வாழ்த்துக்கள் திருமதி அஸ்மா ஷர்ஃபுதீன்.

வாழ்த்துக்கள் திருமதி அஸ்மா ஷர்ஃபுதீன். சதம் அடித்து சாதனை புறிந்துவிட்டீர்கள். தொடர்ந்து பல நூறு சாதனைகள் புரிய வாழ்த்துகின்றேன்.வாழ்க உங்கள் சாதனை, வளர்க உங்கள் குறிப்புக்கள். நன்றி.

உங்கள் ரெசிப்பிகளையும் மனோஹரி மேடம் ரெசிப்புகளையும் சிலவற்றை செய்து பார்த்து என் கனவர்,விருந்தின்ர்களின் பாராட்டுக்கள் எனக்கு கிடைத்தை உங்கலுக்கும் பாபு அவற்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நீங்கள் மேலும் பல குறிப்புக்கள் கொடுக்கனும் என்று வழ்த்துகிரேன்.மேலும் உங்கள் சமையல் அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?நன்றி.

sajuna

வாழ்த்துக்கள் திருமதி அஸ்மா ஷர்ஃபுதீன். இன்னும் பல குறிப்புக்கள் வழங்க வாழ்த்துக்கள். நன்றி.

நன்றி...

வாழ்த்துக்கள் திருமதி அஸ்மா ஷர்ஃபுதீன் இன்னும் பல நுறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஹாய் அஸ்மா எப்படி இருக்கிறீர்கள். நீங்கள் 100 குறிப்புகள் கொடுத்துவிட்டீர்கள் ரெம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
உங்கள் குறிப்பில் நானும் நிறைய செய்து பார்த்து இருக்கிறேன் வித விதமாக கொடுத்து இருக்கிறீர்கள் மேலும் குறிப்புகள் வழங்க வாழ்துகிறேன்.

Dear மனோஹரி!
உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி! ஆனால் சாதனை புரிந்தது நான் அல்ல, நீங்கள்தான்! இருப்பினும் ஒரு கோல்டு வின்னர், சில்வர் வின்னரை வாழ்த்தியதைப்போன்று உணர்ந்தேன். சந்தோஷம் கலந்த நன்றி!

Dear சஜுனா!
எங்கள் ரெசிப்களை செய்து பார்த்து நீங்கள் பாராட்டு வாங்கியது அறிந்து சந்தோஷமாக இருந்தது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்.

என்னுடைய சமையல் அனுபவம் பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. இருந்தாலும் சொல்கிறேன். அதற்கு முன் என் தாயாரைப்பற்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். 2003 - ல் மறைந்த என் தாயாருக்கு சமையலில் மிகுந்த திறமை உண்டு. எவ்வளவு அவசரமாக செய்தாலும், எத்தனை கூட்டமான விருந்தினருக்கு செய்தாலும் அவர்களின் சமையலில் சுவை மாறாது! அவர்களின் சமையலை சாப்பிட்ட யாருமே ரொம்ப அருமையாக உள்ளது என்று சொல்ல மறந்ததில்லை. அவர்களின் சமையலை மற்றவர்கள் விரும்பி சாப்பிட்டு மகிழ்வதில் என் தந்தைக்கும் அப்படியொரு சந்தோஷம். அதனால் அடிக்கடி வீட்டில் விருந்து நடக்கும். அப்படிப்பட்ட என் தாயாரிடமிருந்து சிறு வயது முதலே சிறுகச்சிறுக சமையல் கற்றுக்கொண்ட எனக்கு, கல்வியின் மீதுள்ள ஆர்வத்தால் அப்போது சமையற்கலை மனதில் முழுமையாக பதியவில்லை. ஒரு டைரியில் நோட் பண்ணிவைத்து, சமைக்கக்கூடிய தேவை ஏற்பட்டால் அதை பார்த்து பார்த்து செய்வேன். திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்புதான் ஓரளவு தன்னால் சமைப்பதற்கு ஆர்வம் அதிகமானது. என் கணவர் புதுப்புது விதமாக நன்கு சமைக்கத்தெரிந்தவராக இருந்ததால், வெளிநாட்டு வாழ்க்கையான பிறகு இருவரும் சேர்ந்தே ஏதாவது புதுமுறையில் சமைத்துப் பார்ப்போம். அது என் பெற்றோருக்கும் பிடிக்கும். இப்படியே சமையல் ஆர்வம் அதிகமானது. ஆனாலும் என் தாயாரைப்போன்று திறமை பெறுவதற்கு இன்னும் ஆவலாக உள்ளது. அவர்களோடு இருந்து அவர்களின் ஆலோசனை பெறுவதற்குதான் இப்போது நாங்கள் கொடுத்துவைக்கவில்லை. அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவற்றையும், அவர்களுக்கு பிறகு எனக்கு தெரிந்தவற்றையும் இந்த அறுசுவை மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Dear வாணி ரமேஷ்! நலமா? குட்டிக்குழந்தை எப்படியுள்ளது? வாழ்த்துக்களை நான் எதிர்ப்பார்க்கவில்லையென்றாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி!

ஹாய் ஜுலைஹா! என்ன, டெலிஃபோனில் பேச வாய்ப்பு கிடைத்தும் அறுசுவை குடும்பத்தினர் என்பதால் இங்கேயே வந்து வாழ்த்திவிட்டீர்களா? ஓகே, Merci beacoup!(ரொம்ப நன்றி!)

Dear செய்யது கதீஜா! இறைவன் அருளால் நான் நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்னுடைய குறிப்புகளை செய்து பார்த்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி! கூடிய விரைவில் உங்களையும் வாழ்த்துவோம்!

பாபு அண்ணன் அவர்களுக்கு!
SORRY! முதல் பக்கத்திலேயே வாழ்த்திய உங்களுக்கு முதலிலேயே நன்றி சொல்ல மறந்துவிட்டேன். நீங்கள் எங்களை வாழ்த்துவதைவிட, இப்படியொரு சமையல் குடும்பத்தை உருவாக்கியதற்கு நாங்கள் அனைவரும் உங்களுக்குதான் நன்றி சொல்லவேண்டும். இருந்தாலும் நீங்கள் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி!

மேலும் சில பதிவுகள்