அகனி கறி

தேதி: February 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மட்டன் - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
பச்சைமிளகாய் - 5
தயிர் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கருவா - ஒரு துண்டு
ஏலம் - 2
ரம்பை இலை - சிறிது
கசகசா - 3 தேக்கரண்டி
பாதம் - 5
பிஸ்தா - 5
முந்திரி - 5
எண்ணெய் - தாளிப்புக்கு
உப்பு - தேவையான அளவு


 

முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.அதில் சிறிது தாளிப்புக்கு எடுத்து வைக்கவும்.

பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிவைக்கவும்.

கறியை கழுவி அதில் 2 மேசைக்கரண்டி தயிர், 2 தேக்கரண்டி இஞ்சி, 2 தேக்கரண்டி பூண்டு,கீறிய பச்சைமிளகாய்,நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டிவைக்கவும்.

பாதம்,பிஸ்தாவை தோலை நீக்கி முந்திரி, கசகசாவுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம் போட்டு,பின் வெங்காயம்,கருவேப்பிலை,ரம்பை இலை போட்டு தாளித்து,தயிர்,இஞ்சி,பூண்டு போட்டு வதக்கவும்.

பின் கறியை போட்டு கிளறி உப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அரைத்தவற்றை தண்ணீரில் கலக்கி கறியுடன் சேர்த்து நன்கு வேகவிடவும். கறி நன்கு வெந்ததும் இறக்கவும்


இது சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு பீf கறி வடை எப்படி போடனும் தெரியது இன்னைக்கு என் விட்டுகாரருக்கு செய்யிது கொடுக்கனும் தயவு செய்து சொல்லுங்க நான் அமெரிக்கவில் இறிக்கிறோம் எங்கலுக்கு இது காலை 11;30 மணி நான் சயங்காலம் செய்வென் அதற்குள் சொல்லுங்கள்னும் தயவு செய்து சொல்லுங்க

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

கதீஜா மன்னிக்க வேண்டும்.

ஷமிம்.. பீஃப் வடை குறிப்பு - http://arusuvai.com/tamil/node/8036
அவசரம் என்றீர்கள். அதனால் இங்கே பதில் சொல்கிறேன். சந்தேகங்களை 'சந்தேகங்கள்' த்ரெட்ல, அல்லது அரட்டைல கேளுங்க. குறிப்புகளுக்குக் கீழே அவை தொடர்பான கருத்துகள், சந்தேகங்களை மட்டும் பதிவிட்டால் நல்லது.

‍- இமா க்றிஸ்

சொன்ன தற்கு மிக்க நன்றி தயவு செய்து என்னை மன்னிக்கவும்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

டியர் கதீஜா, அகனி என்றால் என்ன? மேலும் ரம்பாவை நன்றாக தெரியும். ஆனால் ரம்பை இலை! மண்டையை பிய்த்துக் கொள்வதற்க்குள் தயவு செய்து உதவி புரியவும். நன்றி.

ஹலோ மனோஹரி மேடம்
அகனி என்றால் எதனால் அந்த பேர் வந்தது என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த கறியை செய்தால் 2 நாள்வரை கெட்டு போகாமலிருக்கும் ஃப்ரிஜ்ஜில்வைக்க கூட தேவை இல்லை.

அப்புறம் ரம்பை இலை என்றால் இந்தியாவில் இருக்கு இது ஒரு செடி இதை நாம் சமைக்கும் அசைவ சமயலில் (தாளிப்புக்கு)சேர்த்துக்கொண்டால் மிகவும் வாசனையாக இருக்கும்.

இதற்க்கு உங்கள் ஊரில் என்ன பெயர் சொல்லி அழைப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை தாமதமாக பதில் அளித்ததற்க்கு மன்னிக்கவும்.

இந்த ரம்பை இலை காய்ந்து போனாலும் தாளிப்பில் சேர்க்கும் போது இதன் மணம் அப்படியே மாறாமல் இருக்கும். அதுதான் இந்த இலையோட ஸ்பெஷாலிட்டி.

நான் ஊரில் இருந்துவரும் போது கொண்டுவருவேன் நீங்கள் இனி இந்தியா போய்விட்டு வரும் போது வேண்டும் என்றால் அங்கே வாங்கி உபயோகித்துவிட்டு உங்கள் பதிலை சொல்லுங்க

திருமதி செய்யத், திருமதி ஷர்ஃபுதீன் அவர்களுக்கு விரைந்து வந்து உதவி புரிந்த உங்கள் இருவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
பிரிஞ்சி இலையைத் தவிர வேறோரு இலையை, நான் அறியேன் பராபரமே.

எப்படி இருக்கிறீர்கள் முதலில் ரொம்ப நன்றி இன்று என் வீட்டில் நீங்கள் கொடுத்த குறிப்பை பார்த்து கீரைப் பொரியல்(spinach) இறால் குடமிளகாய் வறுவல்,செய்தேன் எல்லாரும் நல்ல இருந்ததாக சொன்னார்கள் ரொம்ப நன்றி ....அப்புறம் அவர்கள் சொல்லும் ரம்பை இலை பிரிஞ்சி இலையைதான் மேடம்... நீங்கள் ரொம்ப குழம்பி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நலமாக இருக்கிறீர்களா?இந்த இலையின் பெயர் எங்கள் ஊர்பக்கம் டவுன் பான்டா இலை என்பார்கள்,இது பார்வைக்கு கற்றாழை இலை போல் இருக்கும் ஓண்றறை முழ நீளமாக இருக்கும் நெய்சோரு ,பிரியாணி,இறைச்சி தாலித்து செய்யப்படும் அணைத்து உணவுகளுக்கும் பொருத்தமாண வாசனையுடன் இருக்கும் பிரிஞ்சி இலை என்பது மூன்று விரல் அடக்கமான இலையாகத்தான் இருக்கும் அதுவல்ல இந்த இலை ,இது கிராமங்கலில் வீடுகலில் வளர்ப்பார்கள் பார்க்கவும் அழகாக இருக்கும்,ஃபிரான்ஸில் சில சைனீஸ்கடைகளில் ஃபிரெஷ்ஷ்சாக கிடைக்கிறது!

என்னது டவுன்பான்டான் இலையும் பிரிஞ்சி இலையும் ஒன்று இல்லையா அப்படி என்றால் பிரான்ஸில் என்ன பெரியரில் அது விற்கிறது தயவுசெய்து சொல்ல முடியுமா?paris storeல் டவுன்பான்டான் இலையைதான் பார்த்து இருக்கிறேன் பிரிஞ்சி இலை பார்த்தது இல்லை

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

சாரி மேடம் ஆர்வகோளாரில் ஏதோ தவறாக சொல்லிவிட்டேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நலமாக இருக்கிறீர்களா?பிரிஞ்சி இலையின் ஃபிரெஞ்சு பெயர்laurier இது அரப் கடைகளில் கூட கிடைக்கிறது.

வலைக்கும் ஸலாம்
நான் நன்றாக இருக்கிறேன் ....நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்...அப்படியா உடன் பதில் அளித்ததுக்கு ரொம்ப நன்றி நான் அரபு கடையில் பார்க்கிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இது நம் தமிழ் கடைகளில் இருக்கிறது காய்ந்த நிலையில் விற்க்கப்படும் எங்களுக்கு பிலால் கடை அருகே இருக்கிறது,அங்கு வாங்கிகொள்கிறோம்

நீங்கள் cergyயா பிலால் கடையில் அது இருக்கிறதா நல்லது நான் பார்க்கிறேன்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இஸ்லாமிய சமையலில், வாசனைக்கு சேர்க்கப்படும் ஒருவித இலையைத்தான் ரம்பை இலை என்கிறார்கள். எங்கள் ஊர்பக்கம் (நாகை, தஞ்சை மாவட்டம்) டவுன் பான்டா இலை என்று கூறுகின்றனர். 5 ரூபாய்க்கு 2 இலை கிடைக்கும். எல்லாக் கடைகளிலும் கிடைப்பதில்லை. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் நாகூர், காரைக்கால் போன்ற பகுதிகளில் இது கிடைக்கின்றது. அதைப் பார்த்திராதவர்களுக்காக அதன் படத்தை கீழே கொடுத்துள்ளோம்.

<img src="files/pictures/down_panta.jpg" alt="Down panta leaf" />

JANABA.SYED KATHEEJA WHAT IS THE KARUWA MINING.HOW TO THE CALL THE OTHER NAME IN TAMIL.PLEASE KENY SEND THE DETIALS,

அறுசுவை தேன் சுவை

நலமாக இருக்கிறீர்களா. கருவா என்றால் பட்டையை தான் கருவா என்பர்கள் ஆங்கிலத்தில் cinnamon stick என்பார்கள் .இது வாசனைக்காக சேர்க்கபடுவது.வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
நன்றி.

கவி நல்ல இருக்கீங்களா

ஆ கண்டுபிடிச்சி விட்டேன் டான் பண்டாவை இது வரை நான் இதை பயன் படுத்தியதில்லை.
ஜலீலா

Jaleelakamal

கவி நல்ல இருக்கீங்களா

ஆ கண்டுபிடிச்சி விட்டேன் டான் பண்டாவை இது வரை நான் இதை பயன் படுத்தியதில்லை.
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸாலமு அலைக்கும் ஜனாபா செய்யிது கதிஜா.அக்னிகறியில் கறிக்கு பதில் கோழிகறி சேர்க்கலாமா,அதை இரண்டுநாள் வைத்து சாப்பிடாலமா அல்லது பிரிட்ஜில் வைத்து சாப்பிடாலமா,

அறுசுவை தேன் சுவை

In US you get it too
PANDAN Leaves: http://thaifood.about.com/od/glossary/g/pandanleaf.htm

You will get it in Chinese/Asian Stores.

They make nice chicken wrap with this pandan leaves in Thai restaurants and it tastes good

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தாங்கள் கேட்ட கேள்விக்கு இப்பதான் என்னால் பதில் தர முடிந்தது என் நெட் ப்ராப்ளத்தால் உடனே உங்களுக்கு பதில் தரமுடியாததற்க்கு மன்னிக்கவும். கோழிகறியிலும் செய்யலாம் ஆனால் 2 நாள் வைத்திருக்க முடியாது. ப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடலாம் ஆனால் 1 நாளைக்கு பிறகு வேண்டாம். மட்டனில் செய்தால் பிரச்சனையில்லை. கோழிகறியிலும் இதே டேஸ்ட் கிடைக்கும். ஆனால் மட்டனில் செய்துவது தான் மிகவும் சுவையாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு உங்கள் பதிலை சொல்லுங்கள்.

அன்புடன் கதீஜா.

தாங்கள் பதில் தந்ததுக்கு மிக்க நன்றி, வஸ்ஸலாம்

அறுசுவை தேன் சுவை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) செய்யது கதீஜா இந்த அகனி கறிக்கு.தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பச்சை மிளகாய்,கசகசா, வெங்காயம் தாளிபுக்கு போக மீதி என்ன செய்ய வேண்டும்.செய்முறையில்.குறிப்பிடவில்லை,குறிப்பு, கசகசாவை எதனுடன் சேர்த்து அரைக்க வேண்டும்

அறுசுவை தேன் சுவை

அன்பு சகோதரர் சாகுல்ஹமீத் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
மீதமூள்ள சாமன்களை கறியுடன் சேர்த்து போடவும்...கசகசாவை மட்டும் முந்திரிபருப்புடன் அரைத்துவிடனும்அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)அன்பு சகோதரி மர்ழியாநூஹு தாங்கள் பதில் தந்ததுக்கு மிக்க நன்றி,அதே போல் செய்முறையில்லும் மாற்றம்செய்தால் மற்றவர்க்கும் பிரோயஜனமாகயிருக்கும், வஸ்ஸலாம்-அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

சகோதரரே வாலைக்குமுஸ்ஸலாம்...
நீங்கள் சொல்லுஅது சரிதான்..தற்சமயம் என் தோழி கதீஜா உடநிலை குறைவாக இருக்கிறாள்..அவள் வந்து சரிப்பண்ணித்தருவாள்..அதை அவள்தான் பண்ண வேண்டும்..என்னால் சரி பண்ணமுடியாது..அவள் சரிப்பண்ண தாமதம் ஆளால் அவள் ஐடியை நான் யூஸ் பண்னி உங்களுக்கு கிலியேர் பண்னித்தருகிறேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியாவின் ஐடியிலிருந்து ஸ்பைவேர்&வைரஸ் வந்தவன்னம் உள்ளது...உங்கள் ஐடியிலிருந்து விளையாடுகிரார்கள் யாரோ என்று நினைக்கிறேன்...நமது கான்டேக்ட் லிஸ்டிலுள்ளவர்களே சந்தேகத்திற்கிடமான லின்கை அனுப்பினால் க்லிக் செய்யாதீர்கள்

என்ன சொல்லுறீங்க தளிகா எனக்கு ஒன்னும் புரியல..டிடைல் பிளீஸ்பா...வைரஸ் க்காக ஹெட்டிங்கில் வைரஸ் மர்ழியான்னு அனுப்புறது ரொம்ப டூ மச் தளிகா எனக்கு ஹெட்டிங்கை பார்த்ததும் ஒரே சிரிப்பு.....நல்ல வேலை சிஸ்டமை ஆப் பண்ண இருந்தேன் பதில் தாங்கப்பா..விளக்கம் தெரிஞ்சால்தான் எனக்கு நிம்மதி வரும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

வலைக்குமுஸ்ஸலாம். நீங்கள் கேட்டதுக்கு உடனே என்னால் பதில் தர முடியவில்லை மன்னிக்கவும். எனது தோழி மர்ழியா சொன்னது போல செய்யனும். நீங்கள் சொன்னது போல நான் குறிப்பை எடிட் பண்ணிவிட்டேன் பார்க்கவும். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

அன்புடன் கதீஜா.

கறியை கழுவி அதில் 2 மேசைக்கரண்டி தயிர், 2 தேக்கரண்டி இஞ்சி, 2 தேக்கரண்டி பூண்டு,கீறிய பச்சைமிளகாய்,நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டிவைக்கவும்
1,(குறிப்பு) இவைகளை எத்தனை நிமிடம் உர வைக்க வேண்டும்,

அறுசுவை தேன் சுவை

கறியை கழுவி அதில் 2 மேசைக்கரண்டி தயிர், 2 தேக்கரண்டி இஞ்சி, 2 தேக்கரண்டி பூண்டு,கீறிய பச்சைமிளகாய்,நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டிவைக்கவும். அப்படி என்றால் எல்லாவற்றையும் கறியில் சேர்த்துவைத்துவிட்டு அதன் பிறகு தாளிக்கனும்.ஊறவைக்க தேவையில்லை. மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)செய்யது கதீஜா,
பதில் தந்ததுக்கு மிக்க நன்றி.
அதேபோல் தாங்கள் தந்த அனைத்து ரெசிபிகளில் தேவையான பொருட்களில் குறிப்பிட்டதை செய்முறையில் குறிப்பிடவில்லை,
ஆகவே மற்றவைகளும் சரி செய்யவும்-வஸ்ஸலாம் அன்புடன் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

வலைக்குமுஸ்ஸலாம் நான் கொடுத்த ரெசிபிகளில் எந்த ரெசிபியில் நான் செய்முறையில் கொடுக்கவில்லை என்று சொல்லவும் நான் கொடுக்கும் ரெசிபில் யாருக்கும் குழப்பம் வந்துடக்கூடாது என்று நான் கவனமாகத்தான் கொடுப்பேன் சில சமயம் என் பையன் அருகில் இருந்து அநியாயம் பண்ணிட்டு இருப்பான் அந்த சமயத்தில் ஏதாவது நான் தவறுதலாக அனுப்பி இருக்கலாம் இனி நான் கவனமாக குறிப்புகளை அனுப்புகிறேன்.

அன்புடன் கதீஜா.

இன்ஷாஅல்லாஹ் நானும் ரெசிபிகளை பார்த்தால் தங்களுக்கு தெரியபடுத்துகிறேன் வஸ்ஸலாம்
அன்புடன் சகோதரர் ஷாஹுல் ஹமீத்

அறுசுவை தேன் சுவை

அக்னி கறி

கதிஜா மேலே குறிப்பிட்டதில் தயிர் 4 மேசை கரண்டி.
அதில் இரண்டு மேசை கரண்டி தான் கறியில் போட்டு கலக்க சொல்லி இருக்கிறீர்கள் மீதியை எப்ப போடனும் தாளிக்கும்போதா?

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா எப்படி இருக்கீங்க.பசங்க நலமா. ஸாரி அக்கா நீங்க சொன்ன பிறகு நேற்று நான் பர்த்தேன் எல்லாம் சரியாகத்தானே இருக்குன்னு எடிட் பண்ணலை இப்ப நீங்க தயிர் பற்றி கேட்டதும் புரிந்தது சரி செய்துட்டேன்.ஏதாவது என் குறிப்பில் தவறு இருந்தால் அந்த குறிப்பிலேயே சொல்லிடுங்க நான் சரி செய்ய ஈஸியாக இருக்கும்.

அன்புடன் கதீஜா.

hai katheeja assalamu alikum .your native place kayalpatnam.

ஆஹா சகோதரரே இது சரி இல்லையாக்கும்........
நாம் அல்லாஹ்க்காக நோம்பு வைக்கனும் வாடா,கஞ்சிக்காவா?என்ன ஒரு அருமையான எதிர்பார்ப்பு...இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் படத்துடன் தருகிறேன்..நான் கை பக்குவத்தில்தான் பண்ணுவேன் இனிதான் யோசிக்கனும் எவ்லோ அளவுன்னு உங்களுக்கு தரனுமே அதான்அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆய் என் ஊர் ரம்பை அருமையாக போட்டோக்கு போஸ் கொடுத்து இருக்கே....ஏய் ரம்பை நீ ரொம்ப அழகா இருக்கே/
ஊரில் இருந்து வரும்போது இதையும் கைய்யோடு எடுத்து வருவேன்..ரம்பை இல்லைனா எனக்கு ஒன்னு ஓடாது..அவ்லோ லிங்க் எனக்கும் அதுக்கும்
என் ஆருயிர் தோழி
கதீஜா,நம் ஊரின் சமயலை அனைவருக்கும் எத்திவைக்கும் உனக்கு என் பாராட்டுகளும்,துஆவும்...

...அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனது அன்பான அருசுவை வாசக்கர்களுக்கு,இது எனக்கு வந்த ஒரு mail , உக்களுக்கு இது(information) பயன்னுள்ளதாக இருக்கும்.
அன்புடன்,
கமலி

With love,
Kamali

Dear மனோஹரி!
ரம்பை இலை என்பதை நாங்கள் வாச இலை என்றும் சோற்று இலை என்றும் சொல்வோம். இரண்டு விரல் அகலத்தில் சுமார் ஒரு முழம் நீளத்தில் டார்க் பச்சை நிறத்தில் ஒருவித குளுமையான வாசனையுடன் இருக்கும். பூமியிலிருந்து (செடிபோல் அல்லாமல்) அப்படியே கொத்தாக முளைக்கும். கறி தாளிப்பதற்கும் புலாவ் சோறு தாளிப்பதற்கும் இதை பயன்படுத்துவார்கள். திருமண விருந்துக்காக தயார் செய்யும் உணவில் கண்டிப்பாக இந்த இலை பயன்படுத்தப்படும். இங்குள்ள சிலோன்காரர்கள்தான் அதை ரம்பை இலை என்பார்கள். அதனால்தான் அதன் பெயர் இப்படியும் உள்ளது என்று புரிந்தது. ஒருவேளை செய்யத் கதீஜா சிலோனைச் சேர்ந்தவர்களோ?