்தை 2 ஆண்குழந்தை எல்லாம் கர்ப்பத்திலேயே இழந்த பின் இப்போ 2 பெண்குழந்தைகள். நான் பிறந்த நாட்டிலும் சரி வளர்ந்த நாட்டிலும் சரி ஆண்குழந்தை பெண்குழந்தை என்று யாரும் பேதம் காட்டி பேச மாட்டார்கள். அதனால் இப்பிடி யாராவது பேசும் போது அதிர்ச்சியா இருக்கும் .இது நீங்கள் பேசவில்லை .இந்த இறுக்கத்தை சமூகம் உங்களுக்கு திணிக்கிறதாவே என் கணிப்பு .ஓக்கே அதில்லை நான் சொல்ல வந்தது .2 பெண் குழந்தைகள் பிரண்டஸ் மாதுரி இருப்பினம் .ஒராளுக்கு ஒராள் பாதுகாப்பா இருப்பினம். 2 பையன்கள் இருந்தா எப்புடி இருப்பினம் தெரியுமோ அவையும் அப்பிடிதான் இருப்பினம் . என் சிஸ்டருக்கு 3 ம் பையன்கள். அவையும் பிரன்ட்லி அண்ட் செம குறும்புகள் .2ம் சேர்ந்தாப்ல இருந்தா அவையும் இப்புடித்தான் ஜாலியா இருக்கும் . ஒரு 5,6 வயசு போனா யாருமே ஆண் பெண் ஒப்பிட்டு பாக்க மாட்டினம் . மறந்திடுவினம் . உங்களையும் உங்கட பிள்ளைகளையுமே நினைச்சு கொண்டிருக்க மாட்டினம். உங்களுக்கு உங்கள் பிள்ளைகள் பொக்கிஷம். எந்த கவலையும் வேண்டாம் போக போக நிறைய மாற்றங்களும் மகிழ்சிகளும் உங்களுக்கு கிடைக்கும். நோ kavalai .

Ungaludaya talivana varthikal marravarkal kulambi poi iruntha manam talivaki vittathu.mikka nanri . En irandu kulanthikalum nallapadiyaka irukka enakku pray sainga imamama

Ungaloda karuthu mika arumai. Irivan enakku tunaiyai irukka nigalum vandi kollungal

Kanidippaka ninkal solluvathu pol en pillikal enakku pokkisam. Mgarravarkalal kulamibi poi iruntha manam ungal ellarudaya arivuraikalikalinal ini no kavalai thanks ma

மேலும் சில பதிவுகள்