வெஜிடபுள் சூப்

தேதி: September 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

வேக வைத்த பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 2
ஏலம் - 2
பட்டை - ஒரு சிறிய துண்டு
அரைத்த இஞ்சி - அரை தேக்கரண்டி
சிறிய பூண்டு - 5 பற்கள்
நறுக்கிய புதினா - ஒரு மேசைக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
நறுக்கிய சிறிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
நறுக்கிய கேரட் - 2
நறுக்கிய பீன்ஸ் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடிக்க :
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊற வைத்து ஒரு கப் அளவு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் இரண்டையும் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் அதை கரண்டியால் நன்கு மசித்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அதில் வேகவைத்து மசித்த காய்கறிகளை சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து அதில் கரைத்து வைத்த புளி தண்ணீரை ஊற்றவும்.
புளி தண்ணீருடன் மேலும் 5 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்தப் பிறகு பொடித்து வைத்திருக்கும் தூள் வகைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்து வரும் பொழுது அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
சூப் சிறிது ஆறியதும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும்.
சுவையான வெஜிடபுள் சூப் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்