மசாலா உருளைக்கிழங்கு

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைகிழங்கு - 1/4 கிலோ
வத்தல் - 4
கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
கடுகு - சிறிது
உளுந்தம்பருப்பு - சிறிது
வெங்காயம் - 5 (சிறியது)
கருவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் உருளை கிழங்கை சுமாராக வேகவைத்து தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

வத்தல், கொத்தமல்லி விதை, முந்திரி பருப்பு இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம்பருப்பு,வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கி சிவந்ததும் தேங்காய் பாலில் அரைத்த மசாலா விழுதை போட்டு நன்கு கலக்கி உப்பு ,மஞ்சள் தூள் போட்டு கலக்கி தாளித்ததில் சேர்க்கவும்.

நன்கு மசாலா வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு உருளை கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறி அதிகம் கெட்டியாகாமல் புரட்டினாற் போல் இறக்கவும்.எண்ணெய் தெளிய இருக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்