என் பையனுககு உதவி plz......

வணக்கம். என் பையனுககு 4 1\2 மாதங்கள் ஆகின்றன.இனனும் குப்புற படுக்கவில்லை.ஓரு பக்கமாக திரும்பி படுக்கிறான்.நல்லா பார்க்கிறான்,சிரிக்இறான்.நான் குப்பற படுக்க வைத்தால் தலை உயர்த்தி பார்க்கிறான்.என் குழந்தை எப்போது குப்பற படுப்பான்.இதற்கு நான் உதவி செய்ய வேண்டுமா.எனககு கவலைஆக இருக்கு.

வணக்கம். நீங்கள் சொன்னது போல் இரு தினங்களுக்கு முன் என் பையன் தானகவே 2 முறை குப்புற கவிழ்ந்தான்.சிறிது நேரத்தில் அழுது விட்டான். ஆனால் அதற்கபிறகு அவன் இதுவரை குப்புற போகவில்லை.வரும் 14-ம் தேதியோடு 6 மாதம் ஆகிறது.இது பயமில்லைதானே.அவன் இப்போது அத்தா என்று கூறுகிறான்.

என் பெயர் மணிமலர். வயது 21. எனக்கு திருமணம் ஆகி 9 மாதங்கள் ஆகிறது. முதலில் நானும் என் கணவரும் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று இருந்தோம்.. ஆனால் எல்லோரும் தவறாக பேசுவது கேட்டு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இந்த 2 மாதங்கள் ட்ரை பண்ணிணோம். ஆனால் செட் ஆகவில்லை. எனக்கு நார்மல் பீரியட் தான். 28 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. ஆனாலும் கரு செட் ஆகவில்லை. சரியாக பீரியட்ஸ் வந்துவிடுகிறது. ரொம்ப எதிர்பார்த்து இம்முறையும் ஏமார்ந்துவிட்டோம்... நேற்று எனக்கு பீரியட்ஸ் ஆகிவிட்டது... இனி என்ன செய்வது என்று புரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள்...

அன்புள்ள‌ மணிமலருக்கு இனிய‌ தீபாவளி வாழ்த்துக்கள்.
குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட‌ எந்த‌ முறையைப் பின்பற்றினீர்கள் என்று
தெரியவில்லை. எந்த‌ முறையாக‌ இருந்தாலும் மாத்திரையாக‌ இருந்தால்
அதன் விளைவுகள் உங்கள் உடலில் இருந்து வெளியேற‌ வேண்டும் அல்லவா.
கிட்டத்தட்ட‌ ஆறு மாதங்களுக்கு மேல் தள்ளிப் போட்டு உள்ளீர்கள். அது சரியாக‌
எப்படியும் மூன்று மாதங்கள் ஆகும் அல்லவா. உங்களுக்கு சிறு வயது தான்.
அதனால் கவலைப் பட‌ வேண்டாம். மருந்துகளின் விளைவுகள் குறையட்டும்.
மனதளவில் இருவரும் தயாரானாலும் உடல் தயாராக‌ வேண்டும். அதனால்
தாரளமாகப் பொறுத்து இருக்கலாம். அதுவரையில் யார் எது சொன்னாலும் என்
காது செவிடு என்று இருங்கள். ஜெயஸ்ரீக்கு கொடுத்துள்ள‌ குறிப்புக்களையும்
வேறு சிலருக்குக் கொடுத்துள்ள‌ குறிப்புக்களையும் படித்துப் பாருங்கள். மேலும்
நிறைய அனுபவம் வாய்ந்தவர்களின் குறிப்புக்கள் நிரம்ப‌ உள்ளன‌, அவற்றை
எல்லாம் படித்துப் பாருங்கள். உங்கள் ஐயங்களுக்குத் தெளிவும் விடையும்
நிறையக் கிடைக்கும். அவற்றினைப் படித்துப் பாருங்கள்.
வாழ்க்கையை இப்போது தான் தொடங்கி உள்ளீர்கள், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள‌ ஓராண்டாவது வேண்டும் என்பது
என் கருத்து, தேவையில்லாமல் அடுத்தவரை மூக்கை நுழைக்க‌ விடுதல் கூடாது, பொறுத்தார் பூமி ஆள்வார். தீபத் திரு நாளுக்குப் பின் பதிவிடுகிறேன்
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அன்புள்ள பூங்கோதைகண்ணம்மாள் அவர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... நாங்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போட எந்த மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளவில்லை... திருமணம் ஆன முதல் 2 மாதங்களுக்கு ஆணுறை பயன்படுத்தினோம்.. பின்பு அதை உபயோகிப்பதை விட்டுவிட்டோம். ஆனால் 2 நாட்கள் விட்டு, 1 நாட்கள் விட்டு ஒன்றாக இருந்தோம்... அதனால் அடுத்து 5 மாதங்கள் கருவுறவில்லை.. குழந்தை வேண்டும் என்ற எண்ணம் வந்த பிறகு பீரியட் வந்து நின்ற நாளில் இருந்து முதல் ஒரு வாரம் ஒன்றாக இருந்தோம். பின்பு வேலை பளு காரணமாக ஒரு நாள் விட்டு, 2 நாள் விட்டு ஒன்றாக இருந்தோம்... கருவுற ஏற்ற 5,6 நாட்களில் எங்களால் சரியாக ஒன்றாக இருக்க முடியவில்லை.. தினமும் இரவு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்க 11 PM அகிடுது. உடலும் சோர்வாகிவிடுகிறது. OFFICE & HOME வேலை பளு உடலை வாட்டுகிறது.. இந்த காரணங்களால் தான் எங்களால் சரியான முறையில் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை... எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

அனைவருக்கும் இனிய‌ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என் பாப்பாக்கு 11/2 வயசு ஆக‌ போது. ராத்திரியில் உறங்க மாட்றா. இரவில் 7 or 8 மணிக்கு சாப்பாடு கொடுத்தாலும் இரவில் அழறா. அப்ப‌ பால் கொடுத்தாலும் குடித்துவிட்டு திரும்ப‌ அழறா(1 or 11/2 மணி நேரம் அப்புறம் அழறா).காரணம் தெரியவில்லை. இரவில் 4 or 5 தடவை பால் கொடுப்பேன். 1/2 பாட்டில் or 3/4 பாட்டில் குடிப்பாள். வாயில் Rubber வைப்பா. அதை நிறுத்த‌ முயற்சி செய்க்கிறேன். கொஞ்ச‌ம் குறைத்துவிட்டேன். ஏன் இப்படி அழறா.

இன்னும் ஒரு கேள்வி. பையனுக்கு தலை முடி வறண்டு சக்கை சக்கையாக‌ இருக்கு. சீவினா படிய‌ மாட்டேங்குது. அதுக்கு ஏதாவது tips சொல்லுங்க pls.

மேலும் சில பதிவுகள்