தேதி: September 26, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசிபருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - ஒரு கைப்பிடி
பச்சரிசி - ஒரு கைப்பிடி
வெல்லம் - 150 கிராம்
தேங்காய் - அரை மூடி
ஏலக்காய், முந்திரி
வாணலியில் பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் வறுத்த பருப்பு, அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

வெல்லத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிக்கட்டவும்.

தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த பருப்பு அரிசி கலவையில் காய்ச்சிய வெல்லத்தை ஊற்றவும்.

பின்னர் அரைத்த தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

அதனுடன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்.

சுவையான பருப்பு பாயசம் ரெடி.

கெட்டியாக இருந்தால் தேங்காய்ப்பால் அல்லது காய்ச்சிய பால் சிறிது சேர்க்கலாம்.
Comments
revs
Sama super. My fav. Nalaike seydhuduren ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
team
குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & டீம் நன்றிகள் பல.
Be simple be sample
வனி
செய்து சாப்பிடுங்க வனி. எங்களுக்கு போட்டோ ஒக்கே வா. தான்க்யூ.
Be simple be sample